Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

பிரியாணி அண்டா கவிழ்த்தப்பட்டது!

மனிதர்களில் பல ரகம். அன்பின் வடிவான அன்னை தெரசாவும் மனிதன் என்ற பிரிவு தான். கள்ளக்காதல் இச்சைக்காக, உடல் சுகத்துக்காக, கட்டிய கணவனுக்கு துரோகம் இழைத்து, பெற்ற இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்வளும் மனிதப் பிறவி தான். “அபிராமி, அபிராமி… மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல. அதையும் தாண்டிப் புனிதமானது.” சமைக்கும் போது மனக்கும் பிரியாணி்போல, சாப்பிடும் போது ருசிக்கும் மசாலா போல, உவமிக்க இயலாத உன்னத காதல். டிக்டாக்கில் உருவாகி டக் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

எனக்குக் கிடைத்த பரிசு!

நான் எழுதிய எழுத்துக்குக் கிடைத்த பரிசு , எனது சமூக வலைத்தள பக்கம் முடக்கம். நமது முந்தைய பதிவான கிட்னி விற்பனை செய்து வாழ்வு நடத்தும் அவல நிலை என்ற பதிவின் காரணமாக என்னுடைய பக்கம் முடக்கப்பட்டது. தொடர்ந்து நான் இந்த எழுத்துக்களின் வழியாக நண்பர்களோடு, உறவுகளோடு ஒரு தொடர்பில் இருக்க விரும்புவதால் புதிய கணக்கைத் துவங்கியுள்ளேன். தினசரி நமது நினைவுகள் பக்கத்தில் பதிவிடப்படும் கட்டுரைகளை சராசரியாக 30-40 நபர்கள் வாசித்து வரும் காரணத்தால் , இதைத்தொடர்ந்து […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் வணிகம்

ஏமாந்து கொண்டே இருக்கிறோமே?

அறிமுகமாகிறது, மீரா அரிசி கஞ்சி ஷாம்பூ. அரிசி கஞ்சியின் இயற்கையான நற்குணத்தால் இதை உபயோகிக்கத் துவங்கிய ஓரிரு முறையிலேயே நல்ல மாற்றம் தெரியும். சிகை மினுமினுக்கும், உறுதி பெறும் என்று இதன் அறிமுக விழாவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு லிட்டர் ரூ.215 மட்டுமே. இதைத் தான் என் பாட்டியும் சொன்னார்கள். குளிக்கும் போது லேசாக அரசிக் கஞ்சியை தலையில் தேய்த்துக்குளி, முடி நல்லா இருக்கும் என்று. ஆனால் வானொலியிலும், தொலைக்காட்சிப் பெட்டியிலும் இதே மீரா சிகைக்காய் […]

Categories
சிறுதுணுக்கு தகவல் நினைவுகள்

The kiss of life.

1967 ம், ஆண்டு எடுக்கப் பட்ட “The Kiss of Life.” என பெயரிடப் பட்ட புகைப்படமே இது, ராண்டல் மற்றும் தொம்சன் ஆகிய இருவரும், வழமையான எலேக்ரிசிட்டி பவர் கேபிள் மீது சீர்திருத்தம் செய்து கொண்டிருந்த போது, திடீர் என, ராண்டல் உடல் மின்சாரத்தினால் தாக்கப்பட்டு அடுத்த வினாடியே, அந்த வயர்களில் சிக்குண்டு நினைவிழந்து போகிறார். அவர் கீழே, விழாமல் தாங்கிப் பிடித்த தொம்சன், செயற்கை சுவாசம் கொடுக்கும் போது எடுக்கப் பட்ட படமே இது […]

Categories
கருத்து குட்டி கதை தகவல்

நல்வாழ்க்கை வாழ..

