Categories
சினிமா நினைவுகள்

தொலைந்து போன மகிழ்ச்சி

சர்க்கஸ் என்றாலே நம்மில் பெரும்பாலானோர்க்கு ஜெமினி சர்க்கஸ் தான் ஞாபகத்திற்கு வரும். சிங்கம் புலி யானை கரடி எல்லாம் வைத்து, மிகப் பெரிய அளவில் பிராம்மாண்டமாக நிகழும் சர்க்கஸ் அது. நகராட்சி, மாநகராட்சிகளில் அது போன்ற சர்க்கஸ் காட்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் சிற்றூர்களில், கிராமங்களில், சிறிய அளவிலான சர்க்கஸ்கள் நிகழும். புதன், வியாழக்கிழமைகளில் துவங்கி, ஞாயிற்றுக்கிழமைகளில் முடிந்துவிடும். கூட்டம் இருந்தால் ஓரிரு நாட்கள் தொடரும். ஊரில் உள்ள சின்ன சின்ன பொட்டல்களில் கூடாரம் அமைத்து, மரப்பலகையிலான […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

வழக்கொழிந்த ஒழுக்கம்!

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இப்படி உயிரைக்காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேணிக்காக்கப்பட்ட ஒழுக்கமானது, தலைமுறைகள் தாண்ட, கலாச்சாரங்கள் சிறிது மாற, அதிலே காணாமல் போகிறது. 90 முதல் 2000 கால கட்டங்களில் , பள்ளிக்கு ஒழுங்கான சிகை அலங்காரத்தோடு செல்லாவிட்டாலே அடிதான். அடித்த கையோடு வீட்டுக்கு அனுப்பி சிகைமுடியை வெட்டி வரச்செய்வார்கள். வீட்டிற்குச் சென்றால், “நான்தான் முன்னாடியே சொன்னேன்ல, இன்னைக்குப் படிப்புப் போச்சா?“ என்று சொல்லி அங்கே இரண்டு அடி விழும். […]

Categories
கருத்து குட்டி கதை நினைவுகள்

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை என்பதை நாம் அதிகமுறை கடந்து வந்திருப்போம்.அந்த சொல்லாடல் ஆனது ஏமாற்றுக்காரர்களை உருவகப்படுத்துவதற்காக சொல்லப்படும் சொல்லாடலாகவே இன்றளவும் இருநரது வருகிறது. அதாவது, இவன் சரியான திருடனா இருக்கானே, முழுப்பூசணிக்காயல்ல சோத்துல மறைக்கப் பாக்குறான் என்ற ரீதியில் தான் நாம் அதை அதிக முறை கேட்டிருப்போம். ஆனால் உண்மை அதுவல்ல. இது முற்றிலும் தவறானது. சரி, முழு பூசணிக்காய் சோத்துல மறைப்பது என்னவென்று இந்தக்கதையில் பார்க்கலாம். சிறிது காலத்திற்கு முன்பு ஒரு கிராமத்தில் […]

Categories
சிறுதுணுக்கு தகவல் நினைவுகள்

The kiss of life.

1967 ம், ஆண்டு எடுக்கப் பட்ட “The Kiss of Life.” என பெயரிடப் பட்ட புகைப்படமே இது, ராண்டல் மற்றும் தொம்சன் ஆகிய இருவரும், வழமையான எலேக்ரிசிட்டி பவர் கேபிள் மீது சீர்திருத்தம் செய்து கொண்டிருந்த போது, திடீர் என, ராண்டல் உடல் மின்சாரத்தினால் தாக்கப்பட்டு அடுத்த வினாடியே, அந்த வயர்களில் சிக்குண்டு நினைவிழந்து போகிறார். அவர் கீழே, விழாமல் தாங்கிப் பிடித்த தொம்சன், செயற்கை சுவாசம் கொடுக்கும் போது எடுக்கப் பட்ட படமே இது […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

காவல்துறை யார் நண்பன்?

நமக்கு எதுக்குப்பா வம்பு என்று சாமானியர்கள் பலரும், பலவற்றை சகித்துக் கொண்டு தங்களது ஆத்திரத்தையும், கோபத்தையும் அடக்கிக் கொண்டு இருக்குமிடம் தெரியாமல் வாழ்வதற்குக் காரணம், இந்த அமைப்பின் மீதான அதீத பயம் தான். காவல்துறை உங்கள் நண்பன் வாசகம் இங்கே யாருக்குப் பொருத்தம் என்பது தான் முதல் கேள்வி. விடை தெரியாத கேள்வி. காவல்துறை என்றால் ஒட்டுமொத்த காவல்துறையும் தங்களது வேலையைச் செய்யவில்லை அல்லது அனைத்து காவலர்களும் தவறானவர்கள் என்று சித்தரிப்பது நமது நோக்கமல்ல. காவல்துறையில் பணிபுரியும் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

பெண் பிள்ளைகளைப் பெற்றோரே!

