அரசு ஊழியர்களின் வாழ்வில் மீண்டும் வசந்தம் பூத்த பொன்னாள். மீண்டும் ஓய்வூதியம் என்ற அறிவிப்பு. அதுவும் 20 ஆண்டுகளுக்குப் பிறகான வரலாற்று அறிவிப்பு. இனிமேல் மண்டும் அரசு ஊழியர்களுக்கு அதே பழைய ஓய்வூதியம்.அதாவது 30 ஆண்டுகள் அரசுப்பணி செய்தவர்களுக்கு அவர்களின் கடைசி மாத வருமானத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாகவும், 10 ஆண்டுகள் வேலை செய்தவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியமாகவும், TAPS, அதாவது Tamilnadu Assure Pension Scheme என்ற பெயரில் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உனக்கென்னப்பா கவர்மென்ட் வேலை […]
Category: தற்கால நிகழ்வுகள்
ஜனவரி 1, 2026 ஆம் தேதி வெளியான ஒரு நாளிதழில் இப்படியான ஒரு செய்தி பார்த்து அதிர்ச்சியும் வியப்பும். எத்தனை நாகரீக வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, மருத்துவ வளர்ச்சி அடைந்து விட்ட சூழலிலும் கூட இப்படியும் ஓர் செய்தியைப் பார்ப்பது மனதிற்குள் நெருடலை ஏற்படுத்தியது. அஸாம் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தம்பதியினரை வீடு புகுந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி, அவர்களை வீட்டில் வைத்து அடைத்து வீட்டோடு எரித்திருக்கின்றனர்.இதில் அந்த தம்பதியினர் […]
அன்பான வாழ்த்துகள்!
ஓராண்டைக் கடந்துவிட்டோம். டிசம்பர் 31 மாலை முதலே பல நாடுகள் புதிய ஆண்டை வரவேற்ற செய்தியை நாம் பார்க்க முடியும். இப்போதும் கூட சென்ற ஆண்டு புத்தாண்டு இரவில் குதூகலித்த நினைவுகள் நீங்கா நினைவுகளாகவே உள்ளது. இந்த ஆண்டு பலருக்கும் பலவிதமான புதுப்புது அனுபவங்களைத் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. எல்லோரையும் போல மற்ற எல்லா ஆண்டுகளையும் போல, எனக்கும் இந்த ஆண்டு அமைந்ததா என்றால், இல்லை என்பதே என் பதில். எல்லாருக்கும் இது நல்ல ஆண்டாகவோ, அல்லது […]
மனிதர்கள் மிருகமாகலாம், ஆனால் ஒருபோதும் மிருகங்கள் மனிதனாக முடியவே முடியாது.ஏனென்றால் அவற்றிற்கு ஆறாம் அறிவு கிடையாது.அவைகளுக்கு நாகரீகம் தெரியாது. விஞ்ஞான வளர்ச்சி புரியாது. அதை உபயோகிக்கும் முறைகள் பற்றியும் தெரியாது. மிருகங்கள் தனது சுபாவத்திலிருந்து தன்னை மாற்றிக் கொள்வது கடினம். ஒரு அழகான மானைப் பார்த்தால் சிங்கம் ரசிக்குமா? அல்லது புசிக்குமா? இயற்கையின் படைப்பு மான்களைப் புசிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை சிங்கங்கள் . அப்படியே தான் இன்றளவிலும் தனது இயல்பு நிலையிலிருந்து மாறாமல் இருக்கின்றன. ஆனால் மனிதர்கள் அப்படியல்ல. […]
தேவை- அடிப்படை ஒழுக்கம்!
தலைவன் இல்லாத படை தலையில்லா முண்டம் என்பது ஒரு சொலவடை.தலைவன் சரியில்லாதபட்சத்தில் படை கட்டுக்கோப்பாக இல்லாமல் சிதறிப் போகும் என்பதை சில முக்கியமான அரசியல் கட்சிகளை உதாரணமாகக் கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம்..அதைப்போல வளரும் கட்சிக்கு மிக அவசியமான ஒரு தேவை என்பது தலைவனின் ஒழுக்கமும், செயலாற்றலும் , நடவடிக்கைகளும், பேச்சும், என்பதைத் தாண்டி தொண்டர்களுக்கு அந்தத் தலைவனின் மீதான பற்றும், அவனது கொள்கையின்பாற் உள்ள பிடிப்பும். தலைவனின் மீதான பற்று சற்று முன்பின் இருந்தாலும் கூட […]
சம வேலைக்கு சம ஊதியம்.
ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தார். அவரிடம் இரண்டு மாடுகள் இருந்தன.அந்த இரண்டு மாடுகளையும் வண்டியில் பூட்டி ஊர்களைச் சுற்றி உப்பு வியாபாரம் செய்து அவர் பிழைத்து வந்தார். அந்த இரண்டு மாடுகளும் அவர் வீட்டுத் தொழுவத்தில் ஒன்றாகவே கட்டப்பட்டிருக்கும். வேலையும் இரண்டு மாடுகளும் ஒரே மாதிரி தான் செய்யும். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் ஒன்று உண்டு. ஒரு மாடு ஆரம்பத்திலிருந்தே அவரிடம் இருந்தது. அதன் மீதி பிரியம் அதிகம்.முதலில் அந்த மாட்டை வைத்து சம்பாதித்து […]
மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டம்.இந்த திட்டத்தைப் பற்றி பல நேர்மறை மற்றும் எதிர்மறை பேச்சுகளும் விமர்சனங்களும் இருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தினால் எந்தவொரு முழுமையான பயனும் இல்லை, மேலும் இந்த நூறு நாள் வேலைத் திட்டம் காரணமாக விவசாயக் கூலிக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாகிப் போனது என்ற பல விமர்சனங்களும் இருந்தது. இது விமர்சனம் மட்டுமே அல்ல. உண்மையும் கூட. ஒரு புறம் பாமர ஏழை […]
வரவேற்கிறோம் ஆவலுடன்!
பாரத் டாக்ஸி. ஓலா உபர் ரபிடோ போன்ற தனியார் வாடகை வாகன இணையவழி மற்றும் செயலி வழி தரகு நிறுவனங்களுக்கு மாற்றாக மத்திய அரசின் செயலி. இந்தச் செயலி இரண்டு வாரங்களுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்ற தகவல் பரவலாக உள்ளது. தனியார் செயலிகள் பரபரப்பான அலுவல் நேரங்களில் தனக்கு விருப்பமான கட்டணத்தை நிர்ணயிப்பதும், ஓட்டுநர்களிடம் அதிகமான தரகு கட்டணம் வசூலிப்பதும் என்ற பிரச்சினைகள் மிக அதிகமாக முன்வைக்கப்படுகிறது.இனி பாரத் டாக்ஸி என்ற செயலி வந்தபிறகு இந்தத் தரகுக் […]
மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படும் உழைக்கும் வர்க்கம். நாம் பலமுறை தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களின் அவல நிலை பற்றியும் அவர்களின் ஊதிய மோசடி பற்றியும் எழுதியிருக்கிறோம். தனியார் முதலைகள் தான் பணத்திற்கு பேராசைப்பட்டு உழைப்பவர்களை வயிற்றில் இடத்தில் பிழைக்கிறார்கள் என்றால் , அரசாங்கமும் அதையே செய்தால் எங்கே தான் சென்று முறையிடுவது இந்த பாவப்பட்ட பிறவிகள்? தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிகழும் அநியாயம் பற்றியது தான் இந்தப் பதிவு. தொகுப்பூதிய செவிலியர்கள் மட்டுமல்ல, துப்புறவுத் தொழிலாளர்களில் துவங்கி பல […]
படித்து பாதித்துப் பகிர்ந்தது! கேரளா காரனுக என்னைக்காச்சிம் தவில் நாதஸ்வரம், தப்பாட்டம் பறைனு யூஸ் பன்றாங்களா. நீங்க மட்டும் ஏன் எல்லாத்துக்கும் அவனுகளோட சிங்காரி மேளம், சென்டை மேளம்னு கூட்டிவந்து நம்மளோட பாரம்பரிய வாத்தியகாரவுங்க வகுத்துல அடிக்கிறிங்க. நம்ம ஊரு நையாண்டி மேளத்துக்கு ஈடா ஏதாவது இருக்கா… கீழ்கண்ட நாட்டுப்புறக்கலைகளில் எதை, எதை பார்த்துள்ளீர்கள்? சொல்லிட்டு தான் போங்களேன்..