Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

சிந்திக்க வேண்டிய கட்டாயம்!

பட்டாசு.தீபாவளிக்கும் கார்த்திகை தீபத்திற்கும், திருவிழாக்களிக்கும் இன்ன பிற சாவு போன்ற சடங்குகளுக்கும் பட்டாசு என்பது ஆடம்பரமாகவோ இன்றியமையாத ஒன்றாகவோ அல்லது அடிப்படைத் தேவையாகவோ என்று ஏதோ ஒரு கணக்கில் கட்டாயம் தேவை என்று வழக்கமாகிப்போனது. பட்டாசு வெடிப்பதில் நமக்கு பெரிய எதிர்ப்பு இல்லை , பட்டாசு தொழிலை நம்பியே வாழும் சிவகாசி என்ற ஊர் மக்களுக்காக நாமும் பட்டாசு வெடிப்பதை ஆதரித்தே பலமுறை எழுதியிருக்கிறோம். ஆனால் இந்த முறை ஒரு சிறிய மனக்குழப்பம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

எப்போது விடியுமோ?

இத விட மோசமான சூழ்நிலை வரவே வராதுல அப்படின்னு நாம நம்ம வாழ்க்கையில சில நேரங்களைக் கடந்து வந்திருப்போம். அப்படியொரு சம்பவம் தான் இது.ஆனால் இவருக்கு இது புதிதல்ல..இதைப் போன்ற பல மோசமான சூழ்நிலைகளை அவர் சந்தித்திருந்தாலும், விடாப்பிடியாக மனம் தளராமல் எடுத்த காரியத்திலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து தனக்கு மனநிறைவான வேலையைச் செய்பவர். வேறு யார்?தன் வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயி தான். இது வழக்கமாக நிகழ்வது தானே? பயிர் போட்டு […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இதெல்லாம் தப்பு ப்ரோ!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு வள்ளுவர் சொல்லியிருக்காரு. ஆனா இந்த விஷயத்தைக் கேளுங்க.எதிர்பார்த்ததை விட அதிக வரவு. வெற்றி என்றால் இப்படி இருக்க வேண்டும்.ஊர் உலகமே வியக்கும் அளவிற்கு மாபெரும் வெற்றி. சும்மா நாங்களும் வென்றோம், நாங்களும் வசூலித்தோம்னு பேசுகிறவர்கள் மத்தியில் , வசூல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், வெற்றி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் , இலக்கைத் தாண்டிய மாபெரும் வெற்றி என்பது இதுதான் என்று நிரூபணமாகி இருக்கிறது. இதை வாசித்த உடனே பலரும் மனதில் நினைத்திருப்பீர்கள், […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

தித்திக்கும் தீபாவளி!

தீபாவளி.பண்டிகை என்றாலே மகிழ்ச்சி தான்.அதிலும் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம்.புத்தாடைகளும், மத்தாப்பும், பட்டாசும், பலகாரமும், என அது தரும் நினைவுகளும் மகிழ்ச்சியும் ஏராளம். குழந்தைப் பருவத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்து திகட்டத் திகட்டக் கொண்டாடும் பண்டிகை என்றால் அது தீபாவளி தான். அதிலும் குறிப்பாக 90 களின் குழந்தைகளுக்கு தீபாவளி என்பது தன் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத திகட்டாத இன்பத்தை அள்ளித் தந்த பண்டிகை தான். எனது வாழ்விலும் தீபாவளியைப் பற்றிய மகிழ்ச்சிப் பகிரல்கள் ஏராளம் உண்டு..இப்போது […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இன்னும் எத்தனை போலி?

