Categories
கருத்து சினிமா

தலைவன் தலைவி – திரை விமர்சனம்

இரண்டு பறவைகள் காதலிப்பது அழகு தான். ஆனால் அந்தக் காதல் நிலையாக ஒரு மரக்கிளை, ஒரு பறவைக்கூடு, இதெல்லாம் அவசியம். மனிதர்களின் காதலும் அவ்வாறு தான்.நல்ல அன்பான கணவன் மனைவியின் அன்பும் உறவும் நீடித்து நிலைத்திருக்க, அவர்களுக்கு இடையிலான அன்பு மட்டும் போதாது. சுற்றமும், உறவும், நட்பும், குடும்பமும் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை ஜாலியான வகையில் எடுத்துரைத்த படம் தலைவன் தலைவி. பார்த்த உடன் காதல், தெய்வீகமான காதல் என்று இழுக்காமல், பெண் பார்க்கும் […]

Categories
சினிமா

மாரீசன்- திரை விமர்சனம்

நல்ல படங்களில் லாஜிக் பார்க்கத் தோன்றுவதில்லை.கதை போகும் போக்கில் நாமும் இனிமையாகப் பயணிக்கலாம் என்று தான் தோன்றும். அதுபோல ஒரு இனிய பயணம் சொல்லும் கதை. ஒரு மறதி வியாதி உள்ள நடுத்தரம் தாண்டிய வயது உள்ள நபர், தன் வீட்டிற்குத் திருட வந்த திருடரிடம் உதவி கேட்டு அவருடனே பயணிக்கும் கதை. கதையின் ஒரு நாயகனான பகத் பாசில் ஒரு திருடன்.நாகர்கோவிலில் இருக்கும் ஒரு வீட்டில் திருட உள்ளே நுழைகிறார். அங்கே கதையின் இன்னொரு நாயகனான […]

Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

DNA – திரை விமர்சனம்

திருமணமான தம்பதிகளை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துவது வழக்கம். அந்தப் பதினாறு செல்வங்களுள் மக்கட்பேறு, அதாவது பிள்ளைச் செல்வமும் முக்கியமான ஒன்று. திருமணமான தம்பதிகளுக்கு இப்போதைய காலத்தில் இருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் அதுவே.ஏனென்றால் இந்த வாழ்க்கை முறை நம்மை அந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது. குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து, உடலை வருத்தி, IVF போன்ற மருத்துவ முறைகளை பலரும், அது வேணாம்டா சாமி நாம ஏதாவது குழந்தைய தத்தெடுத்து வளர்க்கலாம் என்று […]

Categories
அரசியல் கருத்து சினிமா தற்கால நிகழ்வுகள்

மௌனம் பேசுமா?

சமுதாய அக்கறையும் பொறுப்பும் உள்ள ஆட்கள், எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மிகப் பிரபலமான ஆட்கள், நேரத்திற்கு ஏற்றாற் போல, வேடமிட்டால் அது அவர்ளின் மீதான மரியாதையை காலி செய்து விடும். கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவல்துறையினரால், விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பல நடிகர்களும் எந்த விதக் கருத்தும் தெரிவிக்காதது சமூக வலைதளங்களில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் சாத்தான்குளத்தில் தந்தையும் […]

Categories
சினிமா

3 BHK- திரை விமர்சனம்

கல்யாணம் பண்ணிப் பார், வீட்டையும் கட்டிப் பார் என்று நம்மூரில் ஒரு சொலவடை உண்டு. அதற்குக் காரணம் இந்த இரண்டு விஷயங்களையும் செய்து முடிக்க நாம் படும் அவஸ்தைகளும் மெனக்கெடல்களும் தான். அப்படி இதில் இரண்டாவதாக சொல்லப்பட்ட வீடு என்ற விஷயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் 3 BHK. இதில் மையக்கரு வீடு என்றாலும் படத்தில் குடும்பத்திற்கான அத்தனை விஷயங்களும் உள்ளடங்கியிருப்பது மிகச்சிறப்பான விஷயம் இது படத்தை நமக்கு மிக அருமையான படமாக உணர்த்துவதற்கு காரணமாக […]

