Categories
கருத்து விளையாட்டு

ஓடி விளையாடி மகிழட்டுமே!

பளிச்சிடும் கோடை காலம்.கிட்டத்தட்ட பள்ளிகளில் தேர்வு துவங்கி விட்டது.. விடுமுறையை நோக்கிய ஆர்வத்தில் மாணவர்கள்.. அய்யய்யோ லீவுல என்னன்ன அழிச்சாட்டியம் பண்ணக் காத்துருக்காய்ங்களோன்னு பீதியில் பெற்றோர்கள்.. அடிக்கிற வெயிலில் வெளிய போயி விளையாடாம இருக்க videogames, dvd player, play station, Android mobile games ன்னு பயங்கரமா யோசிச்சு காசு சேத்துட்டு இருக்கீங்களா? இல்ல வாங்கிட்டீங்களா? அப்படி எதாவது வாங்கியிருந்தா அத திருப்பி அனுப்புங்க மொதல்ல… அந்த காசுல நல்ல பருத்தி ஆடை 4 set…வாங்கிடுங்க […]

Categories
கருத்து

சமுதாயம் நம் கையில்

சினிமாவை வெறும் சினிமாவாக பார்க்கும் மனநிலை எப்போது வரும் என்பது புரியவில்லை. ஒரு சைக்கோ கில்லர் திரைப்படத்தை பார்த்து சைக்கோவாக மாறாத இளைஞர்கள், ஒரு நேர்மையான காவல் அதிகாரி படம் பார்த்து காவல் அதிகாரியாக மாறாத இளைஞர்கள், கதாநாயகன் புகை பிடிப்பதை மட்டும் உடனடியாகப் பின் தொடர்கிறார்கள்? என்ன காரணம்? எளிதாக கிடைக்கிறது. இதில் குற்றம் சினிமாக்காரன் மீது மட்டுமா? பள்ளி சீருடையுடன் பாருக்குள் கூத்தடிக்கும் மாணவர்கள், பாருக்குள் செல்ல வழி கொடுத்தது சினிமா மட்டும் தானா? […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

எல்லை தாண்டி, எமனாகி நிற்கும் நுகர்வு.

நுகர்வு… நம் தேவைக்கு ஏற்றதை வாங்குவது நுகர்வு எனப்படுவது மாறி, வியாபாரிகளின் தந்திரத்தால் நம்மிடையே திணிக்கப்படுகிறது, தற்கால நுகர்வு. இன்று காலை நடந்த ஒரு சிறிய வியாபாரம். அண்ணன் வடை குடுங்கனே என்றேன் எத்தனை என்று கேட்டார் அண்ணன். ஒரு வடை போதும்னே என்றேன். தம்பி 3 பத்து ரூபா என்றார். இல்லணே, நான் ஒருத்தன்தான். ஒரு வடை போதும். ஏற்கனவே சிம்ரன் மாதிரி மெல்லிசா இருக்கேன். இதுல 3 வடை சாப்பிட்டா வெளங்கிடும் என்று விளக்கம் […]

Categories
சினிமா

வீர தீர சூரன் – விமர்சனம்

வீர தீர சூரன். பெயருக்கு ஏற்றாற் போல, ஒரு வீரனின் கதை.பல வீரர்களை இதற்கு முன்பு இதேபோன்ற கதைகளில் நாம் பார்த்துப் பழகியிருக்கிறோம். இது தமிழ்சினாமாவுக்கு மிகப்புதிதான கதை ஒன்றுமல்ல. ஆனால் திரைக்கதையின் தன்மையும், சில காட்சிகளின் வடிவமைப்பும் நமக்கு நல்ல படம் பார்த்த திருப்தியைத் தருகிறது. ஒரு பெரிய வில்லனிடம் எத்தனை அடியாட்கள் இருந்தாலும், அந்த வில்லனுக்கு ஒரு இக்கட்டான சூழல் வரும்போது அவர்கள் மீது எல்லாம் நம்பிக்கை இல்லாமல் கதாநாயகன் தான் வந்து தன்னைக் […]

Categories
நினைவுகள்

இனிக்கும் நினைவுகள்!

பள்ளி ஆண்டு விழா! பெற்றோர், பெரியோர், தாத்தா, பாட்டி, பேரக் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் ஒருங்கிணைந்த நீங்கா நல்ல நினைவுகளைத் தரும் நிகழ்வு பள்ளியின் ஆண்டு விழா. இதன் உணர்வு எனக்கு 1992 துவங்கி இப்போது வரை பயணிக்கிறது. ஆமாம். 1992 ல் எனது பள்ளியின் ஆண்டு விழா!இந்த ஆண்டு எனது மருமகளின் பள்ளி ஆண்டு விழா. 1992 லும், இப்போதும் எனக்குக் கிடைத்த உணர்வு என்பது ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட […]

Categories
தற்கால நிகழ்வுகள்

தலைதூக்குமா தவெக?

