Categories
சினிமா தகவல் நினைவுகள்

நடிகர் திலகம் சிவாஜியின் புகழ்

படித்ததில் பிடித்தது. தமிழ் படங்களுக்கு கர்நாடகத்தில் பிரச்சனைகள் பல ஆண்டுகாலமாகவே நடந்து வருவதுதான். அந்தச் சமயத்தில் சில கர்நாடக அமைப்புகள் தமிழ் படங்களை திரையிட விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்து வருவதும் வாடிக்கையான ஒன்றுதான். இதை இங்கே இப்போது சொல்லக் காரணம் என்னவென்றால், முன்பு பல வருடங்களுக்கு முன்பு ஒரு கன்னட நடிகர் சிவாஜி வெறியராகவே இருந்தவர். அவர் சொன்ன ஒரு கருத்துக்காகவே அவருக்கு எதிராக கண்டனங்களும், ஆர்ப்பாட்டங்களையும் கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் செய்தன.​அந்த நடிகர் சொன்ன […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

பொங்கல் பரிசு வாங்கியாச்சா?

பொங்கல் பண்டிகை என்றாலே சிறப்பு தான். தமிழர் பண்டிகை , பாரம்பரிய விழா, மத வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் ஒரு விழா என்பது இன்றளவிலும் மாறாமல் உள்ளது. விவசாயிகள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படுகிறது என்பது பாரம்பரியம் என்றாலும் இன்றளவிலும் விவசாயம் அல்லாத மற்ற தொழில் செய்யும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுவது அதன் தனிச்சிறப்பு. இதில் சமீப காலமாக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் பொங்கல் பரிசுத் தொகுப்பு. எனக்கு விவரம் […]

Categories
சினிமா தகவல் நினைவுகள்

பராசக்தியின் கதை!

படித்ததில் ஆச்சரியப்பட்டு ரசித்தது பராசக்தி..​1952-ஆம் ஆண்டு தீபாவளித் திருநாள். மதுரையின் முக்கியமான பகுதியான மேற்குப் பெருமாள் மேஸ்திரி வீதியில் ஒரு பெரும் பரபரப்பு. பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பிச்சைமுத்து என்பவர் ஆசியாவிலேயே மிகப்பெரிய திரையரங்கமான ‘தங்கம்’ தியேட்டரை கட்டி முடித்திருந்தார். சுமார் 52,000 சதுர அடி பரப்பளவு, 2,563 இருக்கைகள் என பிரம்மாண்டமாக உருவான இந்தத் தியேட்டரை, எப்படியாவது அந்த தீபாவளிக்குத் திறந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பிச்சைமுத்து இருந்தார்.​​தங்கம் தியேட்டரின் முதல் படமாக […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

அடடே இதுதான் சங்கதியா?

உலகில் நம்மைச்சுற்றி சில விசித்திரமான விஷயங்கள் நமக்குப் புரியாத தெரியாத நிறைய விஷயங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. நான்கு புது இடங்களுக்குச் சென்று அந்த இடங்களைக் கண்டு அனுபவிக்கும் போது கிடைக்கும் அந்த இனிமையும், அந்தப் புது அனுபவமும் வேறு எதுவும் தர இயலாது. அப்படி எனக்கு பணி நிமிர்த்திமாக தமிழ்நாடு தாண்டி சில இடங்களைக் காண வாய்ப்பு அமைந்தது. அதில் எனக்குப் பிடித்தமான நாசிக் பற்றி எழுதியிருந்தேன்.அகமதாபாத் சென்றிருந்த போது அந்த ஊர் இன்றளவிலும் […]

Categories
அரசியல் கருத்து சினிமா தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

சினிமாவை அரசியல் ஆக்க வேண்டாமே!

சினிமா . தெருக்கூத்து, மேடை நாடகம் ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சி. மேற்சொன்ன இரண்டும் வழக்கொழிந்து போய்விட்டன என்று சொல்லும் அளவில் தான் இருக்கின்றன. ஒரு காலத்தில் மேடை நாடகத்தில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான்களை உலகம் போற்றி வியந்த கதைகளை நாம் இன்று செவி வழிச் செய்தியாகத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.பம்மல் சம்பந்தனார், சங்கரதாச சுவாமிகள் போன்ற நாடக ஆசிரியர்களின் பெருமையை அறியாத தலைமுறை நமது. ஆனால் மேடை நாடகத்தின் அடுத்த கட்ட பரிணாமமான சினிமா அதைக்காட்டிலும் உச்சகட்ட […]

