தியாகி இமானுவேல் சேகரனார்.(9/10/1924 – 11/09/1957). இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து, பிறகு தான் பிறந்த சமூகத்தின் நலனுக்காக சமூகப்பணியில் ஈடுபட்டு, இளம் வயதில் உயிர்துறந்த தியாகி. ஆசிரியர் மற்றும் வழக்கறிஞரான இவர் தந்தையிடமே பாடத்தையும் சமுதாய சிந்தனையையும் கற்றவர். சிறுவயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வமிகுந்தவராகத் திகழ்ந்தவர். தனது 18 ஆவது வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று மூன்று மாதம் சிறை தண்டனை பெற்றார். தனது 19 ஆவது வயதில் இரட்டைக்குவளை ஒழிப்பு […]
