அஜித் பற்றி நான் படித்து ரசித்தது!
2025-இல் எனது முதல் பதிவே, “Be Like Ajith” என்பதுதான். அதுபற்றி குறிப்பில் சொல்கிறேன். இப்போது சொல்ல வருவது. நேற்று நடந்த ஒன்றைப்பற்றி.
நேற்று நண்பர் குடும்பத்தோடு வெளியே சென்றிருக்கையில், பிரபலங்களின் வாழ்க்கை + தத்துவம் பற்றியா பேச்சு வந்தது.
“எல்லா மனுஷனுக்கும் பணம், புகழ்தான் ரொம்ப முக்கியம்..அத நோக்கித்தான் எல்லாருமே ஓடறோம்..!”
“இருக்கலாம்…ஆனா அப்படி பணம், புகழ் இதெல்லாம் அடைஞ்சவங்க தங்களோட கடைசி காலத்துல சொன்னது என்ன தெரியுமா..?”
“என்ன…?”
“ஆப்பிள் CEO ஸ்டீவ் ஜாப்ஸ், பார்க்காத பணமும் புகழுமா..? ஆனா கேன்சர் வந்து கடைசி காலகட்டத்துல சாகறப்போ அவர் சொன்னது – பணம், புகழ், பிரபல்யம் இதெல்லாம் இருக்கட்டும்..ஆனால் உறவினர்களை, சொந்தங்களை இழந்துவிடாதீர்கள். அவர்களோடு நேரம் செலவழியுங்கள்…”
“கரெக்ட்..!”
“ஜாக்கிசான் பார்க்காத பணமும் ரசிகர் கூட்டமுமா..? அவருக்கில்லாத புகழா..? அவர் இப்போ சமீபத்துல சொன்னது – பணம், புகழ், பிரபல்யம் இதெல்லாம் இருக்கட்டும்..ஆனால், நிறைய பயணம் செய்யுங்கள்..உலக அனுபவங்களை இழந்துவிடாதீர்கள்.!”
“ஆமால்ல..!’
“இருந்தாலும், இவங்க எல்லாரும் ஆடி ஓடி சம்பாதிச்சுட்டு, புகழ், பணம்னு சாதனை எல்லாம் பண்ணி முடிச்சுட்டு..அப்புறமாதானே சொல்றாங்க..? அவங்ககிட்ட பணம் இருக்கு..சொல்ல முடியுது..! சாதாரண மனுஷனால முடியுமா..?”
இதுவுமொரு Valid பாயிண்ட்.
ஆக, கடைசி வரை ஏதாவது ஒன்றை இழந்து, ஏதாவது ஒன்றை அடைவதற்கான போராட்டம்தான் வாழ்க்கை. Nobody is Satisfied.
அஜீத் என்னும் ஒருவரைத் தவிர.
தனக்குப்பிடித்த சினிமாவில், பெரிய ஸ்டாராக இருக்கிறார். அதிலேயே நிறைய சம்பாதிக்கிறார். – பணம், புகழ், பிரபல்யம் ஆகியவை Satisfied.
தான் நேசிக்கும் கார் ரேஸில் கலந்து கொண்டு வெற்றிகள் குவிக்கிறார். அதிலேயே நேரம் செலவிடுகிறார். சினிமாவையும் கார் ரேஸையும் ரசனையோடு இணைக்கிறார். – கனவு, புகழ், லட்சியம் ஆகியவை Satisfied.
ஜெட்பிளேன் ஓட்ட, துப்பாக்கி சுட, ட்ரொன் பயிற்சி என்று புதிதுபுதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டே இருக்கிறார். – ஆசை, பயிற்சி, கற்றுக்கொள்ளுதல் ஆகியவை Satisfied.
இன்னொரு பிடித்த விஷயமான பைக் பயணம், லாங்ட்ரிப், ட்ரெக்கிங் என்று நிறைய ஊர்சுற்றுகிறார். – பயணம், ஆசை, அனுபவம் ஆகியவை Satisfied.
குடும்பத்தோடு கோவிலுக்குப் போகிறார். மனைவி ஷாலினி காலில் விழுந்து ஆசி வாங்கும்போது, “வீட்டுக்குப் போயி நான் இவ கால்ல விழணும்..!” என்று புரோகிதரிடம் நையாண்டி பண்ணுகிறார். தான் கார் ரேஸிங் வெற்றிகளில் குடும்பமே கூட இருப்பதை உறுதிப்படுத்துகிறார். – குடும்பம், காதல், அன்பு ஆகியவை Satisfied.
மகனின் கால்பந்தாட்ட போட்டிகளில், கம்பிக்கு வெளியே பயிற்சியாளரோடு உட்கார்ந்து ரசிக்கிறார், அவனுக்கு ட்ரோன் பிளேன் சொல்லித்தருகிறார். மகளின் படிப்பிடத்தில் சரியான நேரத்துக்கு ஆஜராகிறார். – பிள்ளைகளின் வளர்ச்சி, நேரம் செலவிடுதல் – ஆகியவை Satisfied.
தனக்கான ஒவ்வொரு 24 மணி நேரத்தையும், தனக்காகவே செலவிடுகிறார்.
பேச்சு குறைவு.
செயல், அதைவிட குறைவு.
ஆனால் செய்யப்படும் செயல் யாவும்,
தனக்குப்பிடித்தமாதிரி இருந்தால் மட்டுமே செய்கிறார்.
சினிமாவில், “The Complete Actor” என்று மோகன்லாலை சொல்வார்கள். ஆனால் அதே சினிமாவில், ஏன் நிஜவாழ்க்கையிலேயுமே கூட, “The Complete Man” என்றால், அதற்கு கனகச்சிதப் பொருத்தம் –
அஜீத்குமார்.
குறிப்பு:
இப்போது அந்த 2025ன் முதல் பதிவுக்கு வருவோம். அந்த வார்த்தைகள் இப்போதல்ல, 2026, 2027, 2028, 29…..எப்போது வேண்டுமானாலும் நமக்குப் பொருந்தும்.
புத்தாண்டை விடுங்கள், அது வருடாவருடம் வரும். அதில் நாமெப்படி வாழ்கிறோம், வாழ்வை எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும், என்பதுதான் கேள்வி. என்னளவில் அது எப்படியிருக்கவேண்டுமென்று அவர் பாஷையில் சொல்வதானால்,
“என் வாழ்க்கையின்
ஒவ்வொரு நாளும்..
ஒவ்வொரு மணி நேரமும்,
ஏன்
ஒவ்வொரு நொடியும்,
நானா செதுக்குனது டா.!!!!”
அதற்காகவாவது,
Be like Ajith..!
உபகுறிப்பு:
Negitivity Spread பண்ணும் கூட்டம் எப்போதும் இருக்கத்தான் செய்யும். அவர் ரசிகர்களை கண்டுகொள்வதில்லை, அடுத்தவர் சாவுக்கு போவதில்லை, சுயநலவாதி, அப்புறம் தற்போது கரூர் விஷயத்தில் கொடுத்த கருத்து, இப்படியென்று ஏதேனும் வசைபாட ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்.
Never Mind.
மற்றபடி அறிவார்ந்தோர், எப்படி வாழவேண்டுமென்று அறிந்தோர், உணர்வர். இதில் சொல்லவருகிற விஷயம் என்னவென்று.!
அது.!!!!!
Writer Charithraa’s