டாக்டர் கிட்டயும் , வக்கீல் கிட்டயும் பொய் சொல்லக்கூடாதுனு சொல்லுவாங்க, ஆனா உங்ககிட்ட சொல்லக்கூடாத இன்னொன்னு, ” எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல”.கறந்துருவீங்களே? இப்படி கேப்டன் விஜயகாந்த் ரமணா படத்தில் ஒரு வசனம் பேசியிருப்பார். ஒரு தனியார் மருத்துவமனையில் நிகழும் மிகப்பெரிய அநியாயத்தை எதிர்த்து அவர் பேசிய வசனம் இது. அவரது குழந்தை சைக்கிளிலிருந்து கீழே விழுந்து அடிபட்டதற்காக மருத்துவமனை சென்ற அவருக்கு 40000 ரூபாய் வரை மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படும்பிறகு ஒரு இறந்தவரின் சடலத்தைக் கொண்டு சென்று, […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பசுந்தோல் போர்த்திய ஓநாய்கள்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். ஒழுக்கம் என்பது உயிரினும் மேலானது என்ற வள்ளுவனின் வாக்கு புத்தகத்திலும், தேர்வில் எழுதி இரண்டு மதிப்பெண் பெறுவதற்கும் தான் என்று மாறிப் போனது. கோவில், கடவுள், பக்தி , இறை நம்பிக்கை என்பது மனிதன் தனக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று பயந்து ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தான்.ஆனால் இன்று அது ஒரு அன்றாட செயலாகவும், போட்டி மனப்பான்மையிலும், பகை மூட்டுவதற்கும் தான் பயன்படுகிறது. […]

Categories
கருத்து குட்டி கதை

நல்லதுக்குக் காலமில்லை.

படித்ததில் பிடித்தது! சமீபத்தில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளிக்குப் பேசப் போயிருந்தேன்.பேசுவதற்கு முன்னால் என்னைத் தனி அறையில் உட்கார வைத்திருந்தார்கள்.பக்கத்தில் அமர்ந்திருந்தவர்தான் தமிழ் டீச்சராக இருக்க வேண்டும். கொஞ்ச நேரம் தயக்கத்தோடு பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று என்னைப் பார்த்து, “சார் எங்க ஸ்டூடன்ட்ஸ் லிட்டரரி காம்பெடிசன்ல சூப்பரா கவிதை எழுதியிருக்காங்க . படிக்கிறீங்களா?” என்றார். எனக்கும் பொழுது போக வேண்டுமென்பதால் ” கொடுங்க” என்று சுரத்தில்லாமல் சொன்னேன். அவர் வெளியே போய் நீலநிற ஃபைலை எடுத்து வந்தார். […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

கனவுகளை சிதைத்த விபத்து!

நாம் சரஸ்வதி பூஜை அன்று வாகனங்களுக்குத் தேவை பூஜை மட்டுமல்ல, பராமரிப்பும் தான் என்று எழுதியிருந்தோம். அதை நிரூபிக்கும் விதமாக நெஞ்சை உலுக்கும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. கனவுகளோடு வாழ்க்கையை வாழக் காத்திருக்கும் நான்கு இளைஞர்களின் வாழ்வை முடித்திருக்கிறது பாழாய்ப்போன தறிகெட்டு ஓடிய லாரி ஒன்று. ஓசூர் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.முன்னே சென்ற காரின் மீது தறிகெட்டு ஓடிய லாரி மோதி அந்தக்கார் அதற்கு முன்னே சென்ற ஒரு சரக்கு வாகனத்தில் மோத, காரில் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

நம் தங்கம், நம் உரிமை!

கையில இருக்கு தங்கம், கவலை ஏன்டா சிங்கம்னு ஒரு விளம்பரம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரொம்பப் பிரபலமா ஒளிபரப்பு ஆனது. அந்த விளம்பரம் வரும் முன்பே அது தான் நிலை. கையில தங்கம் இருக்கு என்ற தைரியம் எப்போதுமே இந்திய நடுத்தரக் குடும்ப மக்களுக்கு உண்டு. எனது சொந்த அனுபவத்தில், சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு கூட, நான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவமனை செலவு பற்றி நான் கவலை இல்லாமல் சொகுசாக மருத்துவ உபசரிப்புகளை […]

Categories
இலக்கியம் கருத்து

அன்றும், இன்றும் , என்றும் திருக்குறள்!

திருக்குறளில் நாம் எவ்வளவோ நல்ல கருத்துகளைக் கேட்டு கடந்து வந்திருப்போம். 2000 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு நூலை , அதாவது 2000 ஆண்டுக்குப் பிறகும் இன்றைய சூழலில் பயன்படும் கருத்துகளைக் கொண்ட நூலை எப்படி எழுதியிருக்க முடியும் என்று தினம் தினம் நாம் அந்த நூலை நினைத்து ஆச்சரியப்படும் அளவிற்கு நிறைய விஷயங்கள் அதனுள் பொதிந்து கிடக்கிறது. இன்றைய தினத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களைப் பார்க்கலாமா? முதல் விஷயம். ஏய் தாய்க்கெழவி நீளமா பேசாத!அதாவது சொல்ல […]