Categories
கருத்து நினைவுகள்

அந்த நாள் ஞாபகம்…

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே, நண்பனே! அன்று போல் இந்த நாள் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே ?என்று சிவாஜி கணேசனில் துவங்கி இன்று எஸ்.ஜே.சூர்யா வரை, வாழ்வில் பெரும்பாலானோர் வாழ்வின் கடந்த காலத்தை தான் இனிமை என்று சொல்வது எந்த விதத்திலும் மறுக்க முடியாத 100 சதவீத உண்மை. இந்த உலகில் உள்ள மனிதர்களிடம் திடீரென கடவுள் வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் பெரும்பாலானோரின் பதில் […]

Categories
கருத்து தகவல்

அறிவோம் ஆரோக்கியம்-2

உணவு முறை பற்றி நாம் எழுதிய கருத்தை ஒத்த ஒரு மருத்துவரின் கருத்து! நாம் ஏன் குண்டாகிறோம்?? நம்மில் பலர் இதை அனுபவத்தில் உணர்ந்திருப்போம் நான்லாம் காலேஜ் படிக்கும் போது எவ்ளோ சிலிம்மா இருந்தேன் தெரியுமா ?? மேரேஜ்க்கு அப்பறமா தான் தொப்பை போட்டு குண்டாகிட்டேன் என்போம். ஏன் நாம் குண்டாகிறோம்??? நாம் உட்கொள்ளும் உணவு முறை தான் வேறு என்ன இருக்க முடியும்?? நாம் உட்கொள்ளும் உணவில் பிரச்சனை இருக்கிறதா?? நம் தாத்தாக்கள் எல்லாம் இப்படி […]

Categories
கருத்து தகவல்

அறிந்து கொள்வோம்!

படித்ததில் பிடித்தது! சமீபத்தில் கிளினிக்கில்தாய் தனது தனையனுடன் என்னை சந்திக்க வந்திருந்தார். மகனுக்கு வயது ஆறு முடிந்து ஆறு மாதங்கள் கடந்திருக்க எடை 20 கிலோ கிராம் இருந்தான். காலையில் இருந்து காய்ச்சல்மூக்கொழுகல்மூக்கடைப்புஇருமல்தொண்டை வலிஉடல் வலிதலை வலிஉடல் சோர்வுஎனசீசனல் வைரஸ் ஜுரத்திற்கான பொருத்தத்தில் பத்தில் எட்டு பச்சக் என்று அவனிடம் பொருந்தி இருந்தன. “காலையில் இருந்த காய்ச்சல் அடிக்குது சார். பெரியாஸ்பத்திரி ( அரசு மருத்துவமனை) காய்ச்சல் மாத்திரை வீட்ல இருந்துச்சு.காலைல ஒன்னு கொடுத்தேன்.கேக்கல மதியம் பாதி […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

என்று ஓயுமோ இந்தப் போராட்டம்?

உலகின் மோசமான உயிரினம் மனித இனமே என்பது அன்றாடம் நிரூபிக்கப்படுகிறது. ஐந்தறிவு கூட மிருகங்கள் கூட தேவையின்றி இன்னொரு மிருகத்தைத் துன்புறுத்துவது கிடையாது .ஆனால் இந்த மனித இனம் மட்டும் தான் சாதி , மதம், இனம், மொழி, நாடு , கலாச்சாரம், பண்பாடு என்று பல்வேறு காரணங்களைக் காட்டி சக மனிதனைத் துன்புறுத்துவதும், ஈவு இரக்கமின்றி வயது வித்தியாசம் பார்க்காமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கொன்று குவிப்பதும் வாடிக்கையாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு […]

Categories
இலக்கியம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

அறிவோம் ஆரோக்கியம்!

