Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

சேட்டுகளுக்குக் கொண்டாட்டம்?

கையிலிருக்கே தங்கம் கவலை ஏன்டா சிங்கம் ? இப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்திருப்போம். ஏழை, நடுத்தர, மற்றும் மேல்தட்டு நடுத்தர மக்களின் சேமிப்பு என்பதே பெரும்பாலும் தங்கமாகத்தான் இருக்கும். இந்த வகையறாவில் யாரும், ஷேர்களையோ, பாண்டு பத்திரங்களையோ, வங்கியில் பெரிய தொகையையோ சேமிப்பாக வைத்துக் கொள்வதை விட, வீட்டில் இருக்கும் பெண்களின் பெயரைச் சொல்லி, உனக்குன்னு இவ்வளவு நகை, நாளைக்குப் பிள்ளைய கல்யாணம் பண்ணிக் கொடுக்க இவ்வளவு நகை என்று பார்த்துப் பார்த்து தங்க நகைகளைத் தான் […]

Categories
இலக்கியம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மதுரை குஞ்சரத்தம்மாள்

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா? தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் –1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது – கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது – பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது – அதில் நாம் அவசியம் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

காற்றில் பறந்த ஆணையரின் ஆணை

காவல் துணையர் ஆணையர் சில நாட்களுக்கு முன்பு பொதுவெளியில் கொடுத்த பேட்டி எல்லாம் சும்மா , மக்களிடம் ஒரு நல்ல எண்ணத்தை மேம்போக்காக உருவாக்குவதற்குத் தான் போல. அந்த அறிக்கை என்று பிறப்பிக்கப்பட்டதோ, அப்போதே காற்றிலும் பறந்து விட்டதாகத் தான் தோன்றுகிறது. பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டும் விதமாக இந்தப்பக்கம் நல்ல விதமாக அறிக்கையை விட்டு , அந்தப்பக்கம், போக்குவரத்து காவல் அதிகாரிகளை வசூல் வேட்டைக்குத் துரத்தி விட்டார்கள் போல. இன்று எங்கள் பகுதி சந்திப்பில் […]

Categories
சினிமா தமிழ்

ஏஸ் – படம் விமர்சனம்

விஜய் சேதுபதி படத்தில் நடித்திருக்கிறார் என்று சொன்னால், கூட்டம் கூட்டமாக சந்தோஷமாக மக்கள் வருகிறார்கள். படமே விஜய் சேதுபதி படம் என்றால் ஆளை விடுறா சாமி என்று கிளாம்பிவிடுவதாக சமீபத்தில் ஒரு கேலிப் புனைவுப் படம் அதிகம் பகிரப்பட்டது. ஆமாம், வரிசையாக அவர் நடித்த பல படங்கள் மக்களின் பொறுமையை சோதிக்கும் ரகமாகத்தான் இருந்தது. அதிலும் DSP படமெல்லாம் மரண அருவை என்று மக்கள் வெறுத்தது. ஆனால் அவரது 50 ஆவது படமான மஹாராஜா முதல் தரவரிசைப் […]

Categories
சிறுகதை நினைவுகள்

மாம்பழமும் நாமும்

மாம்பழம் பற்றி பலருக்கும் பல கதைகளும் இருக்கும். நமக்குத் தெரிந்து பரமசிவன் குடும்பம் பிரிந்ததே ஞானப்பழம் என்று பெயரிடப்பட்ட மாம்பழத்தின் காரணத்தினால்தான். அதைத் தாண்டி நமக்கெல்லாம், மாம்பழம் என்றவுடன் அப்துல்லா கதையும் ஞாபகத்தில் வரும். இதோ இங்கேயும் அதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஊரில் உள்ள ஒரு மிகப்பெரிய கஞ்சனின் மாம்பழத்தோட்டம் வழியாக அப்துல்லா நடந்து செல்கிறான்.அப்போது, அங்கே பழுத்துத் தொங்கிய மாம்பழங்களின் வாசனையை உணர்ந்து அவன், ஆஹா, எவ்வளவு மனம்.இதைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும் […]

