பெரியோர்களே தாய்மார்களே! கண்டிப்பா இதப் படிங்க. புள்ளைங்கள நிறைய மார்க் வாங்க சொல்லி வற்புறுத்தாதீங்க. நிறைய மார்க் வாங்கினா தான் நல்லா வாழலாம், இல்லாட்டி வாழவே முடியாதுனு சொல்லி பயமுறுத்தாதீங்க. வரப்போகும் தேர்வு முடிவன்று உங்கள் பிள்ளைகள் எதிர்பார்த்த அளவில் மதிப்பெண்கள் வாங்காவிட்டால் கூட தயவு செய்து சபிக்கவோ, வருத்தம் கொள்ளவோ வேண்டாம். தேர்ச்சி பெற்றாலே போதும். பிழைத்துக் கொள்ளலாம். சொல்லப்போனால் நல்ல மார்க் வாங்கிய பிள்ளைகள் பலர் இன்று சமுதாயத்தில் ஒரு பயத்துடனே வாழ்க்கையை நடத்த […]
Category: கருத்து
அப்பாக்களுக்காக-1

குழந்தைப் பருவத்தில் நாயகனாக, வழிகாட்டியாகத் தெரியும் அதே தந்தை விடலைப் பருவத்தில் வில்லனாகத் தெரிவது வழக்கம். அதைச் செய்யாதே, இதைச்செய்யாதே mobile ரொம்ப உபயோகிக்காதே, சிகரெட் பிடிக்கும் பழக்கம் வந்துவிட்டதோ? தண்ணி அடிக்கிற மாதிரிதெரியுதே? என்ன செலவு பண்ற? நல்ல ஆட்களோட மட்டும் பழகு. நல்ல பழக்கங்களைப் பழகு என்று சொல்லும் போதும், கேட்கும் போதும், வெறுப்பாகத் தான் தோன்றுகிறது. சும்மா எப்ப பாரு advice. என்ற வாசகத்தை உபயோகிக்காதவர்கள் வெகு குறைவு. ஆனால் அவர் பேசுவது […]
ஓடி விளையாடி மகிழட்டுமே!

பளிச்சிடும் கோடை காலம்.கிட்டத்தட்ட பள்ளிகளில் தேர்வு துவங்கி விட்டது.. விடுமுறையை நோக்கிய ஆர்வத்தில் மாணவர்கள்.. அய்யய்யோ லீவுல என்னன்ன அழிச்சாட்டியம் பண்ணக் காத்துருக்காய்ங்களோன்னு பீதியில் பெற்றோர்கள்.. அடிக்கிற வெயிலில் வெளிய போயி விளையாடாம இருக்க videogames, dvd player, play station, Android mobile games ன்னு பயங்கரமா யோசிச்சு காசு சேத்துட்டு இருக்கீங்களா? இல்ல வாங்கிட்டீங்களா? அப்படி எதாவது வாங்கியிருந்தா அத திருப்பி அனுப்புங்க மொதல்ல… அந்த காசுல நல்ல பருத்தி ஆடை 4 set…வாங்கிடுங்க […]
சமுதாயம் நம் கையில்

சினிமாவை வெறும் சினிமாவாக பார்க்கும் மனநிலை எப்போது வரும் என்பது புரியவில்லை. ஒரு சைக்கோ கில்லர் திரைப்படத்தை பார்த்து சைக்கோவாக மாறாத இளைஞர்கள், ஒரு நேர்மையான காவல் அதிகாரி படம் பார்த்து காவல் அதிகாரியாக மாறாத இளைஞர்கள், கதாநாயகன் புகை பிடிப்பதை மட்டும் உடனடியாகப் பின் தொடர்கிறார்கள்? என்ன காரணம்? எளிதாக கிடைக்கிறது. இதில் குற்றம் சினிமாக்காரன் மீது மட்டுமா? பள்ளி சீருடையுடன் பாருக்குள் கூத்தடிக்கும் மாணவர்கள், பாருக்குள் செல்ல வழி கொடுத்தது சினிமா மட்டும் தானா? […]

நுகர்வு… நம் தேவைக்கு ஏற்றதை வாங்குவது நுகர்வு எனப்படுவது மாறி, வியாபாரிகளின் தந்திரத்தால் நம்மிடையே திணிக்கப்படுகிறது, தற்கால நுகர்வு. இன்று காலை நடந்த ஒரு சிறிய வியாபாரம். அண்ணன் வடை குடுங்கனே என்றேன் எத்தனை என்று கேட்டார் அண்ணன். ஒரு வடை போதும்னே என்றேன். தம்பி 3 பத்து ரூபா என்றார். இல்லணே, நான் ஒருத்தன்தான். ஒரு வடை போதும். ஏற்கனவே சிம்ரன் மாதிரி மெல்லிசா இருக்கேன். இதுல 3 வடை சாப்பிட்டா வெளங்கிடும் என்று விளக்கம் […]

