சில கதைகளை வாசித்தால் அது நம் மனதிலிருந்து என்றுமே நீங்குவதில்லை. அதோடு மனதில் ஒரு சின்ன தாக்கத்தையும் ஏற்படுத்தும். அப்படி நான் வாசித்த ஒரு கதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கதை கூட அல்ல, ஒரு சிறு துணுக்கு தான்.ஆனால் நறுக்கென மண்டையில் குட்டும் துணுக்கு. பரபரப்பாக சினிமா சூட்டிங் நிகழ்ந்தது. ஒரு தொழிற்சாலை வாசலில், தொழிலாளர்கள் தங்களது நியாயமான கூலிக்காகப் போராடும் காட்சி அது. தொழிலாளியான கதாநாயகன், காரில் வந்திறங்கும் முதலாளியிடம், வயித்துப்பசி பட்டினி என்று […]
