வரவு எட்டனா, செலவு பத்தனா அதிகம் ரெண்டனா , கடைசியில் குந்தனா குந்தனா குந்தனா!
அப்படின்னு ஒரு பாடல் உண்டு.
வரவை மீறிய செலவு நம்மை துயரத்தில் ஆழ்த்தும் என்பதை நகைச்சுவையாக சொன்ன பாடல் அது.
வரவை மீறிய குறைந்தபட்ச செலவுக்கே இந்த கதி என்றால், கணக்கில்லாமல் செய்யப்படும் செலவும், திட்டமிடாமல் இயங்கும் நிர்வாகமும் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் உணர வேண்டும்.
மாதம் ஆயிரம் ரூபாய் என்ற ரீதியிலான மகளிர் உரமைத் தொகையே இங்கு பலராலும் பலவிதத்திலும் விமர்சிக்கப்படும் நிலையில், மாதம் பத்தாயிரம் ரூபாய் கருணைத் தொகை தருவதாக வாக்குறுதி அளிப்பது எந்த விதத்தில் சரியாகும்?
தோராயமாக 2.25 கோடி ரேஷன் கார்டுகள் உள்ள இந்த மாநிலத்தில், மாதம் பத்தாயிரம் என்பது, மாதம் இருபத்து இரண்டாயிரத்து ஐந்நூறு கோடி செலவு.
ஆண்டுக்கு இரண்டு லட்சத்து இருபத்து ஐந்தாயிரம் கோடி.
வழக்கமாக நமது மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட் 3.5 முதல் 3.75 லட்சம் கோடி ரூபாய்க்கு தான் போடப்படுகிறது.
ஒப்பிடும் போது இந்த ஒரு நலத்திட்ட உதவிக்கே ஒரு தனி பட்ஜெட் போட வேண்டும்
அதாவது இப்போது போடப்படும் பட்ஜெட்டில் முக்கால்வாசி பணம்.
தேர்தலில் வெற்றி பெற , பதவியில் அமர தவழ்ந்து வந்து காலில் விழுவது ஒரு வழி என்றால் இந்தமாதிரியான போரி வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பது இன்னொரு ரகம..
தேர்தலில் வெற்றி பெற , பதவியில் அமர தவழ்ந்து வந்து காலில் விழுவது ஒரு வழி என்றால் இந்தமாதிரியான போலி வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பது இன்னொரு ரகம்.
இன்னொரு விஷயம் . உரிமைத் தொகை என்ற வார்த்தை மகளிர் வீட்டு வேலை செய்து வீட்டை நிர்வகிப்பதால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணம்.
அதென்ன கருணைத் தொகை?
இங்க யாரு வந்து யாருக்கு கருணை காட்டுவது?
மக்கள் கருணை காட்டினால்தான் இவர்கள் ஆட்சியிலேயே அமர முடியும்.
பத்தாயிரம் ரூபாய் வழங்குவது கஜானாவை திவாலாக்கும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
மக்களை சோம்பேறிகளாக்கும் என்பதை உணராமல் எப்படி இப்படியான வாக்குறுதிகளை அளிப்பார்கள்?
பத்தாயிரம் பணம் சும்மா கிடைத்தால் , அது பொருளாதாரத்தை இன்னொரு விதத்தில் பாதிக்கும் என்பது ஏன் விளங்காமல் போனது?
நூறு நாள் வேலைத்திட்டம் இருப்பதாலேயே விவசாயக் கூலிக்கு ஆள் கிடைக்கவில்லை என்ற புகார் பரவலாக உள்ளது.
அப்படியிருக்க மாதம் பத்தாயிரம் தரப்பட்டால்?
எப்படியாவது எதையாவது சொல்லி வெல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்சி எப்படி இருக்கும்?
சிந்திப்போம். நமக்குத் தரப்படுவது தூண்டில் புழுவா என்பதை ஆராய்வோம்.