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து. இது பொருட்பாலில் மருந்து என்ற அதிகாரத்தில் இருக்கும் திருக்குறள்.944 ஆவது குறளாக இருக்கும் இதன் பொருள், முன் உண்ட உணவு செரித்ததா என்பதை அறிந்து , நன்கு பசி எடுத்த பிறகு , நமது உடலுக்கு ஏற்றவாறான உணவைத் தேர்வு செய்து உண்ண வேண்டும் என்பது பொருள். உணவே மருந்து என்பது நமது பண்பாடு.அதையே தான் இரண்டாயிரத்து ஐம்பத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவரும் கூறியுள்ளார். பசித்தும் உண்ண […]

Categories
கருத்து சினிமா தகவல் தற்கால நிகழ்வுகள்

வாழ்ந்தா இப்படி வாழனும்

அஜித் பற்றி நான் படித்து ரசித்தது! 2025-இல் எனது முதல் பதிவே, “Be Like Ajith” என்பதுதான். அதுபற்றி குறிப்பில் சொல்கிறேன். இப்போது சொல்ல வருவது. நேற்று நடந்த ஒன்றைப்பற்றி. நேற்று நண்பர் குடும்பத்தோடு வெளியே சென்றிருக்கையில், பிரபலங்களின் வாழ்க்கை + தத்துவம் பற்றியா பேச்சு வந்தது. “எல்லா மனுஷனுக்கும் பணம், புகழ்தான் ரொம்ப முக்கியம்..அத நோக்கித்தான் எல்லாருமே ஓடறோம்..!” “இருக்கலாம்…ஆனா அப்படி பணம், புகழ் இதெல்லாம் அடைஞ்சவங்க தங்களோட கடைசி காலத்துல சொன்னது என்ன தெரியுமா..?” […]

Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

கண்களைத் திறந்து விட்டாயா முருகா?

கடவுள் இருக்கான் குமாரு. என்னடா எப்பயுமே கடவுள் இருக்காரா , இல்லையானு பேசுற ஆளு, கடவுள் இருக்கான் குமாருன்னு பதிவு போட்டுருக்கேனு பாக்குறீங்களா? காரணம் இல்லாமல் இல்லை. திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்ட நெரிசல் குறித்தும், வசதிகள் சரிவர செய்யப்படாதது குறித்தும் நாம் சில சமயம் எழுதியிருந்தாலும், அங்கே பௌர்ணமிக்கு பௌர்ணமி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு கடற்கரையில் தங்கிக் கூத்தடித்து, கடலை கலக்கி, மல ஜலம் கழித்து திருச்செந்தூரின் கடற்கரையை நாசமாக்கியதைப் பற்றி மனம் நொந்து போய் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பரவட்டுமே நல்லிணக்கம்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மிகப்பெரிய மனக்கசப்பு நமக்கும் நமது பங்காளி நாடான பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதலை நிகழ்த்தி பாகிஸ்தானில் இருந்த பல்வேறு தீவிரவாத முகாம்களை அழித்தது நமது இந்திய அரசு.அதோடு நில்லாமல் நதிநீரில் பங்கு தர முடியாது என்ற ரீதியில் பாகிஸ்தானில் வசிக்கும் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கும் விதமாகப் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.பாகிஸ்தானிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காகக் கூட இந்தியாவிற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வராமல் காத்திடுவோமா?

வருமுன் காப்பதே சிறந்த அறிவு என்பது நோய்க்கு மட்டுமல்ல.ஆபத்தான் சூழ்நிலைகளுக்கும் தான். சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான், அவர்கள் சுட்டுப் பிடிக்கப்பட்டது பாராட்டுக்குரிய செய்தி தான். அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குற்றவாளிகள். அவர்களுக்கு இழப்பதற்கு என்று ஏதுமில்லை.நெஞ்சில் சிறிதும் ஈரமில்லை.தன் ஈன சுகத்திற்காக ஒரு ஆளை அடித்துத் துன்புறுத்திக் காயப்படுத்தி அரிவாளால் வெட்டி, ஒரு பெண்ணை கத்தி முனையில் பலவந்தப்படுத்தி பாலியல் […]

Categories
கருத்து சிறுகதை

ஆறறிவுள்ள மனிதராவோமா?

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். இந்தத் திருக்குறளை நாம் அடிக்கடி எங்காவது வாசித்திருந்தாலும் இதன் அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்வதில்லை. ஒரு சின்ன கதை .தெரியாத இரு நபர்கள் சந்திக்கிறார்கள். இடம்: கோவில். நல்ல கூட்டமான கோவில். அந்த இரு நபர்களும் குடும்பத்துடன் தான் கோவிலுக்கு வந்திருக்கிறார்கள். சிறிது நேரம் காத்திருந்த மக்கள் சாமி அலங்காரம் முடிந்தவுடனே முண்டியத்துக்கொண்டு நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு சாமியைப் பார்க்கச் சென்றனர். ஏங்க க்யூல வரக்கூடாதா , […]