உலகில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு தன்னிறைவு அடைதல், அல்லது உச்சநிலை என்பது இருக்கும். ஆங்கிலத்தில் destination என்று எளிமையாக சொல்லலாம். அப்படி ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்குமான destination ஒலிம்பிக்ஸ் என்பதில் மாற்றுக்கருத்தல்ல. ஒலிம்பிக்ஸ் என்பது கிரிக்கெட் மாதிரியான பைத்தியக்கார ரசிகர்களை கொண்டிருக்கவில்லை. விளம்பரத்தில் பணம் சம்பாதிப்பது மட்டும் நோக்கமாக தெரியவில்லை. அதற்கென்று ஒரு தனி மரியாதை உண்டு. பண்டைய கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில், சேயுசு கோவிலடியில் சமய விழாவாகத் துவங்கிய இந்த விளையாட்டுப் போட்டிகள் இன்று […]
Author: அருண் பாரதி
வீட்டிற்கு ஒன்று துவங்கி 4,5 என நீளும் பட்டதாரிகளின் எண்ணிக்கை,ஆரோக்கியமானது என்றாலும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் வழிவகுக்கிறது. கல்வி கிடைப்பதற்காக உருவாக்கப்பட்ட வசதிகள், நடவடிக்கைகள் வேலைவாயப்புக்கு சரிவர செய்யப்படவில்லையோ, அல்லது இடைவெளி நிரப்பப்படவில்லையோ என்பதை நாம் வேறொரு கட்டுரையில் பார்க்கலாம். இந்தக் கட்டுரையில் நேர்காணலுக்கு எப்படித்தயாராக வேண்டும் என்று தற்போது பரவலாக நடக்கும் வேடிக்கைகளைப் பற்றி பார்க்கலாம். முதலில் இந்த நேர்காணல் கூற்றுகள் ஐடி நிறுவனங்களில் துவங்கியது. இன்று மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் வரை வந்து விட்டது. […]
அடக்குமுறைகளும், அதற்கு எதிரான கிளர்ச்சிகளும் காலம் காலமாக நிகழும் ஒன்றுதான். இதில் முக்கியமாக குறிக்கத்தகுந்த வகையில் நிகழ்ந்த சம்பவம் வேலூர் சிப்பாய் கிளர்ச்சி. 1806 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி நடைபெற்ற கிளர்ச்சி, பின்நாளில் 1857 ல் நிகழ்ந்த கிளர்ச்சியின் முன்னோடி. ஆங்கிலேய இராணுவத்தில் பணிபுரிந்த இந்திய சிப்பாய்கள், தமது சமயக்குறியீடுகளான விபூதி, நாமம் போன்றவற்றை அணியக்கூடாது எனவும், கிர்தா வை எடுத்து விட வேண்டும் எனவும், இராணுவ அதிகாரி வற்புறுத்திய காரணத்தாலும், […]
தமிழ் படங்களில், ஏன் தென்னிந்திய படங்களில் ஒரு புதிய முயற்சியாக இந்தப்படம் முழுநீள வண்ணப் படமாக வந்த முதல் படம், அலிபாபாவும் நாற்பது திருடர்களும். அதற்கு முன்பெல்லாம் கருப்பு வெள்ளை படங்கள் தான். இந்த வண்ணப்படமானது Gevacolor என்ற முறையில் படமாக்கப்பட்டது.Gevacolor என்பது பெல்ஜியத்தில் கேவர்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட ஓடும் படத்தை வண்ணப்படமாக்கும் உத்தி. இந்தப்படமானது இந்தியில் வந்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் ரீமேக். The Arabic Nights என்ற புத்தகத்தில் வந்த கதையை மையமாக […]
