Categories
அரசியல் நினைவுகள்

காமராஜர் ஒரு பொக்கிஷம்!

படித்ததில் பிடித்தது ! காமராஜர் ஆட்சி காலத்துகிசு கிசு..! அவரது ஆட்சியில் எழுந்த ஒரே கிசுகிசு, இதுவாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம்,ஒரு தொழிற்சாலை தொடங்க காமராஜர் கொடுத்ததிடீர் அனுமதி ! திண்டுக்கல் நகரத்தை விட்டு வெகு தொலைவில், ஒரு தொழிற்சாலை துவங்க அனுமதி கேட்டிருந்தார்கள்.அதை பரிசீலனையில்வைத்திருந்தார்கள் அதிகாரிகள். இதை தெரிந்து கொண்ட காமராஜர், அவசரம் அவசரமாக அதிகாரிகளை அழைத்தார். ‘உடனடியாக அந்த திண்டுக்கல்காரர்களுக்கு தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுங்கள்’ என்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்து விட்டு, புறப்பட்டுப் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

இப்படி இம்சை செய்யலாமா?

ஊருக்குப் போய் வரும் வருத்தத்தைப் பற்றிய கட்டுரையை முந்தைய நாள் எழுதியிருந்தோம்.இந்த வருத்தத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக பேருந்து கட்டணங்கள், கூட்ட நெரிசல், வாடகைக் கார் ஆட்டோ கட்டணங்கள் நம்மை மேலும் பாடாய்ப்படுத்துவது உண்மை தான். நான் கல்லூரியில் படித்த காலத்தில் ஊரிலிருந்து கோவை செல்வது ஒரு பெரிய அக்கப்போர் என்றால் கோவை சென்ற பிறகு அங்கிருந்து எனது கல்லூரிக்கு மாநகரப்பேருந்தில் செல்வது அதை விடக்கொடூரமானது. ஊரிலிருந்து கோவை செல்லும் போதாவது, சில நேரம் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வியாபாரக் கொலை!

ஏதோ ஒரு படத்தில் நடிகர் விவேக் அவர்கள் நகைச்சுவையாக ஒரு விஷயம் சொல்வார்.எங்க ஊரிலெல்லாம் மருத்துவமனைக்குச் சென்றால் தான் இறந்து விடுவோமோ என்ற பயம் இருக்கிறது என்று. அதை அப்போது இருந்த கால கட்டத்தில் வெறும் நகைச்சுவையாகக் கடந்து செல்ல இயலவில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றைய நவீன மருத்துவ உலகில், சளி இருமலுக்காக டானிக் உட்கொண்ட 11 குழந்தைகள் உயிர்பலி ஆகி உள்ளது என்பது மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை உண்டு செய்திருக்கிறது என்பதில் மாற்றுக் […]

Categories
நினைவுகள்

மனம் ஒரு குழந்தை 👶

வெள்ளிக்கிழமை பேருந்துகள் கனவையும், ஞாயிற்றுக்கிழமை பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்லும்! யார் எழுதியதோ தெரியவில்லை ஆனால் மிக ஆழமான வார்த்தைகள்.யதார்த்தமாக இந்த வார்த்தைகளைக் கடந்து விட முடியாது. ஆழந்து அனுபவித்து நினைவுகளின் வலியை உணராமல் இப்படி ஒரு பெரிய விஷயத்தை ஒரு வாக்கியத்தில் சொல்லி விட இயலாது. எனது சொந்த அனுபவத்தில் , ஒவ்வொரு முறையும் சொந்த ஊருக்கு வந்து விட்டுத் திரும்பும் போது மனதில் அந்த நினைவுகளின் வலி இல்லாமல் இல்லை. அதிலும் வயதாக ஆக, […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

தேவை தொழிலாளர் நலன்!

தொழிலாளர் நலன் என்ற வார்த்தை இப்போதெல்லால் மிகப்பெரிய நிறுவனங்களை மிரட்டுவதற்காகவும், பணம் பறிப்பதற்காகவும் ஒரு சிலருக்கான ணுக போகங்களை அனுபவிப்பதற்குமான வார்த்தையாகிப் போனது. உண்மையிலேயே தொழிலாளர் நலம் அல்லது ஊழியர்கள் நலன் என்பதை இப்போதெல்லாம் ஒரு கிள்ளுக்கீரையாகத் தான், ஒரு சம்பிரதாய வார்த்தையாகத்தான் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து சிறிய முதலாளிகள் வரை பயன்படுத்துகிறார்கள். சமீபத்திய ஒரு செய்தி.டி.சி.எஸ், அதாவது டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் எனப்படும் ஐடி நிறுவனம் , வரும் ஆண்டில் 2 சதவீத ஊழியர்களை, (6 […]

Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

சாதிகள் இல்லையாடி பாப்பா?

