சில விஷயங்களை நாம் மிக யதார்த்தமாகப் பழகிக் கொண்டோம்.கள்ளு இறக்கத் தடை இருக்கும் இதே மாநிலத்தில் கொக்கைன் மிக எளிதாக வெகு காலமாகப் புழக்கத்தில் இருந்திருக்கிறது. அதுவும் மிகப் பிரபலமான மனிதர்களிடையே அது சர்வ சாதாரணமாகக் கைமாறியிருக்கிறது. நாம் இதுநாள் வரை கள்ளு இறக்க ஏன் தடை? அதுவும் ஒரு தொழில் தானே?பனை மரங்களின் எண்ணிக்கை கூடும், அதைச் சார்ந்த தொழில்கள் பெருகும் என்று கேள்வி கேட்டதுமில்லை. கொக்கைன் போதையில் சினிமா பிரபலங்கள் என்பதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடையவுமில்லை […]