Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

தடம் மாறும் இளைஞர்கள்!

சமீப காலமாக இளைஞர்களின் போக்கு மிக மோசமாக மாறி இருப்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர முடிகிறது. சமீபத்திய சில செய்திகளின் மூலமாக இதை அறிந்திர முடிகிறது. எங்கள் ஊர் மிகச் சாதாரணமான சிறிய ஊர்தான்.மக்கள் மிக அதிகம் என்பதெல்லாம் இல்லை.தோராயமாக இவர் இன்னார் என்று அறிந்து கொள்ளும் ரகம் தான். அப்படியான ஊரில் , காவல் நிலையத்தின் அருகிலேயே பட்டப்பகலில் இருசக்கர வாகனம் ஒன்றில் பயணித்திருந்த மூன்று இளைஞர்கள் , நெடுஞ்சாலையில் வந்த காரை மறித்து கத்தியைக் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மருத்துவ மாஃபியா!

ஒரு மருத்துவரின் பதிவு. ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம்..(-டாக்டர்.பிரதீப் அகர்வால்) நான் ஒரு மருத்துவர் அதனால்தான் அனைத்து நேர்மையான மருத்துவர்களிடமும், முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன்.. மாரடைப்பு ஏற்பட்டுள்ளது எனில், மருத்துவர் கூறுகிறார், Streptokinase ஊசி போடுங்கள் என்று.. அதற்கு 9,000 ரூபாய் என்கின்றனர். ஆனால், ஊசியின் உண்மையான விலை ரூ. 700 – முதல் 900/- வரை மட்டுமே ஆனால் MRP ரூ. 9,000அப்பாவி மக்கள், என்ன செய்வார்கள் …. டைபாய்டு வந்ததெனில்,மொத்தம் 14 […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

அமீபா கற்றுத் தந்த பாடம்

அமீபா.இந்தப் பெயரைக் கேட்டதும் இப்போதைக்கு எல்லோருக்கும் நினைவில் வருவது இப்போதைய மூளை காய்ச்சல் ஏற்படுத்தும் அமீபா தான்.சபரிமலை செல்லும் பக்தர்களை மூக்கைப் பொத்திக் கொண்டு குளிக்கும்படியான உத்தரவுகளும், அமீபா காய்ச்சலுக்கான அறிகுறிகளும் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் இது சரிசெய்யக்கூடியது தான், யாரும் அந்தளவிற்கு பயப்பட வேண்டாம் என்ற செய்தி ஆறுதல்.இதே அமீபா என்ற பெயரைக் கேட்டதும் எனக்கு இன்னொரு விஷயமும் நினைவில் வந்தது. எந்த வகுப்பில் என்று தெரியவில்லை, அறிவியல் பாடத்தில் அமீபா படம் வரைந்து பாகம் […]

Categories
ஆன்மீகம் கருத்து தற்கால நிகழ்வுகள்

கொஞ்சம் கேளு ஐயப்பா!

இன்று சமூக வலைதளத்தில் ஒரு பதிவைக் காண நேர்ந்தது.சபரி மலைக்கு வரும் மிக அதிகப்படியான கூட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்து ஒரு பதிவு. ஒழுக்கமான பக்தியோடு , 48 நாள் ஔ அதாவது ஒரு மண்டலம் நேர்த்தியாக விரதமிருந்து, சபரிமலைக்கு பக்திமார்க்கமாக மட்டுமே பக்தர்கள் சென்ற போது இவ்வளவு கூட்டமோ , ஆர்ப்பாட்டமோ இல்லை. இப்போது சும்மா பத்து நாளைக்கு விரதம், ஒரு வார விரதம், சபரிமலை பார்த்துவிட்டு அப்படியே குற்றாலத்தில் இன்பக் குளியல் என்று சபரிமலை […]

Categories
கருத்து நினைவுகள்

அந்த நாள் ஞாபகம்…

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே, நண்பனே! அன்று போல் இந்த நாள் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே ?என்று சிவாஜி கணேசனில் துவங்கி இன்று எஸ்.ஜே.சூர்யா வரை, வாழ்வில் பெரும்பாலானோர் வாழ்வின் கடந்த காலத்தை தான் இனிமை என்று சொல்வது எந்த விதத்திலும் மறுக்க முடியாத 100 சதவீத உண்மை. இந்த உலகில் உள்ள மனிதர்களிடம் திடீரென கடவுள் வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் பெரும்பாலானோரின் பதில் […]