Categories
அரசியல் சினிமா நினைவுகள் மறைவு

கேப்டனுக்கு நினைவஞ்சலி

ஒரு மனுஷனோட புகைப்படம் இன்று இணையமெங்கும் நிறைந்திருக்கிறது. அவரது கட்சிக்காரர்களைத் தாண்டி மாற்றுக் கட்சியினரும் ,அவரது மதத்ததைத் தாண்டி மாற்று மதத்தினரும், அவரது ரசிகர்களைத் தாண்டி பிற சினிமா நாயகர்களின் ரசிகர்களும் என்று பாகுபாடுகள் கடந்து பெரும்பாலான மக்களின் மனதில் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த மாமனிதன். இவர் கைகள் அன்னமிட்டு சிவந்த கைகள்.இவரது பிறப்பு கர்ணனின் மறுபிறப்பு.கலியுகத்தில் வாழ்ந்து மறைந்த கர்ணன் என்று எல்லோராலும் போற்றப்படும் மனித தெய்வம் மறைந்த நாள் இன்று. இரண்டாடுகள் ஆகியும் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

நலிந்த கலைஞனின் கேள்வி.

படித்து பாதித்துப் பகிர்ந்தது! கேரளா காரனுக என்னைக்காச்சிம் தவில் நாதஸ்வரம், தப்பாட்டம் பறைனு யூஸ் பன்றாங்களா. நீங்க மட்டும் ஏன் எல்லாத்துக்கும் அவனுகளோட சிங்காரி மேளம், சென்டை மேளம்னு கூட்டிவந்து நம்மளோட பாரம்பரிய வாத்தியகாரவுங்க வகுத்துல அடிக்கிறிங்க. நம்ம ஊரு நையாண்டி மேளத்துக்கு ஈடா ஏதாவது இருக்கா… கீழ்கண்ட நாட்டுப்புறக்கலைகளில் எதை, எதை பார்த்துள்ளீர்கள்? சொல்லிட்டு தான் போங்களேன்..

Categories
அறிவியல் சினிமா தகவல் நினைவுகள் மறைவு

புரூஸ்லி இறப்பின் மருத்துவ விளக்கம்.

படித்துப் பகிர்வது! புரூஸ்லி இறந்தது எப்படி? ஹைப்போநாட்ரீமியா என்றால் என்ன? அதிகமாக தண்ணீர் பருகுவதால் ஆபத்து உண்டா? தற்காலத்தில் இளையோரிடத்தில் யார் விரைவாகஅதிக குளிர்பானம் / பீர் உள்ளிட்ட திரவங்களைப் பருகுகிறார்கள் என்று போட்டிகள் நடப்பதைக் காண முடிகிறது.இவை உயிருக்கு ஆபத்தானவை. எப்படி வாருங்கள் புரூஸ்லீயின் மரணம் வழி பாடம் கற்போம் டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லாபொது நல மருத்துவர்சிவகங்கை ஹாங்காங் நகரில் 20.7.1973 அன்றுஹாலிவுட் அதிரடி மன்னன் புரூஸ்லீ சந்தேகத்துக்கிடமான முறையில் மரணமடைந்தார் அவருக்கு விஷம் வைக்கப்பட்டதாகவும்பயிற்சி செய்யும் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

அமீபா கற்றுத் தந்த பாடம்

அமீபா.இந்தப் பெயரைக் கேட்டதும் இப்போதைக்கு எல்லோருக்கும் நினைவில் வருவது இப்போதைய மூளை காய்ச்சல் ஏற்படுத்தும் அமீபா தான்.சபரிமலை செல்லும் பக்தர்களை மூக்கைப் பொத்திக் கொண்டு குளிக்கும்படியான உத்தரவுகளும், அமீபா காய்ச்சலுக்கான அறிகுறிகளும் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் இது சரிசெய்யக்கூடியது தான், யாரும் அந்தளவிற்கு பயப்பட வேண்டாம் என்ற செய்தி ஆறுதல்.இதே அமீபா என்ற பெயரைக் கேட்டதும் எனக்கு இன்னொரு விஷயமும் நினைவில் வந்தது. எந்த வகுப்பில் என்று தெரியவில்லை, அறிவியல் பாடத்தில் அமீபா படம் வரைந்து பாகம் […]

Categories
கருத்து நினைவுகள்

அந்த நாள் ஞாபகம்…

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே, நண்பனே! அன்று போல் இந்த நாள் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே ?என்று சிவாஜி கணேசனில் துவங்கி இன்று எஸ்.ஜே.சூர்யா வரை, வாழ்வில் பெரும்பாலானோர் வாழ்வின் கடந்த காலத்தை தான் இனிமை என்று சொல்வது எந்த விதத்திலும் மறுக்க முடியாத 100 சதவீத உண்மை. இந்த உலகில் உள்ள மனிதர்களிடம் திடீரென கடவுள் வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் பெரும்பாலானோரின் பதில் […]