நேற்றைய பரபரப்பான செய்தி, அனைவருக்கும் பரவசமளித்த செய்தி இந்தியாவின் இளம் வீரர் சதுரங்கப் போட்டியில் உலகளவிலான முதலிடம்பெற்று வாகை சூடிய செய்தி. அதுவும் அதில் மேலும் சிறப்பம்சம் என்பது இவர் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பது. உலகளவில் சதுரங்கப்போட்டியில் இளம் வயதில் வாகை சூடி வரலாறு படைத்த குகேஷ் தொம்மராஜூ ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும், சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.அவரது தந்தை ரஜினிகாந்த் தனது மருத்துவப் படிப்புக்காக, சென்னை வந்து இங்கேயே தங்கிவிட்டார். அவர் காது, மூக்குத் தொண்டை நிபுணர். […]
