Categories
நினைவுகள்

கல்வித் தந்தை, கர்ம வீரர்!

ஜூலை 15, கல்வி நாள். நமது அருமை மாநிலத்திற்குக் கல்விக் கண் திறந்த கர்ம வீரர், கல்வித் தந்தை, படிக்காத மாமேதை ஐயா திரு.காமராஜரின் அவர்கள் பிறந்தநாள். பொற்கால ஆட்சி என்று இன்றுவரை போற்றப்படும் நல்லாட்சியைத் தந்த உத்தமர். கிங் மேக்கர் என்று இன்றளவும் அழைக்கப்படக்காரணம், நேரு அவர்கள் நோயுற்ற தருணத்தில் இருந்த போது இந்தியாவில் ஜனநாயகம் அவ்வளவு தான் என்று வெளிநாட்டினர் நினைத்த போது, காங்கிரஸ் கட்சியை சீராக வழிநடத்தி சாஸ்திரி, இந்திரா காந்தி என […]

Categories
அரசியல் கருத்து சினிமா தற்கால நிகழ்வுகள்

மௌனம் பேசுமா?

சமுதாய அக்கறையும் பொறுப்பும் உள்ள ஆட்கள், எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மிகப் பிரபலமான ஆட்கள், நேரத்திற்கு ஏற்றாற் போல, வேடமிட்டால் அது அவர்ளின் மீதான மரியாதையை காலி செய்து விடும். கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவல்துறையினரால், விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பல நடிகர்களும் எந்த விதக் கருத்தும் தெரிவிக்காதது சமூக வலைதளங்களில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் சாத்தான்குளத்தில் தந்தையும் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

என்னா குமாரு இதெல்லாம்?

ஓவ்வொரு முறையும் அரசுத் தேர்வுகள் நிகழும் போது, அதுவும் குறிப்பாக Group 4 தேர்வு நிகழும் போது பல சுவாரஸ்யங்கள் நிகழ்வது வழக்கமாகிப் போனது. மணமேடையிலருந்தவாறே, மாலையும் கழுத்துமாக வந்து தேர்வு எழுதுவது, பாட்டிக்கு காரியம் செய்து விட்டு அஸ்தியோடு வந்து தேர்வு எழுதுவது என்று பல வத்தியாசமான வேடிக்கைகளைப் பார்க்க இயலும். 3000 பதவிக்கு, 18 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள். குறிப்பாக இந்த கழுத்தில் மாலையோடு தேர்வு எழுதியவர்கள், அஸ்தியோடு தேர்வு எழுதியவர்கள் எல்லாம் […]

Categories
கருத்து குட்டி கதை

புத்திசாலி நீதிபதி

படித்ததில் பிடித்தது. கொஞ்சம் காமடி.. கொஞ்சம் கருத்து. ”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ். “எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி. ஜட்ஜூக்கு சுருக்கென்றது. பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ். ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை

சமீப காலங்களில் மிகப்பெரிய கொள்ளை, பகல் கொள்ளை எது என்றால், அது தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் தான். 3-3.5 வயது நிரம்பிய பிள்ளைகள் LKG படிப்பதற்கு சில ஆயிரங்கள் முதல் சில லட்சங்கள் வரை கட்டணமாகப் பெறுவதும், அதை மறுப்புத் தெரிவிக்க முடியாமல் பெற்றோர்கள் கட்டுவதும் வழக்கமாகிப் போனது. சமீபத்தில் இணையத்தில் கிடைத்த ஒரு பள்ளியின் LKG வகுப்பிற்கான கட்டண ரசீதைக் கண்டு மிரண்டு போனேன். அதைப்பற்றி சிறிது விளக்கமாக எழுதி எனது ஆதங்கத்தைத் தீர்த்துக் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

