ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். ஒழுக்கம் என்பது உயிரினும் மேலானது என்ற வள்ளுவனின் வாக்கு புத்தகத்திலும், தேர்வில் எழுதி இரண்டு மதிப்பெண் பெறுவதற்கும் தான் என்று மாறிப் போனது. கோவில், கடவுள், பக்தி , இறை நம்பிக்கை என்பது மனிதன் தனக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று பயந்து ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தான்.ஆனால் இன்று அது ஒரு அன்றாட செயலாகவும், போட்டி மனப்பான்மையிலும், பகை மூட்டுவதற்கும் தான் பயன்படுகிறது. […]
Category: தற்கால நிகழ்வுகள்
கனவுகளை சிதைத்த விபத்து!
நாம் சரஸ்வதி பூஜை அன்று வாகனங்களுக்குத் தேவை பூஜை மட்டுமல்ல, பராமரிப்பும் தான் என்று எழுதியிருந்தோம். அதை நிரூபிக்கும் விதமாக நெஞ்சை உலுக்கும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. கனவுகளோடு வாழ்க்கையை வாழக் காத்திருக்கும் நான்கு இளைஞர்களின் வாழ்வை முடித்திருக்கிறது பாழாய்ப்போன தறிகெட்டு ஓடிய லாரி ஒன்று. ஓசூர் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.முன்னே சென்ற காரின் மீது தறிகெட்டு ஓடிய லாரி மோதி அந்தக்கார் அதற்கு முன்னே சென்ற ஒரு சரக்கு வாகனத்தில் மோத, காரில் […]
நம் தங்கம், நம் உரிமை!
கையில இருக்கு தங்கம், கவலை ஏன்டா சிங்கம்னு ஒரு விளம்பரம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரொம்பப் பிரபலமா ஒளிபரப்பு ஆனது. அந்த விளம்பரம் வரும் முன்பே அது தான் நிலை. கையில தங்கம் இருக்கு என்ற தைரியம் எப்போதுமே இந்திய நடுத்தரக் குடும்ப மக்களுக்கு உண்டு. எனது சொந்த அனுபவத்தில், சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு கூட, நான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவமனை செலவு பற்றி நான் கவலை இல்லாமல் சொகுசாக மருத்துவ உபசரிப்புகளை […]
ஒரு குற்றவாளியைப் பிடிப்பது முக்கியமல்ல, அவர் என்ன குற்றம் செய்தாலும் பரவாயில்லை.ஆனால் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்கத் தகுந்த சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லாவிட்டால், அவர் விடுவிக்கப்படுவார் என்பது சாதகமா? பாதகமா? ஒரு சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து தூக்கி எறிந்து மறுநாள் அதே இடத்திற்குச் சென்று அந்தக் குழந்தையின் சடலத்தை எரித்தார் என்று பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டு, கீழ் நீதிமன்றத்திலும் , உயர் நீதிமன்றத்திலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தண்டனைக் குற்றவாளி தன்னுடைய பணபலத்தால் […]
அரசியல் என்பது மக்கள் சேவை, மக்களின் நலன், பொது சிந்தனை , பொது வாழ்வு என்பதெல்லாம் மாறி வியாபாரமாகிப் போனது.10 ரூ போட்டு 100 ரூ சம்பாதக்க, பதவி போகத்தை அனுபவிக்கத் தான் இன்றைய அரசியல்வாதிகளும் அரசியலும். உயர்மட்டத்தில் துவங்கி அடிமட்டம் வரை இன்று இதுதான் நிலை. ஒரு காலத்தில் கொள்கை ரீதியான அரசியல் முன்னெடுப்பு, கொள்கை ஈர்ப்பு, பொது சிந்தனை என்ற காரணத்திற்காக பணக்காரர்கள் முதல் பாமரன் வரை அரசியலில் ஈடுபட்டனர். அவரவர் தாங்கள் உழைத்த […]
இப்படி இம்சை செய்யலாமா?
