சாமானியர்களை மிரட்டுகின்றன விமான நிலைய சோதனைகளும், விதிமுறைகளும். ஆமாம். நான் முதல்முறையாக விமானத்தில் பயணிக்கக் கிளம்பிய போது யாதார்த்தமாக எனது பையை அங்கே கீழே வைத்து விட்டு, சிறிது நகர்ந்து என் குடும்ப்க் கூட்டத்தை ஒருங்கிணைக்கலாம் என்று நகர்ந்த போது அங்கிருந்து பாதுகாவலர்கள் லப லப என்று கத்தியது, ஒரு மாதிரி மனதில் பாரத்தை தான் ஏற்படுத்தியது. ஆனால் அது அவர்களது பணி, விதிமுறை என்பதை நான் அறியாமல் இல்லை. பிறகு பல வருடம் கழித்து விமானம் […]
Category: தற்கால நிகழ்வுகள்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் , ஆனால் கோவில்பட்டியில் குடிநீருக்கே திண்டாட்டம் என்று முன்னாளில் ஒரு கேலி சொலவடை எங்கள் ஊரில் உண்டு. அதாவது எங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் இருந்த போது இந்த சொல்வடை சொல்லப்படுவது உண்டு. இது எதற்காக சொல்லப்பட்டது என்றெல்லாம் ஆராயத் தேவையில்லை. சும்மா ஒரு கோர்வையான வார்த்தைக்காக சொல்லப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் அது கோர்வைக்காக அல்லாமல் உண்மையாகவே சொல்லப்படலாமோ என்று தோன்றுகிறது. ஆம், இந்து முன்னனி, இந்து ஆதரவு, இந்து முன்னேற்றம், […]
இஸ்ரோ தனது 100 ஆவது ராக்கெட்டை விண்வெளியில் வெற்றிகரமாக ஏவிய அதே நாளில் தான் இன்னொரு துக்க செய்தியைக் கேட்டறிந்தோம். மஹா கும்பமேளாவில் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் ஆற்றில் குளிப்பதற்காகத் திரண்ட காரணத்தால் 30 பக்தர்கள் மரணம், அதிகமானோர் காயம். இந்தப்பக்கம் நமது மாநிலத்தின் ஆளுநர் சனாதான தர்மத்தைப் பாதுகாப்போம் வளர்ப்போம் என்று பேட்டி கொடுக்கிறார். இப்படி சனாதான தர்மத்தைக் காப்போம் என்று பேட்டி அளிக்கும் எந்த மிகப்பெரிய ஆளுமையும் அந்த கும்ப மேளா கூட்டத்தில் […]
தனியார் நலனுக்காகத் தவிக்கும் பொதுமக்களின் கதையைப் பார்க்கும் முன்பு நமக்கு நாமே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளலாம். ஒரு பெரிய ஊரில், போக்குவரத்து நெரிசல் இருக்கும் ஊரில், ஒரு மிகப்பெரிய திரையரங்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். அங்கே வந்து படம் பார்க்க மக்கள் கூட்டமாக வரப்போவது உறுதி. அந்தத் திரையரங்கம், இருக்கைகளை அதிகப்படுத்திக் கொள்ளை, லாபம் சம்பாதிக்க முடிவெடுத்து, தனக்கு இருந்த நிலத்தில் மொத்தமாக பெரிய அளவில் அரங்கத்தைக் கட்டி விடுகிறது. அது நல்ல திரையரங்கம் என்பதால் அங்கே […]
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஆம்புலன்ஸ் கதவு திறக்க முடியாத காரணத்தால் , ஒரு உயிர் போனதை அறிந்து வருந்திய நாம்,வளர்ச்சியடைந்துவிட்டதாகப் பெருமிதம் கொள்ளும் நமது மாநிலத்தில் நிகழ்ந்த கொடுமையை எப்படி சகித்துக்கொள்ளப் போகிறோம்? வளர்ச்சி அடைந்து விட்டோம் என்று புள்ளி விவரங்கள் சொல்வதெல்லாம் சரிதான்,ஆனால் கடைநிலைப் பாமரனும் அந்தப்புள்ளி விவரத்தில் காட்டப்பட்ட வளர்ச்சியின் பலனை அடையாமல் போனால், அது நம் சொந்த சகோதர சகோதரியைப் பட்டினி போட்டு விட்டு, பார்க்க வைத்து நாம் மட்டும் உணவு […]