Categories
சினிமா

பறந்து போ- திரை விமர்சனம்

சில படங்கள் அழகு, சில படங்கள் கவிதை, சில படங்கள் இழுவை, சில படங்கள் உணர்ச்சி , சில படங்கள் மகிழ்ச்சி. இந்தப்படம் இத்தனையும் கலந்த கலவை. கற்றது தமிழ், பேரன்பு போன்ற கனமான படங்களைத் தந்த இயக்குனர் ராம், இலகுவான மகிழ்ச்சி மட்டுமே நிறைந்த ஒரு படத்தைத் தந்திருப்பது சுகம். ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான உறவு.தந்தை மகனை வளர்ப்பது, மகன் தந்தையை வளர்ப்பது என்ற அன்புப் பரிமாற்றத்தைப் பற்றிய படம். நமது காலங்களில் தந்தை […]

Categories
சினிமா நினைவுகள்

தொலைந்து போன மகிழ்ச்சி

சர்க்கஸ் என்றாலே நம்மில் பெரும்பாலானோர்க்கு ஜெமினி சர்க்கஸ் தான் ஞாபகத்திற்கு வரும். சிங்கம் புலி யானை கரடி எல்லாம் வைத்து, மிகப் பெரிய அளவில் பிராம்மாண்டமாக நிகழும் சர்க்கஸ் அது. நகராட்சி, மாநகராட்சிகளில் அது போன்ற சர்க்கஸ் காட்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் சிற்றூர்களில், கிராமங்களில், சிறிய அளவிலான சர்க்கஸ்கள் நிகழும். புதன், வியாழக்கிழமைகளில் துவங்கி, ஞாயிற்றுக்கிழமைகளில் முடிந்துவிடும். கூட்டம் இருந்தால் ஓரிரு நாட்கள் தொடரும். ஊரில் உள்ள சின்ன சின்ன பொட்டல்களில் கூடாரம் அமைத்து, மரப்பலகையிலான […]

Categories
சினிமா

குபேரா- திரை விமர்சனம்

LKG என்ற படத்தில் ,RJ பாலாஜி, ஒரு காதல் ஜோடியைப் பிரிக்க, அவர்கள் இருவரின் அலைபேசிகளை ஒரு இரவு பரிமாற்றம் செய்யச்சொல்வார். அதையே படமாக எடுத்த, லவ்டுடே படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதே போல, லக்கி பாஸ்கர் படத்தில் ராம்கியும், துல்கர் சல்மானும் பிச்சைக்காரர்களை வைத்து ஒரு திருட்டு வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள். அதையே முழுப்படமாக நாகார்ஜூனையும், தனுஷையும் வைத்து எடுத்தால் படம் பட்டாசாக வரும் என்று நினைத்து எடுத்து விட்டார்கள். எடுத்ததெல்லாம் சரிதான்,ஆனால் […]

Categories
சினிமா

லெவன்- திரை விமர்சனம்

சில நல்ல சினிமாக்களை நாம் திரையில் தவற விடுவோம். காரணம், அந்த சினிமாக்கள் வந்த காலத்தில் வரும் வேறு பெரிய சினிமாக்களோ, அல்லது நமக்கு மிகவும் பழகிப் போகாத நடிகர்களோ நடித்திருந்திருக்கலாம். அப்படி இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு வெளிவந்த லெவன் என்ற படம் சத்தமே இல்லாமல் பலர் மனதைக் கவர்ந்து இன்றும் திரையிலும், ஓடிடி தளத்திலும் வெற்றி நடை போடுகிறது. படத்தைப்பற்றி ஆஹா , ஓஹோ என்று சமூக வலைத்தளங்களில் பலர் புகழ்ந்து தள்ளியபோது எனக்குள் […]

Categories
சினிமா

படை தலைவன் – விமர்சனம்

படைத்தலைவன் இல்லை படை தலைவன் என்று தான் பெயரிட்டிருக்கிறார்கள். இரண்டு பெயர்ச்சொல் ஒன்றிணையும் போது இடையில் வல்லினம் மிகுந்து படைத்தலைவன் என்று தான் இது இருந்திருக்க வேண்டும். என்ன காரணத்தாலோ, வல்லினத்தை விட்டு விட்டார்கள். அதேபோலத்தான் படமும். சில விஷயங்களை விட்டு விட்டார்கள். படத்தின் மூலக்கதை என்பது என்பதை சூசகமாக இறுதிக்காட்சி வரை நமக்கு சொல்லவே இல்லை. அந்த மூலக்கதையை பற்றிய காட்சிகளை படத்தின் ஆரம்பத்தில் ஏதும் காட்டியிருந்தார்களா என்று தெரியவில்லை. நான் சிறிது தாமதமாகத்தான் படம் […]