சாமி படத்தில் ஒரு நல்ல நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு காட்சி. மறைந்த நடிகர் விவேக், குழந்தைகளை வைத்துக் கொண்டு பாடம் நடத்துவார். ” சாதிகள் இல்லையடி பாப்பா” என்று அவர் சொல்வார். உடனே குழந்தைகள் பக்கத்தில் இருந்து,நாயர் கடையில டீ வாங்கினேன், கோனார் தமிழ் உரையில படிக்கிறேன், செட்டியார் வூட்ல கடன் வாங்கினேன் என்று அந்தக் குழந்தைகள் சொன்ன உடனே, அவர் என்னையே சிந்திக்க வச்சுட்டேளே என்பார். நேற்றைய செய்தித்தாளில் ஒரு செய்தியைக் கண்டதும் எனக்கும் அப்படி […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

விளையாட்டுப் போட்டிகள் இதற்குத்தானா?

பண்டிகைகள், விளையாட்டு , பொழுதுபோக்கு இப்படி பல விஷயங்களை நாம் மதிப்பளித்து, செலவு செய்து கொண்டாடுவதும், போற்றுவதும் நம்மை பண்படுத்தவும், நமக்கு ஒரு மன ஆறுதலுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் தான். உலகின் மிக முக்கியமான ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டதற்கு முழுமுதற்காரணமே , நாடுகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தை உருவாக்கத்தான். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள், கிட்டத்தட்ட இந்திய இராணுவத்திற்கும், பாகிஸ்தான் இராணுவத்திற்கும் நிகழும் சண்டைகளுக்கு ஈடாக நிகழ்ந்து முடிந்தது என்று சொன்னால் மிகையாகாது. இந்திய வீரர்கள் […]

Categories
ஆன்மீகம் கருத்து

தேவை பூஜை மட்டுமல்ல!

அப்புறம் என்னங்க வண்டியெல்லாம் கழுவி மாலை போட்டு பொட்டு வெச்சு பூஜைக்குத் தாயாரா? ஆமாங்க இன்னைக்கு சரஸ்வதி பூஜை/ ஆயுத பூஜை ஆச்சே? படிக்கிற பிள்ளைங்க புத்தகங்களையும், தொழிலாளிகள் தங்கள் ஆயுதங்களையும், அனைத்து தரப்பு மக்களும் தங்கள் சைக்கிள் உட்பட்ட அனைத்து வாகனங்களையும் தெய்வமாக பாவித்து அலங்கரித்து பூஜை செய்வது வழக்கம் தானே? ஆனால் ஒரு விஷயம் இங்கு உணரப்பட வேண்டும்.ஒரு குழந்தை சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்களை பூஜை செய்தால் மட்டும் தேர்வில் தேர்ச்சி பெற […]

Categories
தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

அருமையான வெற்றி!

நாம் இலங்கை அணியுடனான ஆட்டத்திற்குப் பிறகு எழுதியிருந்த்தைப் போலவே இன்று இந்திய அணியின் ஆட்டக்காரர்களின் தடுமாற்றம் நம்மை கடைசி ஓவர் வரை திகிலிலேயே வைத்திருந்தது. எளிமையாக அடைய வேண்டிய இலக்கு ஒரு கட்டத்தில் கடினமான சந்தேகத்திற்குரியதாக மாறி பிறகு ஒரு வழியாக திலக் வர்மாவின் திறமையான ஆட்டத்தினால் அடைய நேர்ந்தது . நாம் குறிப்பிட்டிருந்தது போலவே சூர்யகுமார் யாதவ் அவர்களால் ரன் சேகரிப்பில் எந்த பிரயோஜனமும் இல்லை. மேலும் கில், சஞ்சு சாம்சன் ஆகியோர் வழக்கம் போல […]

Categories
அரசியல் கருத்து சினிமா தற்கால நிகழ்வுகள்

மக்களிடம் ஒரு வேண்டுகோள்!

ஒரு ஆசிரியர், ஒரு இராணுவ வீரர் ,ஒரு காவலாளி, ஒரு விஞ்ஞானி, ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் என இந்த சமூகத்திற்கு நேரடியாக சேவை செய்யும் மனிதர்களுக்கு இல்லாத மரியாதையும் அன்பும் இங்கே சினிமாக் கூத்தாடிகளுக்கு இருப்பது தான் மிகுந்த வேதனை அளிக்கக் கூடிய விஷயம். இன்று இத்தனை உயிர்கள் போனதற்குக் காரணம் ஒரு போரட்டமோ, கோரிக்கை ஆர்ப்பாட்டமோ அல்லது கலவரமோ வன்முறையோ அல்ல. ஒரு உச்சகட்ட சினிமா நடிகரைக் காண வந்த கட்டுக்கடங்காத கூட்டம். அவர் […]