காற்றில் நஞ்சை கலந்துகாசெனும் பேயை அடைந்திட,ஓசோனில் ஓட்டை விழுந்துஓயாத இரைச்சலும் பெருகி,பூச்சியும் மாண்டொழிந்துபுல்வெளிகள் காய்ந்து கருக, ஆட்டமும் அதிகம் ஆகிஆள்பவன் நான் எனக்கருதி,ஓட்டமாய் ஓடியே மனிதன்ஒன்பதாம் கோளையும் தாண்டிட,பூமியே தனக்கென கருதிபூதமாய் மாறிய மனிதன்அத்தனை வளத்தையும் சுரண்டிமொத்தமாய் அபகரிக்க நினைத்தான். ஆர்ப்பரித்து வந்த கடல்ஆட்களை கொன்று குவித்தும்,சிலிர்த்து எழுந்த கோளதுவாய்பிளந்து கொன்று குவித்தும்,வெடித்து கிளம்பிய எரிமலைவெப்பத்தால் கருக்கி எரித்தும்திருந்தவே இல்லை மனிதன்திமிர் பிடித்ததாலே! பொறுத்துக் கொண்ட அன்னைபொங்கி விட்டாள் இன்றுகொரோனா எனும் கிருமிகொலை செய்கிறது நின்று,அகங்காரம் கொண்ட […]
Category: இலக்கியம்
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினும் தள்ளாமை நீர்த்து. திருவள்ளுவர், குறள் 596 நாம் சாதிக்க நினைக்கும் காரியங்களை சிறியதாக நினைக்காமல் உயர்ந்த லட்சியங்களை சிந்தித்து அதை நோக்கிப் பயணிக்க வேண்டும்.அது முடியுமா முடியாதா என்ற சிந்தனையை விட்டு, ஒருவேளை அது முடியாவிட்டாலும் கூட அதை நான் அடைந்து விடுவேன் என்ற நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதை விளக்குகிறது இந்தக் குறள். இன்றைய சூழலில் மக்களின் மனநிலை மிகவும் குறுகிப் போனது.நம்மால் இது முடியாது, நம்மால் அது முடியாது, […]
பிரிவின் வலியை சொல்லும் ராசாத்தி என்ற பாடலை பற்றி அருண் பாரதி இங்கு எழுதுகிறார். அதே பெயரில் ஒரு பாடலை கொண்ட சமீபத்தில் வெளியாகியிருக்கும் வள்ளியம்மா பேராண்டி என்ற இசைத்தொகுப்பை பற்றி இந்த கட்டுரை. பிக்சன் பிக்சன் (பெரிய மகன்) என்று இவரது அம்மாவும் அப்பாவும் அழைக்க, பிக்சன் இன் உலகத்துக்குள் நுழைகிறோம். “பொக்க பொக்க பொக்கை வள்ளி பாட்டி, you‘re மை ஸ்வீட்டி” என்று விளையாட்டாக ஆரம்பமாக்கிறது இவரது கதை. பிக்சன் என்பவர் வேறு யாருமில்லை […]
பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து திருவள்ளுவர், குறள் 738 இன்று 78 ஆவது சுதந்திர தினத்தை பெருமிதத்துடன் கொண்டாடும் தருணத்தில் இரண்டாயிரத்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த குறளின்படி நமது நாடு செழிப்பாக உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தக்குறளின் படி நோயற்ற வாழ்வு, நல்ல செல்வம், நல்விளைச்சல், மக்களின் இன்ப வாழ்வு, நற்காவல் ஆகிய இந்த ஐந்தும் தான் ஒரு நாட்டிற்கு அணிகலன். அதாவது நாட்டில் நல்ல […]
குறளுடன் குட்டி கதை -பொறையுடைமை
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ். குறள் 156, திருவள்ளுவர் அதாவது ஒருவர் செய்த தீங்குக்காக அவரை தண்டித்தவருக்கு அந்த ஒரு நாள் தான் இன்பம். ஆனால் அதைப் பொறுத்துக் கொண்டவருக்கு , இந்த உலகம் அழியும் வரை புகழ் உண்டாகும். இந்த திருக்குறளை நம்மாளு ஒருத்தரு கொஞ்சம் வித்தியாசமா புரிஞ்சிக்கிட்டாரு. எப்படின்னு விளக்கமா இந்தக் கதை மூலமா தெரிஞ்சிக்கோங்க. நம்மாளு விமான நிலையத்துல வேலை செய்யிற ஆளு. இந்தக்காலம் மாதிரி இல்ல, அந்தக்காலத்துல, அதாவது […]
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம் குறள் 305, திருவள்ளுவர் இந்த திருக்குறள் அறத்துப்பாலில், துறவறவியலில் வெகுளாமை என்ற தலைப்பில் வருகிறது. கோபத்தை கட்டுப்படுத்தாத மனிதன் அந்த கோபத்தால் தானே அழிகிறான் என்ற பொருளைக் கொண்டது. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க –தன்னை ஒருவன் காக்க விரும்பினால், அவன் சினம் ( கோபத்தை) கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். காவாக்கால்– அப்படி கட்டுப்படுத்த இயலாத காலத்தில் தன்னையே கொல்லுஞ் சினம்– அந்த சினம் அவனையே கொன்று விடும். இதையே […]
காதல் என்பதைக் கடந்திராதோரும் உளரோ? காதல் தோல்விகளும், நமக்குப் பிடித்த பெண், சூழ்நிலை காரணமாக வேறொருவன் கை பிடிப்பதைப் பார்க்கும் அவலநிலையும் இங்கே பலருக்கும் புதிதல்ல. அப்படி ஒரு சூழலுக்கு எழுதப்பட்ட அருமையான பாடல் வரிகளை நினைவுகள் வாசகர்களோடு ஒரு முறை பகிர்ந்து கொண்டு ரசித்து தோல்வியை நினைத்து உருகுவதில் சுகமடைகிறோம். கல்யாணம் முடிந்து மகிழ்ச்சி இல்லாமல் போகும் அந்தப் பெண் ,அவள் காதலை நினைத்து வருந்துகிறாளோ? அல்லது பெற்றவர்களை , ஊரைப்பிரிந்து புது இடம் புகுவதால் […]