மாபெறும் மாநில மாநாடு 😂 மா- பெறும் மாநில மாநாடு. இந்த பிரச்சினை குறித்த காணொளி ஏற்கனவே இணையத்தில் பரவலாக பேசப்படும் நிலையில், நாம் நமது பயணத்தில் ஒரு பகுதியாக இதை மேற்குறிப்பிட்டு பேச வேண்டியது அவசியமாகிறது. ஏற்கனவே விஜய் அவர்கள் இந்த தவெக வை நடத்த வாயில் வயரைக்கடித்து வண்டி ஓட்டுவது போல ஓட்ட வேண்டும் என்று ஒரு உருவகக் கதை எழுதியிருந்தோம். அதை சற்றும் ஏமாற்றாத வகையில் அந்த கட்சியின் தொண்டர்கள் மிகப்பெரிய பேனர் […]
Author: அருண் பாரதி

பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர். 1952 ஆம் ஆண்டே பராசக்தி படத்தில் திரு.சிவாஜி கணேசன் இந்த வசனத்தைப் பேசி நடித்திருப்பார். அப்படியிருக்கும் போது 2024 ல் சொல்லவா வேண்டும். நாம் பிழைக்கச் செல்லும் ஊரில் எத்தனை சொகுசுகளும் வசதிகளும் இருந்தாலும் கூட, பிறந்த ஊர் ஒரு குட்கிராமமாயினும், அந்த பிறந்த ஊரில் இருந்த ஏதோ ஒன்றை பிழைக்கச் சென்ற ஊரில் நாம் தொலைத்தது போன்ற அனுபவம் இல்லாமல் இங்கு யாருமில்லை. அப்படி என்னுடைய மனதிற்கு […]
தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சினை மாப்பிள்ளையோட சீப்பை ஒழித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும் என்பது போல, சில விஷயங்களில் சமீப காலமாக நிகழ்ந்து வரும் கேலிக்கூத்துகள் ஏற்புடையதாக இல்லை. திருவள்ளுவருக்குக் காவி அணிவித்தாலும், அவர் இந்து என்று சொன்னாலும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அவர் கூறிய கருத்து மாறாது. அதுபோல, கனியன் பூங்குன்றனார் வழிவாழும் தமிழ்ச் சமூகத்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கருத்து மாறாது. வெளித்தோற்றத்தின் மாற்றம், ஒட்டுமொத்த கருத்தையும் மாற்றி […]
விளம்பர மோகத்தின் விளைவு நுகர்வுத் தூண்டல். நாம் முந்தைய பகுதியில் நம்மை ரசிக்க வைத்த விளம்பரங்கள் மற்றும் முட்டாள்தனமான விளம்பரங்களைப் பற்றி பார்த்தோம். ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவை நம் மனதில் பதிந்து நமது மூளைக்கு இடும் கட்டளை. அந்த விளம்பரங்கள் உருவாக்கும் நுகர்வுத் தூண்டல். இது நமக்குத் தேவையா, இது நமது தகுதிக்கு ஏற்றதா? இது நமது அன்றாட பழக்கவழக்கத்திற்கும், பாரம்பரியத்திற்கும் ஒத்துப்போவதா என்பதை எல்லாம் சிந்திக்காமல், குருட்டுத்தனமாக […]
ஒரு குறிப்பிட்ட சலவை சோப்பு விளம்பரத்தின் அநியாயம் தாங்க இயலவில்லை.அதைப் பார்க்கும் முன்பு, நமது நினைவிலிருக்கும் பல விளம்பரங்களையும் ஒருமுறை அலசலாம். நமது சின்ன வயதில் வாஷிங் பவுடர் நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா என்ற விளம்பரப் பாடலைப் பாடாத ஆட்களே இருந்திருக்க மாட்டோம். சில விளம்பரங்கள் நமது மனதைக் கவர்ந்தவையாகவும் இருந்தன. Boost is the secret of our energy போல.. இன்றைய சூழலில் வியாபார போட்டிகள் அதிகரித்த காரணத்தால் பல விளம்பரங்களும் மக்களின் […]