அன்பான அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

மாதா பிதா குரு தெய்வம். ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் சிறப்பாக அமைய தெய்வத்தை விட இன்றியமையாதவர்கள் ஆசரியர்கள். குரு என்பவருக்கு அத்தகைய மரியாதையும் இருந்தது என்பது உண்மை தான். குருவுக்காக விரலை வெட்டிக் கொடுத்த கதை, குரு சாபமிட்டு வித்தை மறந்து உயிரிழந்த கதை எல்லாம் படித்தவர்கள் தான் நாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் குரு என்பவருக்கு அத்தகைய மரியாதை இருக்கிறதா என்றால் சிறிய கேள்விக்குறி தான். தனியார் பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் தங்கள் கடமையை […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள் மறைவு

கரைந்து போன கனவுகள்

எதிர்பாராமல் கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வெட்டுவது போல விபத்துகள் நிகழ்ந்து மிகப்பெரிய பாதிப்பையும் துயரத்தையும் உருவாக்கி விட்டுச் செல்வது தவிர்க்க இயலாத ஒன்றுதான். ஆனால் சில மனிதர்களின் அலட்சியத்தால் விபத்துகள் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச்சார்ந்த அக்காளும் தம்பியும் துடிதுடித்து இறந்து போவது என்பது மனதைத் துளைத்து விடும் தோட்டாக்கள் போன்றது. கடலூரில் பள்ளி வேனின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது என்பதில் பலரும் பலவிதமான கருத்துகளையும், செய்திகளையும் சொன்னாலும் கூட, நம் யாராலும் அந்த இழப்பை […]

Categories
சினிமா

3 BHK- திரை விமர்சனம்

கல்யாணம் பண்ணிப் பார், வீட்டையும் கட்டிப் பார் என்று நம்மூரில் ஒரு சொலவடை உண்டு. அதற்குக் காரணம் இந்த இரண்டு விஷயங்களையும் செய்து முடிக்க நாம் படும் அவஸ்தைகளும் மெனக்கெடல்களும் தான். அப்படி இதில் இரண்டாவதாக சொல்லப்பட்ட வீடு என்ற விஷயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் 3 BHK. இதில் மையக்கரு வீடு என்றாலும் படத்தில் குடும்பத்திற்கான அத்தனை விஷயங்களும் உள்ளடங்கியிருப்பது மிகச்சிறப்பான விஷயம் இது படத்தை நமக்கு மிக அருமையான படமாக உணர்த்துவதற்கு காரணமாக […]

Categories
நினைவுகள் மறைவு

குருவின் பாதங்களுக்குக் கண்ணீர் அஞ்சலி

மாதா, பிதா, குரு, தெய்வம். ஒரு மனிதனுக்கு தெய்வம் துணை நிற்காவிட்டாலும், மாதா, பிதா மற்றும் குரு ஆகியோர் ஒருபோதும் கைவிடுவதில்லை. சொல்லப்போனால் பலரது வாழ்வில் பல நேரங்களில் இந்த மூவரும் தான் தெய்வமாக நின்று வாழ்வைச் சிறப்பிப்பவர்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பின் போது போதித்த ஆசிரியர்கள் அனைவரும் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் தான். அதிலும் பாடம் மட்டும் நடத்தாமல் சற்றுக் கூடுதலாக மாணவர்கள் மீது அக்கறை கொண்டு நெருங்கிப் […]

Categories
சினிமா

பறந்து போ- திரை விமர்சனம்

சில படங்கள் அழகு, சில படங்கள் கவிதை, சில படங்கள் இழுவை, சில படங்கள் உணர்ச்சி , சில படங்கள் மகிழ்ச்சி. இந்தப்படம் இத்தனையும் கலந்த கலவை. கற்றது தமிழ், பேரன்பு போன்ற கனமான படங்களைத் தந்த இயக்குனர் ராம், இலகுவான மகிழ்ச்சி மட்டுமே நிறைந்த ஒரு படத்தைத் தந்திருப்பது சுகம். ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான உறவு.தந்தை மகனை வளர்ப்பது, மகன் தந்தையை வளர்ப்பது என்ற அன்புப் பரிமாற்றத்தைப் பற்றிய படம். நமது காலங்களில் தந்தை […]