திரைப்படம் என்பது பெரும்பாலான சாமானிய மக்களின் பொழுதுபோக்கு என்றாலும், அது வெறுமனே பொழுதுபோக்கு என்ற ரீதியில் மறந்து விடக்கூடியதல்ல. ஒவ்வொரு திரை ரசிகரின் மனதிலும் நீங்கா நினைவுகளை ஏற்படுத்தும் திரைப்படத்துறையில் சாதித்தவர்களின் நினைவுகளும் நம்மில் நிலைத்திருப்பது என்னவோ உண்மை. அப்படியான ஒரு திரை ஜாம்பவான் இயக்குனர் சத்யஜித்ரே. யதார்த்தமாக ஒருவர் ஏதாவது திரைப்படத்தைப்பற்றி விமர்சிக்கும் போது, மனசுல பெரிய சத்யஜித்ரே்னு நினைப்பு என்று சொல்லப்படுவது உண்டு. ஏனென்றால் அவர் இயக்குனரோடு அல்லாமல் திரை விமர்சகராகவும் இருந்தவர். மேலும் […]
நடிகர் திலகம், சிம்மக்குரலோன், நடிப்புச் சக்கரவர்த்தி திரு.சிவாஜி கணேசன் அவர்களின் பங்களிப்பில்லாமல் தமிழ் சினிமாக்களை நினைவு காண முடியுமோ? “வரி , வட்டி , திரை , கிஸ்தி” என்று கம்பீரமான வீரபாண்டிய கட்டபொம்மனாக நம் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கும் கணேசமூர்த்தி ஆகிய சிவாஜி கணேசனுக்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் பார்த்து தான் நடிப்பில் ஈடுபாடு வந்தது. அந்த ஈடுபாடு, ஏழு வயதில் பெற்றோருக்குத் தெரியாமல் நாடக சபையில் போய் இணையும் அளவிற்கு லட்சியமாக உருவெடுத்தது. சிறுவயதிலேயே […]
சினிமா மற்றும் ஆன்மிகம் தான் இன்று கோடிகளில் பணம் கொழிக்கும் தொழில்துறை அல்லாத இரு துறைகள் என்பது மறுக்க முடியாத உண்மை. சினிமா ஆவது பல கோடிகளில் செலவு செய்து பல மனிதர்களின் உழைப்பில் உருவாகி திரையில் ஓடி மக்கள் மனதைக்கவர்ந்தால் தான் வெற்றியும் பணமும். ஆன்மீகம் அப்படி இல்லை. பழனிக்குச் சென்றால் பயனுண்டு, திருப்பதி சென்றால் திருப்பமுண்டு, ஐயப்பனைக்கண்டால் ஆனந்தமுண்டு என்று நம்பி அங்கே சென்று அழுது புரண்டு தங்கள் பிரார்த்தனைகளைக் கொட்டும் எத்தனை பக்தர்களுக்கு […]
கல்வித்தந்தை காமராஜர், தன்னால் ஏழ்மை காரணமாகப்படிக்க முடியாமல் போனது மாதிரி தம் ஆட்சி காலத்தில் ஏழ்மை காரணமாக படிக்க இயலவில்லை என்று ஒரு குழந்தையும் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்று எண்ணியவர்.
பெரும்பாலான மக்களுக்கு சொந்தமில்லாததாக இருந்தாலும் அனைவரது நினைவுகளிலும் நிலைத்து நிற்கும் மாருதி 800 என்ற மகிழுந்தைப் பற்றி ஒரு முறை பின்னோக்கிப் பார்க்கலாம். 1983 முதல் 2014 வரை பல நடுத்தர குடும்ப மக்கள் எளிமையாக சொந்தம் கொண்டாடிய வாகனம் இந்தியா மற்றும் பல நாடுகளைச் சேர்த்து கிட்டதட்ட 30 லட்சம் எண்ணிக்கையில் விற்பனை ஆன மாடர்ன் ரக கார். அதாவது பியட் பத்மினி, அம்பாசிடர் கார்களை ஒப்பிடும் போது மாருதி 800 தான் நவீன மகிழுந்து. […]
இந்தியாவின் முதல் கடற்பாலம் என்ற பெருமையோடு அல்லாமல் 2010 மும்பையின் பாந்த்ரா பாலம் திறக்கப்படும் வரை, மிக நீளமான பாலம் என்ற பெருமையையும் தன்னுள்ளே தக்கவைத்திருந்த பாலம்.