Categories
கருத்து தகவல்

அறிவோம் ஆரோக்கியம்-2

உணவு முறை பற்றி நாம் எழுதிய கருத்தை ஒத்த ஒரு மருத்துவரின் கருத்து! நாம் ஏன் குண்டாகிறோம்?? நம்மில் பலர் இதை அனுபவத்தில் உணர்ந்திருப்போம் நான்லாம் காலேஜ் படிக்கும் போது எவ்ளோ சிலிம்மா இருந்தேன் தெரியுமா ?? மேரேஜ்க்கு அப்பறமா தான் தொப்பை போட்டு குண்டாகிட்டேன் என்போம். ஏன் நாம் குண்டாகிறோம்??? நாம் உட்கொள்ளும் உணவு முறை தான் வேறு என்ன இருக்க முடியும்?? நாம் உட்கொள்ளும் உணவில் பிரச்சனை இருக்கிறதா?? நம் தாத்தாக்கள் எல்லாம் இப்படி […]

Categories
கருத்து தகவல்

அறிந்து கொள்வோம்!

படித்ததில் பிடித்தது! சமீபத்தில் கிளினிக்கில்தாய் தனது தனையனுடன் என்னை சந்திக்க வந்திருந்தார். மகனுக்கு வயது ஆறு முடிந்து ஆறு மாதங்கள் கடந்திருக்க எடை 20 கிலோ கிராம் இருந்தான். காலையில் இருந்து காய்ச்சல்மூக்கொழுகல்மூக்கடைப்புஇருமல்தொண்டை வலிஉடல் வலிதலை வலிஉடல் சோர்வுஎனசீசனல் வைரஸ் ஜுரத்திற்கான பொருத்தத்தில் பத்தில் எட்டு பச்சக் என்று அவனிடம் பொருந்தி இருந்தன. “காலையில் இருந்த காய்ச்சல் அடிக்குது சார். பெரியாஸ்பத்திரி ( அரசு மருத்துவமனை) காய்ச்சல் மாத்திரை வீட்ல இருந்துச்சு.காலைல ஒன்னு கொடுத்தேன்.கேக்கல மதியம் பாதி […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

என்று ஓயுமோ இந்தப் போராட்டம்?

உலகின் மோசமான உயிரினம் மனித இனமே என்பது அன்றாடம் நிரூபிக்கப்படுகிறது. ஐந்தறிவு கூட மிருகங்கள் கூட தேவையின்றி இன்னொரு மிருகத்தைத் துன்புறுத்துவது கிடையாது .ஆனால் இந்த மனித இனம் மட்டும் தான் சாதி , மதம், இனம், மொழி, நாடு , கலாச்சாரம், பண்பாடு என்று பல்வேறு காரணங்களைக் காட்டி சக மனிதனைத் துன்புறுத்துவதும், ஈவு இரக்கமின்றி வயது வித்தியாசம் பார்க்காமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கொன்று குவிப்பதும் வாடிக்கையாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு […]

Categories
இலக்கியம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

அறிவோம் ஆரோக்கியம்!

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து. இது பொருட்பாலில் மருந்து என்ற அதிகாரத்தில் இருக்கும் திருக்குறள்.944 ஆவது குறளாக இருக்கும் இதன் பொருள், முன் உண்ட உணவு செரித்ததா என்பதை அறிந்து , நன்கு பசி எடுத்த பிறகு , நமது உடலுக்கு ஏற்றவாறான உணவைத் தேர்வு செய்து உண்ண வேண்டும் என்பது பொருள். உணவே மருந்து என்பது நமது பண்பாடு.அதையே தான் இரண்டாயிரத்து ஐம்பத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவரும் கூறியுள்ளார். பசித்தும் உண்ண […]

Categories
கருத்து சினிமா தகவல் தற்கால நிகழ்வுகள்

வாழ்ந்தா இப்படி வாழனும்

அஜித் பற்றி நான் படித்து ரசித்தது! 2025-இல் எனது முதல் பதிவே, “Be Like Ajith” என்பதுதான். அதுபற்றி குறிப்பில் சொல்கிறேன். இப்போது சொல்ல வருவது. நேற்று நடந்த ஒன்றைப்பற்றி. நேற்று நண்பர் குடும்பத்தோடு வெளியே சென்றிருக்கையில், பிரபலங்களின் வாழ்க்கை + தத்துவம் பற்றியா பேச்சு வந்தது. “எல்லா மனுஷனுக்கும் பணம், புகழ்தான் ரொம்ப முக்கியம்..அத நோக்கித்தான் எல்லாருமே ஓடறோம்..!” “இருக்கலாம்…ஆனா அப்படி பணம், புகழ் இதெல்லாம் அடைஞ்சவங்க தங்களோட கடைசி காலத்துல சொன்னது என்ன தெரியுமா..?” […]