அலட்சியத்தாலும், ஆறுதல் சொல்லி சொல்லி அரைகுறையாக கவனிக்காமல் விட்டதாலும் துடிதுடித்துப் போயிருக்கிறது இளம்பெண்ணின் உயிர். நாம் அனைவரும் கேள்விப்படும் அவிநாசி இளம்பெண் தற்கொலை பற்றியது தான் இந்தப் பதிவு. பொதுவாகவே ஒரு பெண் திருமணமாகி மாமியார் வீட்டுக்குச் செல்லும் போது ஆரம்ப காலங்களில் அந்தப் பெண்ணுக்கு அந்த இடம் ஒத்து வராமல், சில பிரச்சினைகள் வருவது இயல்பு தான். அதைத் தன் பெற்றோரிடம் தெரிவித்தால், அவர்கள் சொல்லும் வார்த்தை.“அது அப்படித் தானம்மா.கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகி விடும் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

ஏங்ங்ங்ங்க கொஞ்சம் திருந்துங்க!!

நாம் எந்த அளவிற்கு சுய சிந்தனையோடு வாழ்கிறோம்? எந்த அளவிற்கு சமூக ஊடக இன்ப்ளூயன்சர்களால், ( தனக்கான பரத்யேகமான செல்வாக்கை உருவாக்கியவர்கள்) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளோம் என்பதை மீண்டும் இந்த கூமாப்பட்டி விஷயம் நமக்கு நிரூபித்து விட்டது. விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை வாங்கி சட்டத்திற்குப் புறம்பான வேகத்தில் ஓட்டுபவனைத் தலைவன் என்று கொண்டாடியது நமது இளைய சமுதாயம். அதில் எத்தனை பேரின் தந்தை, ஓட்டுநர்கள் அன்றாடம் தமது உயிரைப்பணயம் வைத்து வாழ்வாதாரத்தைத் தேடுபவர்கள் என்பது தெரியவில்லை. எதற்காக ஒருவர் பிரபலமாகிறார் […]

Categories
கருத்து

வாழ நினைத்தால் வாழலாம்.

எதுவுமே இல்லாத வாழ்க்கை. திசை தெரியாத படகு போல தான். நட்ட நடு கடலில் திசை தெரியாமல் நிற்பவன் துடுப்பிட்டும் பிரயோஜனம் என்னவோ? அவ்வளவு தான்… முடிந்தது… யாராவது வந்து திசை காட்டிவிட்டாலொழிய வாழ வழியில்லை. கடல் தேவதைகளோ கடவுளோ வருவார், நம்மைக் காப்பார் என்ற சிந்தனை மகா மூடத்தனம். திசைகாட்டியாகவோ, வழிகாட்டியாகவோ வருவதன்னவோ மனிதனோ மற்ற பிற சாதாரண உயிரினங்களோ தான். சூரியனைக் கண்டு திசையைப் பிடிக்கலாம். நீரோட்டத்தைக் கண்டு திசையைப் பிடிக்கலாம். மீன்களின் ஓட்டம் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

இலவச போலி உபதேசங்கள்

இன்று சமூக ஊடக இடுகை ஒன்றைப் பார்த்தேன். சமூக ஊடக இட்டுகை என்பது சோசியல் மீடியா போஸ்ட், தமிழ் மாநாட்டில் சமீபத்தில் 25 க்கும் மேற்பட்ட வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை உருவாக்கி உள்ளனர். அதில் இந்த வார்த்தையும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வார்த்தகயின் தமிழாக்கத்தைக் கண்டு நான் வியப்படைந்தேன். லிவிங் டுகதர் என்ற வார்த்தைக்கு மன வாழ்க்கை என்று தமிழாக்கம் செய்திருக்கின்றனர். யார் அந்த மொழிபெயர்ப்பாளர்கள் என்பதைப் பார்க்க எனக்கு ஆர்வமாகத்தான் உள்ளது. சரி அதை […]

Categories
கருத்து குட்டி கதை தகவல்

நல்வாழ்க்கை வாழ..

ஒரு மனநல மருத்துவர் விளக்கிய சம்பவம்..ஒரு சின்ன குழந்தையின் நடவடிக்கையில் பெரிய மாற்றம். அதீத கோபம். சரியாக சாப்பிடுவதில்லை, அப்பா அம்மாவின் மீது பெரிய வெறுப்பு. இது ஏன் என்பது புரியாமல், அந்தக் குழந்தையின் தாய் தந்தை, அதை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அவரிடம் அந்த குழந்தை கூறிய விஷயங்கள் பெரும் அதிர்ச்சி.“என் அம்மா எனக்குப் பிடிச்சதே செஞ்சு தரமாட்டாங்க, அக்காவுக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் சமைப்பார்கள். எங்கள் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியில் எனக்கு பிடிச்ச […]