Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

பொங்கல் பரிசு வாங்கியாச்சா?

பொங்கல் பண்டிகை என்றாலே சிறப்பு தான். தமிழர் பண்டிகை , பாரம்பரிய விழா, மத வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் ஒரு விழா என்பது இன்றளவிலும் மாறாமல் உள்ளது. விவசாயிகள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படுகிறது என்பது பாரம்பரியம் என்றாலும் இன்றளவிலும் விவசாயம் அல்லாத மற்ற தொழில் செய்யும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுவது அதன் தனிச்சிறப்பு. இதில் சமீப காலமாக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் பொங்கல் பரிசுத் தொகுப்பு. எனக்கு விவரம் […]

Categories
அரசியல் கருத்து சினிமா

பராசக்தி- திரை விமர்சனம்!

பொங்கல் படங்களில் எதிர்பார்க்ப்பட்ட படங்களில் ஒன்று வெளிவராமல் போனது.இன்னொரு படம் வெளிவந்து பல நேர்மறை மற்றும் எதர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது 2026 பொங்கல் வெளியீடான பராசக்தி பற்றிய பதிவு தான் இது. இதனோடு வந்திருக்க வேண்டிய இன்னொரு படம் வராமல் போனதாலும், எங்கள் தலைவர் படத்துக்கே நீ போட்டியா என்று ஆரம்பத்தில் இருந்தே கூட இந்தப்படத்திற்கு ஒரு கடுமையான எதிர்ப்பும் எதிர்மறை விமர்சனமும் இருந்தது. அந்த எதிர்ப்பும் , எதிர்மறை விமர்சனமும், அதனோடு படம் […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பயனாளர்களே இது மரியாதையல்ல!

இன்றைய சமூக வலைத்தளங்களிலும் , வாட்ஸ் அப் செய்திகளிலும் ஒரு விஷயத்தைப் பரவலாகப் பார்க்க முடிந்தது . அரசாங்கம் மாணவர்களுக்காக அளித்த மடிக்கணினியில் உள்ள முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி மற்றும் இன்றைய முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் புகைப்படங்களை , அசிட்டோன் அல்லது தின்னர் கொண்டு அளித்து அதை மகிழ்ச்சியாக காணொளிப் பதிவு செய்து அதைப் பரவச் செய்திருக்கிறார்கள். சிலர் அதன் முன்புறம் மற்றும் பின்புறத்தில் பல்வேறு வண்ணங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டி அதை மறைத்திருக்கின்றனர். இதை விளம்பரப்படுத்தி […]

Categories
அரசியல் கருத்து சினிமா தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

சினிமாவை அரசியல் ஆக்க வேண்டாமே!

சினிமா . தெருக்கூத்து, மேடை நாடகம் ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சி. மேற்சொன்ன இரண்டும் வழக்கொழிந்து போய்விட்டன என்று சொல்லும் அளவில் தான் இருக்கின்றன. ஒரு காலத்தில் மேடை நாடகத்தில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான்களை உலகம் போற்றி வியந்த கதைகளை நாம் இன்று செவி வழிச் செய்தியாகத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.பம்மல் சம்பந்தனார், சங்கரதாச சுவாமிகள் போன்ற நாடக ஆசிரியர்களின் பெருமையை அறியாத தலைமுறை நமது. ஆனால் மேடை நாடகத்தின் அடுத்த கட்ட பரிணாமமான சினிமா அதைக்காட்டிலும் உச்சகட்ட […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

தேவை- அடிப்படை ஒழுக்கம்!

தலைவன் இல்லாத படை தலையில்லா முண்டம் என்பது ஒரு சொலவடை.தலைவன் சரியில்லாதபட்சத்தில் படை கட்டுக்கோப்பாக இல்லாமல் சிதறிப் போகும் என்பதை சில முக்கியமான அரசியல் கட்சிகளை உதாரணமாகக் கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம்..அதைப்போல வளரும் கட்சிக்கு மிக அவசியமான ஒரு தேவை என்பது தலைவனின் ஒழுக்கமும், செயலாற்றலும் , நடவடிக்கைகளும், பேச்சும், என்பதைத் தாண்டி தொண்டர்களுக்கு அந்தத் தலைவனின் மீதான பற்றும், அவனது கொள்கையின்பாற் உள்ள பிடிப்பும். தலைவனின் மீதான பற்று சற்று முன்பின் இருந்தாலும் கூட […]

