இடக்கரடக்கல் என்ற ஒரு விஷயத்தைக் நாம் படித்திருப்போம்.ஒரு பொருளை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது, ஆனால் அந்த இடத்தின் ஒழுக்கம் கருதி அந்த விஷயத்தை வேறு விதமாக சொல்வது தான் இடக்கரடக்கல் எனப்படும். உதாரணத்திற்கு அவன் எங்கே என்று கேட்கும் போது , மலம் கழிக்கச்செல்கிறான் என்று சொல்வதை விட கொள்ளைப்புறம் செல்கிறான் என்று சொல்லி அந்த விஷயத்தைத் தெரிவுபடுத்துவதோடு அல்லாமல், சொல்ல வந்த விஷயத்தையும் முகசுழிவு இல்லாமல் சொல்லி விடுகிறோம். இதுபோல இடக்கரடக்கல் என்பது இன்றைய […]
Category: கருத்து

க்யா ச்சையியே? என்னாங்க தலைப்பு ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி தோணுதா? இல்ல, இருக்காது, நம்மில் பலருக்கும் இது இந்தி என்றும் இதன் அர்த்தம் என்ன வேண்டும் என்பதென்றும் தெரிந்திருக்கும். காரணம், இந்தியை நாம் பழகாவிட்டாலும் இந்தி நம்மோடு பழகி விட்டது. தேவைக்காக நியாயமான முறையிலும், சில மோசடியான முறையிலும். அப்படி மோசடியாக நுழைந்த இந்திக்காரர்கள் கதை தான் இது. ஆம் ஏற்கனவே, நாம் பல அரசு வேலைகளிலும், ஐஐடி ஐஐஎம் போன்ற மத்திய அரசு கல்வி […]

உலகில் கொரோனா, பூகம்பம் , வெள்ளம், சுனாமி , மேக வெடிப்பு மழை போன்றவை எல்லாம் வந்து மனித இனம் வாடும் போது மனம் வெதும்பத் தான் செய்கிறது. ஆனால் சில செய்திகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் மனித இனத்திற்கு இந்த தண்டனை போதாது என்று தான் தோன்றுகிறது. ஆம், மனித இனமே ஒட்டுமொத்தமாக அழிந்தாலென்ன என்ற அளவிற்கான கோபத்தை சில விஷயங்கள் ஏற்படுத்துகின்றன. அப்படி இருவேறு துயர செய்திகள் இன்று கேள்விப்பட நேர்ந்தது. முதலாவது, […]

விநாயகர் சதுர்த்தி ஆனது நேற்றைய தினம் கோலாகலமாக ஊரெங்கிலும் கொண்டாடப்பட்டது. மக்களிடம் பக்தி நன்றாகப் பரவுகிறதே ஒழிய ஒழுக்கம் வளர்கிறதா என்றால் இல்லை. எதிர் விளைவாகத் தான் இருக்கின்றது.மனிதனிடம் கடவுள் பக்தி என்பது எதற்காக வளர்க்கப்பட வேண்டும் என்றால், ஒழுக்கம் வளர்வதற்காகவும், சக ஜீவன்களிடம் அன்பு காட்டுவதற்காகவும் தான். ஆனால் பக்தி வளர்கிறதே ஒழிய ஒழுக்கம் தேய்ந்து கொண்டே தான் போகிறது. பக்தி என்பது போட்டி மனப்பான்மையில் தான் வளர்கிறது. ஒழுக்கம் குறைவது வருத்தம் தான் என்றாலும், […]
அகமதாபாத் பரிதாபங்கள்-2

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழனின் பண்பு. ஆனால் அதைப் பின்பற்றி மீள் குடியேற்றம் செய்து சிறப்பாக வாழ்வது பெரும்பாலும், வட இந்தியர்கள் தான். அதாவது தமிழ் பேசாத பிறமொழி இந்தியர்கள்.அவர்கள் இங்கே வந்து நமது ஊர் பாதுகாப்பானது , சுகாதாரமானது, நல்ல வேலை வாய்ப்பு வசதி உடையது என்பதை உணர்ந்துகொண்டு இங்கே தங்கி யாவரும் கேளிர், இதுவும் எனது ஊரே , இங்கேயே நான் குடியேறி, ரேஷன் வாங்கி வாக்களிக்கவும் செய்வேன் என்று இங்கேயே […]
ஏமாற்றாதே,ஏமாறாதே!

