அது ஒரு காற்றோட்டமான வகுப்பறை. பலதரப்பட்ட மாணவர்களையும் பார்த்த இருக்கைகள். சில இருக்கைகள் மட்டுமே கட்டமைப்பு சீர்குழையாமல் இருந்தன. மற்றவை எல்லாம் சின்ன சின்ன குறைகளோடு தான் இருக்கின்றன. அன்று முதல் நாள் வகுப்பு. பல்வேறு ஊர்களிலும் இருந்து தரவரிசைப் பிரகாரம் தேர்வான மாணவர்கள் கனவுகளோடு வந்தமர்ந்தனர். தனக்கென ஒரு நண்பனை, தோழியை அடையாளம் காண வேண்டும் என்ற தேடலோடு, புது இடம் என்ற பயமும் ஒவ்வொருவரின் மனதிலும் இருந்தது. தான் ஒரு சிறந்த வழக்கறிஞராக வேண்டும் […]