Categories
அரசியல் சினிமா நினைவுகள் மறைவு

கேப்டனுக்கு நினைவஞ்சலி

ஒரு மனுஷனோட புகைப்படம் இன்று இணையமெங்கும் நிறைந்திருக்கிறது. அவரது கட்சிக்காரர்களைத் தாண்டி மாற்றுக் கட்சியினரும் ,அவரது மதத்ததைத் தாண்டி மாற்று மதத்தினரும், அவரது ரசிகர்களைத் தாண்டி பிற சினிமா நாயகர்களின் ரசிகர்களும் என்று பாகுபாடுகள் கடந்து பெரும்பாலான மக்களின் மனதில் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த மாமனிதன். இவர் கைகள் அன்னமிட்டு சிவந்த கைகள்.இவரது பிறப்பு கர்ணனின் மறுபிறப்பு.கலியுகத்தில் வாழ்ந்து மறைந்த கர்ணன் என்று எல்லோராலும் போற்றப்படும் மனித தெய்வம் மறைந்த நாள் இன்று. இரண்டாடுகள் ஆகியும் […]

Categories
அரசியல் தகவல் தற்கால நிகழ்வுகள்

புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டம்.இந்த திட்டத்தைப் பற்றி பல நேர்மறை மற்றும் எதிர்மறை பேச்சுகளும் விமர்சனங்களும் இருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தினால் எந்தவொரு முழுமையான பயனும் இல்லை, மேலும் இந்த நூறு நாள் வேலைத் திட்டம் காரணமாக விவசாயக் கூலிக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாகிப் போனது என்ற பல விமர்சனங்களும் இருந்தது. இது விமர்சனம் மட்டுமே அல்ல. உண்மையும் கூட. ஒரு புறம் பாமர ஏழை […]

Categories
அரசியல் தகவல் தற்கால நிகழ்வுகள்

S.I.R- நமது உரிமை நிலைநாட்டப்படுமா?

SIR – Special Intensive Revision.சிறப்பு தீவிர திருத்தம் இந்த சிறப்பு தீவிர திருத்தம் எதற்காக நிகழ்த்தப்படுகிறது? இறந்த வாக்காளர்களின் பெயர் நீக்க, இந்தியக் குடிமகன் அல்லாதவர்களின் வாக்குரிமையை நீக்க, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அதை நீக்க மற்றும் போலி வாக்காளர்களை நீக்க. சரி இவர்களை நீக்குவதெல்லாம் உத்தமம் தான். ஆனால் இவர்களுக்கெல்லாம் வாக்காளர் அடையாள அட்டை கொடுத்தது யாருடைய தவறு? போகிற போக்கில் ஒருவர் இருவேறு தொகுதிகளில் வாக்காளர் […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

அறிவில்லா கத்துக்குட்டி?

ரேஷனில் பொருள் வாங்க மக்கள் வரத்தேவையில்லை.நடமாடும் ரேஷன் வருகிறது. மருந்து வாங்க மருத்துவமனைக்கு மக்கள் வரத்தேவையில்லை. மருந்துகள் வீடு தேடி வருகிறது. பல அரசு சார்ந்த துறை ரீதியான வேலைகளை இணையதளத்திலேயே முடித்துக் கொள்ளலாம். இப்படி பல விஷயங்களுக்காக மக்களை அலைய விடாமல் எல்லாம் இல்லம் தேடி பல விஷயங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதைத்தாண்டி மக்களும் உணவு மளிகை என்று பல விஷயத்தையும் வீட்டில் இருந்தபடியே இணையத்தில் பதிவிட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள். சினிமாவும் கூட முன்புபோல திரையரங்குளுக்குச் […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

அரசியல் எனும் வியாபாரம்!

அரசியல் என்பது மக்கள் சேவை, மக்களின் நலன், பொது சிந்தனை , பொது வாழ்வு என்பதெல்லாம் மாறி வியாபாரமாகிப் போனது.10 ரூ போட்டு 100 ரூ சம்பாதக்க, பதவி போகத்தை அனுபவிக்கத் தான் இன்றைய அரசியல்வாதிகளும் அரசியலும். உயர்மட்டத்தில் துவங்கி அடிமட்டம் வரை இன்று இதுதான் நிலை. ஒரு காலத்தில் கொள்கை ரீதியான அரசியல் முன்னெடுப்பு, கொள்கை ஈர்ப்பு, பொது சிந்தனை என்ற காரணத்திற்காக பணக்காரர்கள் முதல் பாமரன் வரை அரசியலில் ஈடுபட்டனர். அவரவர் தாங்கள் உழைத்த […]