வாழ்க்கை என்பது எங்கோ தூரத்தில் இல்லை. திரும்பிப் பார்த்தால் நாம் இழந்த போன வார இறுதியிலும் அடுத்த வார இறுதியிலும் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கிறது. நண்பர்களுடன் சிறிது நேர உரையாடல். பழைய விஷயங்கள். டேய் நம்ம 4 வது பிடிக்கிறப்ப இருந்தாலே மைதிலி. இப்ப அவ புள்ள 4 வது படிக்குது டா. நம்ம பாரு இன்னும் உட்கார்ந்து அவள யோசிச்சுட்டு இருக்கோம் என்பதில் ஆரம்பித்து, மாப்ள headmaster நம்மள அடிப் பிரிச்சாரு ஞாபகம் இருக்கா? […]
வாழ நினைத்தால் வாழலாம்..

மனிதன் வாழ்க்கை சிறப்பாகும் எப்போது? துயரத்தில் தோள் கொடுக்கவும், சந்தோசத்தை தூக்கி நிறுத்தவும், நல்லது செய்யும் போது பாராட்டவும், பாதை தவறும் போது அதட்டவும் ஆள் இருக்கும் போது. அப்படி எல்லாமாக. இருந்த ஒருவரை இழக்கும் போது வாழ்க்கையே முடிந்த எண்ணம் வரும். ஆனால் அத்துடன் வாழ்க்கை முடிவதில்லை. எங்கிருந்தோ ஏதோ ஒரு வகையில் எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும். தேடிப் பிடிக்கத் தெம்பிருந்தால் போதும். வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்? ஆழக்கடலும் சோலையாகும் ஆசை […]
பொறுப்பு வேண்டாமா? பிரபலங்களே!

சமீபத்தில் தினசரி ஒன்றில் ஒரு தலையங்கம் கண்டு வியந்தேன். ஆந்திர மாநிலத்தில் பொறுப்பில்லாமல் விளம்பரங்களில் நடித்து மக்களிடையே தரமில்லாத பொருட்களை சேர்த்ததற்காக சில பிரபலங்களின் மீது வழக்குகள் பதியப்பட்டதாக ஒரு செய்தி. இது போல பொறுப்பில்லாத பிரபலங்களை வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்பது தான் நமது வாதமும். முதலில் குழந்தைகளின் உணவுப் பதார்த்தங்களில் துவங்கும் இந்த விஷயம், வாழ்வின் இறுதி வரை நாம் உபயோகிக்கும் அத்தனை பொருட்களையும் நம் விருப்பமில்லாமல் நமது தலையில் கட்டுகிறது. […]

இனிய துவக்கம், முதல் வார்த்தை நல்ல வார்த்தையாக அமைய வேண்டுமென்பதற்கான இணைப்பு வாக்கியம் தான் அந்த இனிய துவக்கம். கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்திருக்கு என்று சில நேரம் நாம் ஏதாவது ஒரு பாதிப்பைச் சந்திக்கும் போது சொல்வதுண்டு. கெட்டதுல என்ன பெரிய நல்லது நடந்துடப் போகுது? நம்ம உறவுக்காரங்கள்ல யாராவது ஒருவர் தவறும்பட்சத்தில், நீண்ட நாள் பேசாமலிருந்த மற்றொரு உறவுக்காரர் வந்து பழக நேரிடலாம். இது மாதிரியான அனுபவங்கள் இங்கு பலருக்கும் இருக்க வாய்ப்புள்ளது. இதே […]
நம்பிக்கை ஒன்றே போதுமே!

விடியும் என்று நம்பித்தான் நிம்மதியாக உறங்குகிறோம். அதைப்போலவே முடியும் என்று நம்பி படபடப்பு இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்தால் நிச்சயமாக முடியும். ஒருவேளை அது முடியலாம், அல்லது அந்த முயற்சி வெற்றியைத் தராமலும் போகலாம் ஆனால் முயன்றது தோல்வி அல்ல. முயற்சி என்பதே வெற்றி தான் என்பதை உணர்ந்தி கொண்டால் இந்த உலகை வென்று விடலாம். உலகை வென்று விடலாம் என்றால், மாவீரன் நெப்போலியன் போல படைகொண்டு உலகைக் கட்டி ஆள்வதல்ல. ஒரு முயற்சியில் நாம் தோல்வியுறும் […]