அரசு ஊழியர்களின் வாழ்வில் மீண்டும் வசந்தம் பூத்த பொன்னாள். மீண்டும் ஓய்வூதியம் என்ற அறிவிப்பு. அதுவும் 20 ஆண்டுகளுக்குப் பிறகான வரலாற்று அறிவிப்பு. இனிமேல் மண்டும் அரசு ஊழியர்களுக்கு அதே பழைய ஓய்வூதியம்.அதாவது 30 ஆண்டுகள் அரசுப்பணி செய்தவர்களுக்கு அவர்களின் கடைசி மாத வருமானத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாகவும், 10 ஆண்டுகள் வேலை செய்தவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியமாகவும், TAPS, அதாவது Tamilnadu Assure Pension Scheme என்ற பெயரில் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உனக்கென்னப்பா கவர்மென்ட் வேலை […]
Author: அருண் பாரதி
நாம் வாழும் வாழ்வு எப்படி இருக்க வேண்டும்?இது எல்லோரின் மனதினுள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான கேள்வி. இதற்கு பதில் என்னவாக இருக்குமென்றால், சந்தோஷமாக வாழ வேண்டும், நிம்மதியாக வாழ வேண்டும், மன நிறைவோடு வாழ வேண்டும், பணம் செல்வாக்குடன் வாழ வேண்டும், ஆரோக்கியமாக நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், பிறருக்கு உபயோகமாக வாழ வேண்டும், புகழோடு வாழ வேண்டும், பிரபலமாக வாழ வேண்டும் என்று பலவிதமான பதில்களும் வரலாம். ஒவ்வொன்றும் வேறு வேறு மனநிலை கொண்ட […]
ஜனவரி 1, 2026 ஆம் தேதி வெளியான ஒரு நாளிதழில் இப்படியான ஒரு செய்தி பார்த்து அதிர்ச்சியும் வியப்பும். எத்தனை நாகரீக வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, மருத்துவ வளர்ச்சி அடைந்து விட்ட சூழலிலும் கூட இப்படியும் ஓர் செய்தியைப் பார்ப்பது மனதிற்குள் நெருடலை ஏற்படுத்தியது. அஸாம் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தம்பதியினரை வீடு புகுந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி, அவர்களை வீட்டில் வைத்து அடைத்து வீட்டோடு எரித்திருக்கின்றனர்.இதில் அந்த தம்பதியினர் […]
அன்பான வாழ்த்துகள்!
ஓராண்டைக் கடந்துவிட்டோம். டிசம்பர் 31 மாலை முதலே பல நாடுகள் புதிய ஆண்டை வரவேற்ற செய்தியை நாம் பார்க்க முடியும். இப்போதும் கூட சென்ற ஆண்டு புத்தாண்டு இரவில் குதூகலித்த நினைவுகள் நீங்கா நினைவுகளாகவே உள்ளது. இந்த ஆண்டு பலருக்கும் பலவிதமான புதுப்புது அனுபவங்களைத் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. எல்லோரையும் போல மற்ற எல்லா ஆண்டுகளையும் போல, எனக்கும் இந்த ஆண்டு அமைந்ததா என்றால், இல்லை என்பதே என் பதில். எல்லாருக்கும் இது நல்ல ஆண்டாகவோ, அல்லது […]
மனிதர்கள் மிருகமாகலாம், ஆனால் ஒருபோதும் மிருகங்கள் மனிதனாக முடியவே முடியாது.ஏனென்றால் அவற்றிற்கு ஆறாம் அறிவு கிடையாது.அவைகளுக்கு நாகரீகம் தெரியாது. விஞ்ஞான வளர்ச்சி புரியாது. அதை உபயோகிக்கும் முறைகள் பற்றியும் தெரியாது. மிருகங்கள் தனது சுபாவத்திலிருந்து தன்னை மாற்றிக் கொள்வது கடினம். ஒரு அழகான மானைப் பார்த்தால் சிங்கம் ரசிக்குமா? அல்லது புசிக்குமா? இயற்கையின் படைப்பு மான்களைப் புசிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை சிங்கங்கள் . அப்படியே தான் இன்றளவிலும் தனது இயல்பு நிலையிலிருந்து மாறாமல் இருக்கின்றன. ஆனால் மனிதர்கள் அப்படியல்ல. […]
தேவை- அடிப்படை ஒழுக்கம்!