ஊருக்குப் போய் வரும் வருத்தத்தைப் பற்றிய கட்டுரையை முந்தைய நாள் எழுதியிருந்தோம்.இந்த வருத்தத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக பேருந்து கட்டணங்கள், கூட்ட நெரிசல், வாடகைக் கார் ஆட்டோ கட்டணங்கள் நம்மை மேலும் பாடாய்ப்படுத்துவது உண்மை தான். நான் கல்லூரியில் படித்த காலத்தில் ஊரிலிருந்து கோவை செல்வது ஒரு பெரிய அக்கப்போர் என்றால் கோவை சென்ற பிறகு அங்கிருந்து எனது கல்லூரிக்கு மாநகரப்பேருந்தில் செல்வது அதை விடக்கொடூரமானது. ஊரிலிருந்து கோவை செல்லும் போதாவது, சில நேரம் […]
வியாபாரக் கொலை!
ஏதோ ஒரு படத்தில் நடிகர் விவேக் அவர்கள் நகைச்சுவையாக ஒரு விஷயம் சொல்வார்.எங்க ஊரிலெல்லாம் மருத்துவமனைக்குச் சென்றால் தான் இறந்து விடுவோமோ என்ற பயம் இருக்கிறது என்று. அதை அப்போது இருந்த கால கட்டத்தில் வெறும் நகைச்சுவையாகக் கடந்து செல்ல இயலவில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றைய நவீன மருத்துவ உலகில், சளி இருமலுக்காக டானிக் உட்கொண்ட 11 குழந்தைகள் உயிர்பலி ஆகி உள்ளது என்பது மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை உண்டு செய்திருக்கிறது என்பதில் மாற்றுக் […]
தேவை தொழிலாளர் நலன்!
தொழிலாளர் நலன் என்ற வார்த்தை இப்போதெல்லால் மிகப்பெரிய நிறுவனங்களை மிரட்டுவதற்காகவும், பணம் பறிப்பதற்காகவும் ஒரு சிலருக்கான ணுக போகங்களை அனுபவிப்பதற்குமான வார்த்தையாகிப் போனது. உண்மையிலேயே தொழிலாளர் நலம் அல்லது ஊழியர்கள் நலன் என்பதை இப்போதெல்லாம் ஒரு கிள்ளுக்கீரையாகத் தான், ஒரு சம்பிரதாய வார்த்தையாகத்தான் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து சிறிய முதலாளிகள் வரை பயன்படுத்துகிறார்கள். சமீபத்திய ஒரு செய்தி.டி.சி.எஸ், அதாவது டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் எனப்படும் ஐடி நிறுவனம் , வரும் ஆண்டில் 2 சதவீத ஊழியர்களை, (6 […]
சாமி படத்தில் ஒரு நல்ல நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு காட்சி. மறைந்த நடிகர் விவேக், குழந்தைகளை வைத்துக் கொண்டு பாடம் நடத்துவார். ” சாதிகள் இல்லையடி பாப்பா” என்று அவர் சொல்வார். உடனே குழந்தைகள் பக்கத்தில் இருந்து,நாயர் கடையில டீ வாங்கினேன், கோனார் தமிழ் உரையில படிக்கிறேன், செட்டியார் வூட்ல கடன் வாங்கினேன் என்று அந்தக் குழந்தைகள் சொன்ன உடனே, அவர் என்னையே சிந்திக்க வச்சுட்டேளே என்பார். நேற்றைய செய்தித்தாளில் ஒரு செய்தியைக் கண்டதும் எனக்கும் அப்படி […]
பண்டிகைகள், விளையாட்டு , பொழுதுபோக்கு இப்படி பல விஷயங்களை நாம் மதிப்பளித்து, செலவு செய்து கொண்டாடுவதும், போற்றுவதும் நம்மை பண்படுத்தவும், நமக்கு ஒரு மன ஆறுதலுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் தான். உலகின் மிக முக்கியமான ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டதற்கு முழுமுதற்காரணமே , நாடுகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தை உருவாக்கத்தான். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள், கிட்டத்தட்ட இந்திய இராணுவத்திற்கும், பாகிஸ்தான் இராணுவத்திற்கும் நிகழும் சண்டைகளுக்கு ஈடாக நிகழ்ந்து முடிந்தது என்று சொன்னால் மிகையாகாது. இந்திய வீரர்கள் […]