ஒரு மனுஷனோட புகைப்படம் இன்று இணையமெங்கும் நிறைந்திருக்கிறது.
அவரது கட்சிக்காரர்களைத் தாண்டி மாற்றுக் கட்சியினரும் ,
அவரது மதத்ததைத் தாண்டி மாற்று மதத்தினரும், அவரது ரசிகர்களைத் தாண்டி பிற சினிமா நாயகர்களின் ரசிகர்களும் என்று பாகுபாடுகள் கடந்து பெரும்பாலான மக்களின் மனதில் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த மாமனிதன்.
இவர் கைகள் அன்னமிட்டு சிவந்த கைகள்.
இவரது பிறப்பு கர்ணனின் மறுபிறப்பு.
கலியுகத்தில் வாழ்ந்து மறைந்த கர்ணன் என்று எல்லோராலும் போற்றப்படும் மனித தெய்வம் மறைந்த நாள் இன்று.
இரண்டாடுகள் ஆகியும் கூட இன்றளவும் இவரை நினைத்து வருந்தாத மனமில்லை.
ஒவ்வொரு முறையும் இவரது முகத்தைப் படங்களில் பார்க்கும் போதும், இவரது குரலைக் கேட்கும் போதும் இவரைப் பற்றிய நினைவலைகள் முள்ளாய் மாறிக் குத்துகிறது என்பதைத் தாண்டி, திரையிலாவது இந்த முகத்தை நாம் காண முடிகிறது என்ற சிறிய ஆறுதல் இருக்கத்தான் செய்கிறது.
ஒரு மனிதனின் சமாதியே கோவிலாக மதிக்கப்படும் வழக்கம் மிகக் குறைந்த அளவிலான தெய்வங்களுக்கு மட்டுமே இருந்து வந்த நிலையில், இன்று இவரது சமாதியும் கூட கோவில் போல மக்களால் வணங்கப்படுவது, இவரது மீதான மக்களின் அன்பைக் காட்டுகிறது.
வித்தியாசம் என்னவென்றால் இவரது கோவிலில் எல்லா மத மக்களும் வந்து வழிபடுகிறார்கள்.
நம்மை விட்டு மறைந்த நமது கலியுகக் கர்ணனுக்கு நமது நினைவஞ்சலி.