மோசடி.மனிதனின் தேவை அளவோடு இருந்த போது மோசடி என்பது குறைவாகவே இருந்தது.உணவு, உடை, இருப்பிடம் மட்டும் போதும் என்று வாழ்ந்த காலத்திலும், ஏன் நாகரீகம் என்ற ஒன்று இல்லாத காலத்திலும் மோசடி என்பது மிகக் குறைவாகவே இருந்தது. பணமும், பகட்டும் நவநாகரீக வாழ்வும் வளர வளர, மனிதனின் ஆசையும் வளர, மோசடி என்பது வளர்ந்து கொண்டே வருகிறது. பிச்சைக்காரன் முதல் தங்கத்தட்டில் உணவருந்தும் பணக்காரன் வரை ஒரே பூமியில் தானே வாழ்கிறான்.ஆக ஒருவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் […]

சில கதைகளை வாசித்தால் அது நம் மனதிலிருந்து என்றுமே நீங்குவதில்லை. அதோடு மனதில் ஒரு சின்ன தாக்கத்தையும் ஏற்படுத்தும். அப்படி நான் வாசித்த ஒரு கதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கதை கூட அல்ல, ஒரு சிறு துணுக்கு தான்.ஆனால் நறுக்கென மண்டையில் குட்டும் துணுக்கு. பரபரப்பாக சினிமா சூட்டிங் நிகழ்ந்தது. ஒரு தொழிற்சாலை வாசலில், தொழிலாளர்கள் தங்களது நியாயமான கூலிக்காகப் போராடும் காட்சி அது. தொழிலாளியான கதாநாயகன், காரில் வந்திறங்கும் முதலாளியிடம், வயித்துப்பசி பட்டினி என்று […]

இந்தியாவின் எந்த மாநிலத்தைச்சார்ந்த குடிமகனும் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம், பணி செய்யலாம், குடியேறலாம், வாக்குரிமை பெறலாம் என்பது நமது அடிப்படை சட்டம். இதன் அடிப்படையில் இங்கே பணி நிமிர்த்தமாக வரும் வட இந்தியர்கள், இங்கேயே தங்கி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, ரேஷனில் கிடைக்கும் பொங்கல் பரிசையும் வாங்கிக் கொண்டு, ஈகா, அனு ஈகா திரையரங்கில் இந்திப்படங்களைப் பார்த்து விட்டு, சௌகார் பேட்டையில் பலகாரம் சாப்பிட்டு தங்கள் வாழ்க்கையை சிறப்பாகத் தாம் வாழும் வரை நமக்கு எந்த […]

இடைவேளை- இடைவெளி அன்றாடம் ஓடும் இந்த ஓட்டத்திற்கு ஒரு சிறிய இடைவேளை தருவது தான் மீண்டும் அதே வேகத்தில் ஓடுவதற்கான ஆதாரம். எப்படி ஒரு தடகள வீரர் தன்னுடைய மொத்த ஓட்ட தூரத்தை பாகங்களாகப் பிரித்து, இடையில் ஒரு சிறிய இடைவெளி விட்டு, உடலுக்கும் காலுக்கும் ஓய்வு கொடுத்து மீண்டும் உந்தம் கொடுத்து ஓட்டத்தை வேகப்படுத்துகிறாரோ அதுபோல, நாமும் நமது அன்றாட ஓட்டத்திலிருந்து ஒரு சிறிய ஓய்வெடுத்து சொந்த ஊருக்கோ அல்லது வேறேதாவது ஒரு கோயில், சுற்றுலா […]
ஒழுக்கமில்லாத பக்தி?

முருகனுக்கு அரோகரா! அதிலும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா! அரோகரா என்று மிகப்பெரிய கும்பல் கிளம்பியுள்ளது.திடீர் முருக பக்தர்களா?அல்லது உண்மையிலேயே நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பக்தி வேரூன்றிவிட்டதா என்பதை யூகிக்க முடியவில்லை. திருச்செந்தூரிலும், திருப்பரங்குன்றத்திலும் சமீபத்தில் தடபுடலாக கும்பாபிஷேகம் நிகழ்ந்திருக்கிறது. கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களுக்குள் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் திருச்செந்தூர் சென்றிருந்தோம். திருப்பதி போலவே வடிவமைத்து உருவாக்க வேண்டும் என்ற முயற்சி ஒரு புறம் தெரிந்தாலும், இது தமிழ்நாடு டா என்பது இன்னொரு புறம் […]