Categories
கருத்து குட்டி கதை சிறுகதை

ஒவ்வொருவருக்கு ஒரு திறமை

ஒரு கதை ஒன்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு படகில், ஆற்றைக் கடக்க மூன்று மனிதர்கள் படகில் அமர்ந்தனர். மூவரும் நன்கு படித்த அளிவாளிகள்.ஒருவர் பேராசிரியர், ஒருவர் எழுத்தாளர், ஒருவர் விஞ்ஞானி. படகோட்டி துடுப்புப் போட்டு படகை ஓட்ட, மூவரும் அமைதியாய் ஏன் வருவானென்று உரையாடத் துவங்கினார்கள். உலகின் மிக முக்கியமான, சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி எல்லாம் பேசினார்கள். அவர்கள் மூவரும் பேசிக் கொண்டதை வேடிக்கை பார்த்தவனாகப் படகோட்டி துடுப்பைப் போட அவர்கள் இவனிடம் மெல்லப்பேச்சுக் கொடுக்கிறரார்கள். “ஏம்ப்பா […]

Categories
சினிமா

மாமன் திரைப்பட விமர்சனம்

வீட்டுக்கு வீடு வாசப்படி, எந்த வீட்டுல தான் சண்டை இல்ல? என்ற வாசகத்தை கடந்து வராத ஆட்களே இல்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு விதத்தில் வம்போ சண்டையோ வராமல் இருப்பதில்லை. உறவுகளை மையப்படுத்தியோ, வேறு ஏதாவது பிரச்சினைகளை மையப்படுத்தியோ, அல்லது பிரதானமாகப் பணத்தை, சொத்துப் பிரிவினையை மையப்படுத்தியோ சண்டைகள் வருவது இயல்பு தான். அந்த சூழலில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம், என்ன செய்கிறோம் , என்ன பேசுகிறோம் என்பது தான் விளைவுகளைத் தீர்மானிக்கிறது. சண்டைகளையும் […]

Categories
சினிமா

டெவில்ஸ் டபுள்- திரை விமர்சனம்

இப்போதெல்லாம் சினிமா தயாரிப்பாளர்களை எது காப்பாற்றுகிறதோ இல்லையோ, பேய் காப்பாற்றுகிறது என்ற வசனம் ஏகப் பொருத்தமாகிப்போனது. இந்த வாரம் சந்தானம் மற்றும் அவரது குழுவினரின் நடிப்பில் வெளியான டெவில்ஸ் டபுள் திரைப்படமும் அந்த ரகம் தான். டிடி வரிசைப்படங்களைப் போலவே சந்தானம் மற்றும் குழுவினர் பேய்களிடம் சிக்கிக் கொள்வதும், பிறகு அதிலிருந்து எப்படித் தப்பித்தார்கள் என்ற வழக்கமான கதையும், வழக்கமான நகைச்சுவையும் தான். திரைக்கதையில் சிறிய மாற்றம் செய்து இன்றைய தேதிக்கு ஏற்ப ஒரு மசாலா கலவையை […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

வறுமை தந்த அனுபவம்.

இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலான குழந்தைகள் வறுமை என்பதை உணரும் விதமாக வளர்வதில்லை. இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது பெரும்பான்மை மட்டுமே. 100 சதவீதம் அல்ல. இன்றைய நாளில் பொதுவாகவே ஒரு 3-4 வயது குழந்தை செல்போனை முழுமையாக இயக்கும் அளவிற்கு திறன் பெற்ற குழந்தைகளாகவும், பெரும்பாலான வீடுகளில் செல்லும் என்பது அத்தியாவசியம் போலவும் ஆகிப் போனது. எங்களது, அதாவது 90 களில், வீடுகளில் தொலைக்காட்சி என்பதே அரிது. தொலைக்காட்சியைக் கூடப்பக்கத்து வீடுகளில் சென்று தான் பார்க்க வேண்டிய கட்டாயம். ஆனால் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

சட்டமும் சட்டென்று செயல்படுவதில்லை.

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது தான். ஆனால் அதன் பாய்ச்சல் என்பதோ, ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. சாமானியன் என்றால் உடனடியாகப் பாய்ந்து விடுவதும், பணம் பதவியில் இருந்தால் கொஞ்சம் பக்குவமாகப் பாய்வதும் என்பது பழகி விட்டது. இன்று ஒரு தினசரியில் ,ஒரே பெட்டிக்குள் அடுத்தடுத்து இரண்டு குட்டிச் செய்திகள். இரண்டும் பெண்னை பலவந்தப்படுத்தியதும், பாலியல் சீண்டல் செய்த சம்பவம் பற்றிய செய்திகள் தான். இரண்டுமே சென்னையில் நிகழ்ந்த சம்பவம் தான். முதலாவது வடசென்னையிலும், இரண்டாவது துரைப்பாக்கம் பகுதியிலும் […]