எந்தவொரு விஷயத்தையும் உருவாக்குவதைக் காட்டிலும் அதன் பராமரிப்பில் தான் அதனுடைய முழுப்பலனும் கிடைக்கும். சரியாக கவனிக்கப்படாமல், பராமரிக்கப்படாமல் விடப்பட்ட எதுவுமே அதன் பலனைத்தராது. மேலும் அவப்பெயரையும், மனவருத்தத்தையும் உண்டாக்கி விடும். அதை உருவாக்குவதற்கான உழைப்பு விரயமாகிப்போகும். அப்படிப் பல எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் தாண்டி உருவானது தான் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம். ஆனால் அதன் பராமரிப்பு குறைபாடுகள் காரணமாகவும், நகரத்திலிருந்து அது அமைந்திருக்கும் தொலைவு காரணமாகவும் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உள்ளானது மறுக்க முடியாத ஒன்று. ஆரம்ப […]
உணவகங்களில் சென்று மனதிற்குப் பிடித்த மாதிரி நாவில் இனிக்கும் ருசியோடு உணவருந்தும் ஆசை அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. முன்பெல்லாம் அது பௌர்ணமி, அமாவாசை போன்ற நிகழ்வாக, அவ்வப்போது என்ற ரீதியில் இருந்தது.ஆனால் இப்போதோ வரிசையாக திறக்கப்படும் உணவகங்களையும், அதில் இருக்கும் கூட்டத்தையும் பார்க்கும் போது வீட்டில் யாரும் சமைப்பதே இல்லையோ என்ற கேள்வி தான் எழுகிறது.சரி இந்தக்கேள்வியை நாம் அழுத்தம் திருத்தமாகக் கேட்டால் அது ஆணாதிக்கக் கேள்வி ஆகி விடும். ஆனால் வேறொரு கேள்வி என் மூளையில் […]
இப்படியும் ஒரு இழப்பா?
ஒரு அரசின் அடிப்படைக்கடமை என்பது குடிமக்களுக்கான தரமான வாழ்க்கையை கொடுப்பது மட்டுமல்லாது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பது. மக்களின் அடிப்படைத் தேவையான உணவு, உடை இருப்பிடம் ஆகியவற்றைப் போதுமான கல்வியும், வேலைவாயப்பும் வழங்குவதை வைத்து அவரவர் பூர்த்தி செய்து கொள்வார்கள். ஆனால் மருத்துவ செலவு என்பது சாதாரண மக்கள் அனைவராலும் ஈடுசெய்ய இயலாத ஒன்று. இங்கு அன்றாட நோய்கள் ஏழை பணக்காரனைப் பார்த்து வருவதில்லை. பாமரனுக்கும் லட்சங்களில் செலவு வைக்கும் நோய்களும் இன்றைய நாட்களில் வருவது இயல்பாகி […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 ஆவது ஊதியக்குழு நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆம். தற்போது 7 ஆவது ஊதியக்குழு நியமித்தபடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களுக்கு, அடுத்த ஊதியக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஏழாவது ஊதியக்குழு நியமிக்கப்பட்டு பத்தாண்டுகள் ஆக இருப்பதால், 2026 முதல் பண வீக்கத்தின் அடிப்படையில் புதிய ஊதிய விகிதம் முடிவு செய்யப்பட்டு அதன்படி ஊதியம் வழங்கப்படும். இது நல்ல விஷயம் தான். இளம் வயதில் முறையாக சிந்தித்து […]
சுங்கச்சாவடியின் பயன்கள்
சுங்கச்சாவடிகள். பொதுவாக சுங்கச்சாவடிகள் என்றாலே வெறுப்பு தான். என் பணம் வீணாப் போகுது. ஏற்கனவே சாலை வரிகள் எல்லாம் கட்டிதானே வண்டிய வாங்கினேன்.இதுல இப்ப இதுக்கு வேற ஏன் தனியா நான் பணம் செலுத்த வேண்டும் என்ற கேள்வியில் துவங்கி, சுங்கச்சாவடிகளில் இனி பணம் ரொக்கமாக செலுத்தக் கூடாது, அனைத்து வண்டிகளிலும் பாஸ்டேக் அட்டை நிச்சயம் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் வரை எப்போதும் சுங்கச்சாவடிகள் என்றாலே மக்களுக்கு எரிச்சல் தான். மேலும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து […]