தலைவன் இல்லாத படை தலையில்லா முண்டம் என்பது ஒரு சொலவடை.தலைவன் சரியில்லாதபட்சத்தில் படை கட்டுக்கோப்பாக இல்லாமல் சிதறிப் போகும் என்பதை சில முக்கியமான அரசியல் கட்சிகளை உதாரணமாகக் கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம்..அதைப்போல வளரும் கட்சிக்கு மிக அவசியமான ஒரு தேவை என்பது தலைவனின் ஒழுக்கமும், செயலாற்றலும் , நடவடிக்கைகளும், பேச்சும், என்பதைத் தாண்டி தொண்டர்களுக்கு அந்தத் தலைவனின் மீதான பற்றும், அவனது கொள்கையின்பாற் உள்ள பிடிப்பும். தலைவனின் மீதான பற்று சற்று முன்பின் இருந்தாலும் கூட […]
சிறை- திரை விமர்சனம்.
சினிமா- சிலரது பேராவல், கனவு, லட்சியம்.அப்படி ஒருவரின் முயற்சியில் உருவாகும் சினிமாக்கள் என்றுமே மனதிற்கு நெகிழ்ச்சி தான். அப்படியொரு நெகிழ்ச்சியான மறக்க முடியாத சினிமாவாக அமைந்திருக்கிறது இந்த வாரம் வெளியான சிறை திரைப்படம். காவல்துறையில் பணிபுரிந்தாலும் தனது கனவான சினிமாவை நோக்கி வந்த தமிழ் அவர்களின் டாணாக்காரன் படம் நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்தியதோடு அல்லாமல், காவல்துறை பயிற்சியில் நடக்கும் அவலங்களை மிக தைரியமாக வெளிக்கொணர்ந்தது.அது ஒரு அர்த்தமுள்ள சினிமாவாக அமைந்ததோடு அல்லாமல் நமது நெஞ்சங்களையும் கவர்ந்தது என்பதில் […]
ஒரு மனுஷனோட புகைப்படம் இன்று இணையமெங்கும் நிறைந்திருக்கிறது. அவரது கட்சிக்காரர்களைத் தாண்டி மாற்றுக் கட்சியினரும் ,அவரது மதத்ததைத் தாண்டி மாற்று மதத்தினரும், அவரது ரசிகர்களைத் தாண்டி பிற சினிமா நாயகர்களின் ரசிகர்களும் என்று பாகுபாடுகள் கடந்து பெரும்பாலான மக்களின் மனதில் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த மாமனிதன். இவர் கைகள் அன்னமிட்டு சிவந்த கைகள்.இவரது பிறப்பு கர்ணனின் மறுபிறப்பு.கலியுகத்தில் வாழ்ந்து மறைந்த கர்ணன் என்று எல்லோராலும் போற்றப்படும் மனித தெய்வம் மறைந்த நாள் இன்று. இரண்டாடுகள் ஆகியும் […]
சம வேலைக்கு சம ஊதியம்.
ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தார். அவரிடம் இரண்டு மாடுகள் இருந்தன.அந்த இரண்டு மாடுகளையும் வண்டியில் பூட்டி ஊர்களைச் சுற்றி உப்பு வியாபாரம் செய்து அவர் பிழைத்து வந்தார். அந்த இரண்டு மாடுகளும் அவர் வீட்டுத் தொழுவத்தில் ஒன்றாகவே கட்டப்பட்டிருக்கும். வேலையும் இரண்டு மாடுகளும் ஒரே மாதிரி தான் செய்யும். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் ஒன்று உண்டு. ஒரு மாடு ஆரம்பத்திலிருந்தே அவரிடம் இருந்தது. அதன் மீதி பிரியம் அதிகம்.முதலில் அந்த மாட்டை வைத்து சம்பாதித்து […]
ரெட்ட தல – திரை விமர்சனம்
பொதுவாக ஒரு நடிகரிடம் ஏதாவது விஷயத்தைச் சொல்லி அவரைக் கவர்ந்து விட்டால், அது இயக்குனரின் வெற்றி தான். அந்த நடிகரும் ஒப்புக் கொண்டு, அந்த சினிமாவைத் தயாரிக்க ஒரு தயாரிப்பாளரும் கிடைத்துவிட்டால் படத்தை இயக்கி சந்தைப்படுத்தி விடலாம். ஏதாவது விடுமுறை தேதிகளில் படம் வெளியானால் குறைந்தபட்ச லாபத்தோடு படம் வெற்றியடைந்து விடும் என்ற நோக்கத்துடன் சில படங்கள் எடுக்கப்படுகின்றன. அதாவது முற்றிலும் வியாபார பாணியில் எடுக்கப்படும் படங்கள். சில படங்கள் கருத்து ரீதியாக வெளியாகும்.அதாவது ஒரு பெரிய […]