Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

சினிமாவை மிஞ்சிய நிஜம்.

படங்கள் சில நேரங்களில் நடப்பு சம்பவங்களை மையப்படுத்தியும் எடுக்கப்படுகின்றன. அவ்வாறான ஒரு படம் மற்றும் சம்பவம் பற்றிய ஒரு பதிவு தான் இது. தற்போது பரபரப்பாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள பொள்ளாச்சி சம்பவம் குறித்து இங்கு அறியாதோர் இல்லை. 6 வருடங்கள் கடந்துவிட்டாலும் அந்த பாலியல் குற்றவாளிகளுக்கு சரியான முறையில் தண்டனை கிடைத்திருப்பது குறித்து அனைவருக்கும் மகிழ்ச்சி தான். இந்தக் குற்றங்கள் சம்பந்தமாக அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களும் முன்வந்து புகார் அளிக்கவில்லை.. ஆனால் குற்றவாளிகளே தாம் செய்த தவறுகளுக்கு […]

Categories
கருத்து

நானும், கருப்பு நாயும்.

தேவைகள் என்பது ஒவ்வொரு மனிதனிக்கும், மிருகத்திற்கும் , ஏன் உயிரற்ற பொருட்களுக்கும் கூட உண்டு. ஆம். சில பொருட்களை சூரிய ஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும் என்ற தேவை, சில பொருட்களை காற்றோட்டமாக வைக்க வேண்டும் என்ற தேவை. அதுபோல மனிதனுக்கும் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு தேவை உண்டு. பலருக்கும் பல தேவை. என்ன தேவை ? என்பதை அறிந்து அதை நிறைவேற்றுவது சேவை. அப்படி என்ன தேவை என்பதை அறியாமலே பலரும் பலருடனும் பலவிதமாகப் […]

Categories
கருத்து சிறுகதை

தவிப்பும், தன்னம்பிக்கையும் தந்த தருணம்.

படித்ததில் பிடித்துப் பகிர்ந்தது. நமது ஆசிரியர்கள் எழுதியதல்ல. எழுதியவர் யார் என்பது தெரியவில்லை. அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளும் , வாழ்த்துகளும். கொலம்பியா பல்கலைக்கழகம். கணித பேராசிரியர் பாடத்தை துவக்கினார். பாடத்தை துவக்கிய சில நிமிடங்களிலேயே அந்த மாணவனுக்கு உறக்கம் கண்களை சொக்கிக் கொண்டு வந்தது. அவனையும் அறியாமல் உறங்கினான். திடீரென மற்ற மாணவர்களின் சலசலப்பு சத்தம் கேட்டு கண் விழித்தான். கணித வகுப்பு முடிந்து பேராசிரியர் வெளியேறி இருந்தார். உறங்கியதை நினைத்து வெட்கப்பட்டுக் கொண்டே கரும்பலகையைப் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

ஆண்களும் பலனடையும் மகளிர் உரிமைத் தொகை

பொதுவாக நலத்திட்டங்கள் என்பது அடித்தட்டு மக்கள் மேம்படுவதற்காக அரசாங்கத்தால் செய்யப்படும் சமுதாய முன்னெடுப்பு நடவடிக்கைகள். தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, கட்டணச்சலுகை இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் அடிப்படையாகத் துவங்கிய இந்த நலத்திட்ட உதவிகள், பஸ் பாஸ், மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப் என்று பரிணாம வளர்ச்சி அடைந்து , இன்று மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களுக்கு மாதமாதம் பணம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இப்படி மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகையானது அவர்கள் படித்த பள்ளி, அதாவது […]

Categories
தற்கால நிகழ்வுகள்

டீயை விட கப் சுடுதே!

இரு நண்பர்களின் சந்திப்பு. நபர் 1: அடிச்சு துவம்சம் பண்ணிட்டாங்க மாப்ள. காலி .9 இடத்துல டமால் டமால் டமால் னு சும்மா தெறிக்க விட்ருக்காங்க. நபர் 2: ஆமா யா , ஆபரேஷன் சிந்தூர் னு பேர்லாம் வெச்சி, 2 பெண் இராணுவ அதிகாரிகள பத்திரிக்கை சந்திப்பில் பேச வச்சி ,சினிமா வை விட பெரிய அளவுல மக்கள் மனசுல ஒரு உற்சாகத்தை ஏற்படுத்திட்டாங்க.தீவிரவாதிகளுக்கு நல்ல பாடம். நபர் 1: இதோட நிறுத்தக்கூடாது. அவனுங்களுக்குத் தண்ணி […]

Categories
கருத்து சிறுகதை

டோரா புஜ்ஜி – சொன்ன கதை.