சென்ற வாரம் ஒரு பெரிய சிங்கம் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்த காரணத்தால் குரங்கு 🐵 பல்டியை கவனிக்கத் தவறிவிட்டோம். ஆம் வேட்டையன் என்ற சூப்பர் ஸ்டார் ஜோரில் ப்ளாக் என்ற வித்தியாசமான குரங்கு பல்டி படத்தைப்பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. வேட்டையனுக்கு எதிரான சில சமூக விரோதிகள் இந்தப்படத்தையும் பாருங்கப்பா, அந்தப் படத்துக்கு இது எவ்வளவோ மேல் என்று விளம்பரப் படுத்துவதால் ஒரு சுமாரான ரசிகர் கூட்டம் திசைமாறி இந்தப் படத்திற்கு வருகிறார்கள். சரி அப்படி திசைமாறி […]
நீ விதைப்பதே விளையும் என்பது மறுக்க இயலாத ஒன்று. நேற்றைய மாணவர்கள் இன்றைய சமுதாயம்.இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம். இப்படி இருக்கும் போது மாணவனாக ஒழுக்கம் கற்றவர்கள், சமுதாயமாகக் கட்டமைக்கப்படும் போது அங்கே லஞ்சமும், ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும் ஒழியாமல் தொடர்வது அவலம் தானே? நல்ல ஆசிரியர்களால் ஒழுக்கம் கற்பிக்கப்பட்ட நல்ல மாணவர்கள் எப்படி இந்த முறை கேடுகளை எல்லாம் செய்கிறார்கள்? அதற்கான பதில் தான் இந்த சம்பவம். ஆசிரியர்களின் முறைகேடுகளும், அதிகார துஷ்பிரயோகமும். சமீபத்தில் ஆளுநரிடம் […]

சில கனவுகள் நம்மை உறங்க விடுவதில்லை.சில கனவுகள் தூக்கித்தில் வந்தால் கூட நம் நினைவை விட்டு அகலுவதில்லை. அப்படியான ஒரு கனவு தான், நம் கதையின் நாயகனுக்கும். கதையின் நாயகனுக்கு திருமணமாகி விட்டது.இந்த லாக் டவுன் பீரியடில் வேலை இல்லாத காரணத்தால், இரவு 3 மணி வரை விழித்து ஏதாவது படம் பார்த்து விட்டு, காலை 11 மணி வரை தூங்குகிறான். அவனது கனவில்….. கதையின் நாயகன் ராகேஷ், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். அவனது தந்தை ஓரளவுக்கு […]
மழை எச்சரிக்கை கூத்துகள். சமீபத்தில் மெரினா கடற்கரையில் நடந்த நிகழ்வின் போது முன்னெச்சிரிக்கையாக போதுமான அளவு தண்ணீர் ஏற்பாடு இல்லாத காரணத்தால் உயிரிழந்த மக்களின் கதையை அறிந்து வருந்தினோம். இன்று அதே சென்னை மக்கள் உலகம் அழியும் வண்ணம் முன்னெச்சிரிக்கைக் கூத்துகளை செய்வதைக்கண்டு வியந்து இதை எழுதுகிறோம். ஆம். இன்று தற்காலிகமாக நான் ஒரு காய்கறி அங்காடிக்கு செல்ல வேண்டிய கட்டாயம். அங்கே சென்று பார்த்தபோது எனக்குப் பெரிய வியப்பு. முக்கிய ரகங்களில் ஒரு காய்கறியும் மிச்சமில்லை. […]

வைஷ்ணவியும், கதிரவனும், காதலித்து திருமணம் செய்தவர்கள். திருமணம் செய்தார்கள் என்று ஒற்றை வரியில் இருப்பதால், அவ்வளவு எளிதாக திருமணம் நிகழ்ந்துவிட்டதாக எண்ண வேண்டாம். எந்த காலத்திலும் பெண் பிள்ளையைப் பெற்றவர்களுக்கு மகளை நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்து கரை சேர்ப்பது என்பது மிகப்பெரிய சவால் தானே? ஊர் கூடி, ஆசிர்வாதம் செய்து, உறவினர்களுக்கு சொல்லி, ஜாதகம் பார்த்து, மந்திரங்கள் ஓதி செய்து வைக்கப்பட்ட திருமணங்களே ஓரிரு ஆண்டுகளில் சந்தி சிரிக்க சபைக்கு வந்து வாதாடி விவாகரத்து பெற்று முடிகிறதே? […]