தமிழக வெற்றிக் கழகம். கிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் ஆட்சியில் மாறி மாறி அமர்ந்த திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு பெரிய சக்தி உருவெடுக்கவில்லை. நாம் தமிழர் கட்சி ஈழப்போரின் முடிவில் பெரிதாகக் உருவெடுக்கத் துவங்கியது. ஆனால்அந்தகக்கட்சி அதன்பிறகு பல குழப்பங்களைச் செய்து, கொள்கை ரீதியாகக் குழப்பமில்லாமல் மக்களைச் சென்றடைந்து அவர்களின் மனதை வெல்வதில் சோடையாகத்தான் உள்ளனர். திராவிடக் கொள்கைகள் தமிழகத்தில் கோலோச்சி மக்களின் மனதையும் வென்று விட்டதால், மாற்றுக் கொள்கைகள் கொண்ட பாஜக, காங்கிரஸ் […]

Categories
கருத்து நினைவுகள்

பகிர்தலின் மகிழ்ச்சி

வாழ்க்கை என்பது எங்கோ தூரத்தில் இல்லை. திரும்பிப் பார்த்தால் நாம் இழந்த போன வார இறுதியிலும் அடுத்த வார இறுதியிலும் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கிறது. நண்பர்களுடன் சிறிது நேர உரையாடல். பழைய விஷயங்கள். டேய் நம்ம 4 வது பிடிக்கிறப்ப இருந்தாலே மைதிலி. இப்ப அவ புள்ள 4 வது படிக்குது டா. நம்ம பாரு இன்னும் உட்கார்ந்து அவள யோசிச்சுட்டு இருக்கோம் என்பதில் ஆரம்பித்து, மாப்ள headmaster நம்மள அடிப் பிரிச்சாரு ஞாபகம் இருக்கா? […]

Categories
தற்கால நிகழ்வுகள்

அரசுப்பேருந்து ஓட்டுநரின் அகங்காரம்

நமது பக்கத்தில் ஓரிரு நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தோம், அரசு அதிகாரிகளுக்குக் கடிவாளம் அவசியம் என்று. அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, சாதாரணமாக அரசுப் பணி செய்யும் அனைவருக்கும் அந்தக் கடிவாளம் அவசியம். சில வாரங்களுக்கு முன்பு நான் சந்தித்த மோசமான பேருந்து பயணத்தைப் பற்றியும், அது சம்பந்தமாக முதல்வர் பிரிவில் நான் அளித்த புகார் பற்றியும் எழுதியிருந்தேன். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து சரகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. “தெரியாம செஞ்சுட்டாங்க சார், நான் கண்டிச்சிருதேன்” என்று எளிதாக […]

Categories
கருத்து குட்டி கதை பாடல்

வாழ நினைத்தால் வாழலாம்..

மனிதன் வாழ்க்கை சிறப்பாகும் எப்போது? துயரத்தில் தோள் கொடுக்கவும், சந்தோசத்தை தூக்கி நிறுத்தவும், நல்லது செய்யும் போது பாராட்டவும், பாதை தவறும் போது அதட்டவும் ஆள் இருக்கும் போது. அப்படி எல்லாமாக. இருந்த ஒருவரை இழக்கும் போது வாழ்க்கையே முடிந்த எண்ணம் வரும். ஆனால் அத்துடன் வாழ்க்கை முடிவதில்லை. எங்கிருந்தோ ஏதோ ஒரு வகையில் எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும். தேடிப் பிடிக்கத் தெம்பிருந்தால் போதும். வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்? ஆழக்கடலும் சோலையாகும் ஆசை […]

Categories
கருத்து

பொறுப்பு வேண்டாமா? பிரபலங்களே!

சமீபத்தில் தினசரி ஒன்றில் ஒரு தலையங்கம் கண்டு வியந்தேன். ஆந்திர மாநிலத்தில் பொறுப்பில்லாமல் விளம்பரங்களில் நடித்து மக்களிடையே தரமில்லாத பொருட்களை சேர்த்ததற்காக சில பிரபலங்களின் மீது வழக்குகள் பதியப்பட்டதாக ஒரு செய்தி. இது போல பொறுப்பில்லாத பிரபலங்களை வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்பது தான் நமது வாதமும். முதலில் குழந்தைகளின் உணவுப் பதார்த்தங்களில் துவங்கும் இந்த விஷயம், வாழ்வின் இறுதி வரை நாம் உபயோகிக்கும் அத்தனை பொருட்களையும் நம் விருப்பமில்லாமல் நமது தலையில் கட்டுகிறது. […]