மிகப்பெரிய கதைகளை எப்போதும் தேடித் தேடிப் படிக்கத் தேவையில்லை. மிகச்சிறிய விஷயங்களிலருந்தே வெளிக்கொணரலாம். அதுபோலத்தான் இன்று ஒரு கதை என் மூளைக்குள் சிந்தனையைத் தூண்டியது. கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் வீட்டில் பொழுதோடு சுட்டி டிவியும் கார்ட்டூன் சேனல்களும் தான். அப்படி இன்று ஓடிக்கொண்டிருக்க, அதில் வந்த டோரா புஜ்ஜி என்ற வகையிலான கார்ட்டூனில் ஒரு சின்ன பகுதியைக் காண நேர்ந்தது. இப்ப நாம எல்லாம் ஒரு கதை படிக்கலாம் ப்ரெண்ட்ஸ். அது மூனு பன்னிங்கள பத்தின […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

பொறுப்பில்லா சில ஊடகங்கள்.

ஊடகங்கள் என்பது நீதித்துறை போல நாட்டின் மிகப்பெரிய தூண். ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் சக்தியும், வெளி உலகிற்கு வெளிப்படுத்தும் தன்மையும் ஊடகத்தைச் சார்ந்தது தான். அதுவும் இன்றைய நிலையில், ஆனையைப் பூனையாகவும், பூனையை ஆனையாகவும் மாற்றும் சக்தி ஊடகங்களுக்கு இருக்கிறது. ஒரு கட்சி, ஒரு சினிமா, ஒரு தனிப்பட்ட நபர் என்று அனைவரின் மீதும் அனைத்தின் மீதும் தாக்கத்தை உருவாக்கும் திறனுடையது ஊடகம். அப்படிப்பட்ட ஊடகங்களில் வேலை செய்யும் ஆட்கள் […]

Categories
கருத்து சிறுதுணுக்கு

உண்மை சுடுமெனில்?

உண்மை சுடுமெனில்? பொய் சொல்வது தவறில்லையே? வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல். என்ற வள்ளுவனின் வாக்கைக் கருத்தில் கொள்ளலாமே! சில நேரங்களில் உண்மையை விட பொய் சிறப்பு என்பதை விளக்கும் குறள் தானே இது? திருக்குறளையே எத்தனை முறை தான் உதாரணமாகச் சொல்வது என்றால், வேறு சிலவற்றை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாமே! கண்ணு உனக்கென்னடா ராசா? நீ பாக்க ராசா மாதிரி இருக்க என்று தன் பிள்ளைகளைப் பார்த்து சொல்லும் பெற்றோர்களின் கூற்று பல இடங்களில் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

மூட்டைப்பூச்சியைக் கொல்ல வீட்டைக் கொளுத்தலாமா?

ஓரிரண்டு நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசை நடத்தும் கட்சிக்காரர்கள், தமிழ்நாட்டில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினார்கள். காஷ்மீரில் நிகழ்ந்த படுகொலையை நிகழ்த்திய தீவிரவாதிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டமாம். அடப்பாவிகளா! அப்ப கொரோனா ல மக்கள் இறந்து போனா கொரோனாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவாங்க போல. இது மாதிரி ஒரு சினிமாவுல, நோய்க்கு எதிரான போராட்டம்னு RJ பாலாஜி நகைச்சுவை செஞ்சிருப்பாரு. அதேமாதிரி தான் இருக்கு இவனுங்க செஞ்சது. உண்மையிலேயே இந்தப்போராட்டம் என்ன கோரிக்கையோட இருந்திருக்கனும்னா, பாதுகாப்பு சரியாகத் தராமல், […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இது விபத்தல்ல, கொலை!

கொலை என்பது திட்டமிட்டு, ஒருவரைத் துப்பாக்கி வைத்து சுடுவதும், அல்லது கத்தி வைத்துக் கிழிப்பதும் மட்டுமல்ல. ஒரு சுமாரான போக்குவரத்து இருக்கும் சாலையில் 20 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி வைத்து விட்டு அதை மறிக்காமல், மாற்று வழிப்பதாகைகள் வைக்காமல் அந்தப்பள்ளத்தில் அந்த வழியாகப் பயணித்த ஒரு குடும்பத்தில் இருவர் விழுந்து இறந்தால், அதுவும் கொலை என்று தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆமாம் இது விபத்து தான்.ஆனால் அந்த விபத்து நிகழக் காரணம் என்ன தெரியுமா? […]