ஒரு மனநல மருத்துவர் விளக்கிய சம்பவம்..ஒரு சின்ன குழந்தையின் நடவடிக்கையில் பெரிய மாற்றம். அதீத கோபம். சரியாக சாப்பிடுவதில்லை, அப்பா அம்மாவின் மீது பெரிய வெறுப்பு. இது ஏன் என்பது புரியாமல், அந்தக் குழந்தையின் தாய் தந்தை, அதை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அவரிடம் அந்த குழந்தை கூறிய விஷயங்கள் பெரும் அதிர்ச்சி.“என் அம்மா எனக்குப் பிடிச்சதே செஞ்சு தரமாட்டாங்க, அக்காவுக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் சமைப்பார்கள். எங்கள் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியில் எனக்கு பிடிச்ச […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

தன்னைத்தானே அழித்த ஒழுங்கீனம்

சுய ஒழுக்கம், மனசாட்சி என்பதையெல்லாம் மறந்து விட்டால்,மனிதனுக்கும், கொடிய மிருகங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. படித்தவன், படிக்காதவன், அவனது பின்புலம், பூர்வீகம் என்பதெல்லாம் இங்கே ஒரு பொருட்டே அல்ல. முள்செடியில் மலரும் உண்டு, பூக்களில் விஷமும் உண்டு என்பதைப் போல, ஒரு மருத்தவர் கேவலம் 25 சவரன் நகைக்காக ஒரு இளம்பெண்ணை துடிக்கத் துடிக்க மூச்சடைத்துக் கொலை செய்திருக்கிறார் என்ற செய்தி நமக்கு மிகுந்த மனவேதனையத் தருகிறது. சென்னை கொடுங்கையூர் பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் வரலாறு

உயரமான செனாப் பாலம் உருவான வரலாறு.

உலகின் மிக உயரமான ரயில் பாலம்.செனாப் ஆற்றின் குறுக்கே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்கால் – கவுரி பகுதிகளுக்கு இடையே இன்று கம்பீரமாக எழுந்து நிற்கிறது. ஆற்றுப் படுக்கையிலிருந்து 359 மீட்டர் அதாவது 1180 அடி உயரத்தில் கம்பீரமாக உலகே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு உயர்ந்த அந்தப் பாலத்தில் நம் நாட்டின் தற்போதைய பிரதமர் திரு.மோடி அவர்கள் கம்பீரமாக மூவர்ணக்கொடியோடு நடந்து வர, அதை அந்தக் கட்சியினர் தம் கட்சிக்கே உரிய சாதனை போல, சமூக வலைத்தளங்களில் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

தாய் மொழியும், தந்தையின் ஊரும்

சொந்த ஊர் , மொழி என்பது எப்போதும் ஒரு தனி உணர்வு தான் நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சொந்த ஊர் பற்றியோ அல்லது சொந்த ஊர் சம்பந்தமான ஆட்களைப் பற்றியோ, பேசும் போதும், அவர்களைப் பார்க்க நேர்ந்தாலோ அல்லது பழக நேர்ந்தாலோ அது ஒரு தனி இன்ப உணர்வு. இன்னும் சிறிது நேரம் இவர்களோடு உறவாடக்கூடாதா, என்று மனம் ஏங்கும்.ஆனாலும் பணியோ சூழ்நிலையோ அதை அனுமதிக்காத போது கனத்த இதயத்தோடு, அவர்களிடம் விடைபெற்று, அப்பப்ப […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

சேட்டுகளுக்குக் கொண்டாட்டம்?

கையிலிருக்கே தங்கம் கவலை ஏன்டா சிங்கம் ? இப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்திருப்போம். ஏழை, நடுத்தர, மற்றும் மேல்தட்டு நடுத்தர மக்களின் சேமிப்பு என்பதே பெரும்பாலும் தங்கமாகத்தான் இருக்கும். இந்த வகையறாவில் யாரும், ஷேர்களையோ, பாண்டு பத்திரங்களையோ, வங்கியில் பெரிய தொகையையோ சேமிப்பாக வைத்துக் கொள்வதை விட, வீட்டில் இருக்கும் பெண்களின் பெயரைச் சொல்லி, உனக்குன்னு இவ்வளவு நகை, நாளைக்குப் பிள்ளைய கல்யாணம் பண்ணிக் கொடுக்க இவ்வளவு நகை என்று பார்த்துப் பார்த்து தங்க நகைகளைத் தான் […]

Categories
இலக்கியம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மதுரை குஞ்சரத்தம்மாள்

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா? தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் –1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது – கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது – பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது – அதில் நாம் அவசியம் […]