Categories
இலக்கியம் தமிழ்

கபிலர் பேசுகிறார்!

என் அருமைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு எனது வணக்கங்கள். என் பெயர் கபிலன்.கபிலர் என்று தமிழ் வரலாற்றில் இடம்பெற்றவன். தோராயமாக தமிழ் படித்தவர்கள் திடுக்கென குழம்பலாம், கம்பனா? கபிலனா?நமக்குக் கம்பர் தானே தெரியும்?இவர் யார் கபிலர் என்று. என்னை நினைவுபடுத்ததத்தான் இதோ உங்கள் முன் வந்திருக்கிறேன். நான் குறிஞ்சித் திணையில் கவி பாடுவதில் பெயர் பெற்றவன்.குறிஞ்சித் திணை என்பது நினைவிருக்கிறது தானே?மலையும் மலை சார்ந்த இடத்தையும் குறிப்பிடுவது. அதென்னப்பா ஓரவஞ்சணை?மற்ற நிலங்களான, முல்லை , மருதம் , நெய்தல் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

சாதித்த தங்க மங்கைகள்!

திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமல்ல!தூக்கிக் கொண்டாடவும் வைத்திருக்கும் இந்திய அணி. சிறிது நட்களுக்கு முன்பு கூட இது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி என்று தான் நம்மால் குறிப்பிடப்பட்டது.ஏனென்றால் அவ்வளவு பிரபலமாகவில்லை, நம் மனதில் அந்த அளவிற்குப் பதியவில்லை. ஆனால் இன்று ஆண்களுக்குப் பெண்கள் நிகரானவர்கள், ஏன் அவர்களை விடவும் ஒரு படி மேலே சென்று சாதித்துக் காட்டுவோம் என்று 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை தனதாக்கிக் கொண்டிருக்கிறது இந்தத் […]

Categories
கருத்து சிறுகதை

ஆறறிவுள்ள மனிதராவோமா?

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். இந்தத் திருக்குறளை நாம் அடிக்கடி எங்காவது வாசித்திருந்தாலும் இதன் அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்வதில்லை. ஒரு சின்ன கதை .தெரியாத இரு நபர்கள் சந்திக்கிறார்கள். இடம்: கோவில். நல்ல கூட்டமான கோவில். அந்த இரு நபர்களும் குடும்பத்துடன் தான் கோவிலுக்கு வந்திருக்கிறார்கள். சிறிது நேரம் காத்திருந்த மக்கள் சாமி அலங்காரம் முடிந்தவுடனே முண்டியத்துக்கொண்டு நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு சாமியைப் பார்க்கச் சென்றனர். ஏங்க க்யூல வரக்கூடாதா , […]

Categories
தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

திரும்பிப் பார்க்க வைத்த இந்தியப் பெண்கள் அணி!

தலைநிமிரந்து பார்க்கிறது இந்தியா ! திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்தியப்பெண்கள் கிரிக்கெட் அணி. இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி என்றால் தூக்கிப் பிடிக்கவும் தாங்கி நிற்கவுமர் கோடான கோடி ரசிகர்கள் உண்டு. ஆனால் பெண்கள் கிரிக்கெட் அணி இப்போது தான் ஓரளவிற்கு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்த்தாலே நாம் இதை விளங்கிக் கொள்ளலாம்பாத்திர சோப்பிலிருந்து துணி துவைக்கும் பவுடர் வரை அனைத்தையும் ஆண்கள் கிரிக்கெட் வீரர்கள் தான் விற்று வருகிறார்கள். இவ்வளவு பேசுறியே செவ்வாழ நீ […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

டாக்டருக்கே பல்பா? ப்ரௌவ்னியின் மகிமை!

படித்ததில் பிடித்தது! கிளினிக்கில்மூன்றரை வயது பெண் குழந்தைக்குதொடர்ந்து மூன்று நாட்களாக காய்ச்சல்கூடவே வாந்தி பரிசோதித்ததில்சீசனல் ஜூரம் என்று கண்டறிந்துஅதற்குரிய சிகிச்சை பரிந்துரைத்து அனுப்பினேன். மறுநாள்குழந்தையின் அம்மா “காய்ச்சல் சரியாகிடுச்சு சார்.. பாப்பா மோஷன் கருப்பா போறா சார். பயமா இருக்கு.. அதான் கூட்டிட்டு வந்தேன்” காய்ச்சல் மூன்று நாட்களாக இருந்துநான்காவது நாள் குணமாகி கூடவேமலம் கருப்பாகச் சென்றால்நம்ம புத்தி நேராகடெங்குவுக்குத் தான் செல்லும். பரிசோதனை செய்தேன்.பாப்பா நன்றாக இருந்தார்.வாந்தி குணமாகி இருந்தது.வயிற்று வலி இல்லை. ஆனாலும் மலம் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

இது மிகவும் தவறு!

சமீபத்தில் ஒரு காணொளி காட்சியைக் காண நேர்ந்தது.ஒரு பெண் அரசு அதிகாரி, தன்னை அணுகி ஏதோ பணி நிமித்தமாக வந்திருந்த ஒரு நடுத்தர மதிப்புள்ள வயது மிக்க ஆறு, அதுவும் அந்தப் பெண்ணை விட வயதில் அதிகமான ஆளை நிற்க வைத்துக் கொண்டே வெகு நேரமாக , தனக்கு என்ன உணவு வேண்டும், தனது பணியாளர்களுக்கு என்ன உணவு வேண்டும், தனது வண்டி ஓட்டுனருக்கு என்ன உணவு வேண்டும் என்று நீளமான பட்டியலை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

புயலில் பொரி சாப்பிடலாமா?

நாங்கலாம் புயல்லயே உக்காந்து பொரி சாப்புடறவங்க என்று வசனம் வேண்டுமானால் பேச எளிதாக இருக்கலாம்.ஆனால் புயல் அடித்தால் கதிகலங்கிப் போய்விடுவோம் என்பதை சமீபத்திய தானே, வர்தா , கஜா ஆகிய புயல்கள் நமக்குப் பாடம் நடத்திச் சென்றிருக்கின்றன. புயல் ஏன் உருவாகிறது எப்படி உருவாகிறது? நாம் பள்ளிக்கல்வியில் படித்த பகுதி தான்.கடல்நீர் வெப்பம் அதிகரிக்கும் போது அதன் மேல்பகுதி காற்று சூடாகி மேலே எழும். இதை நாம் பல நேரங்களில் உணர்ந்திருக்கலாம். கிணற்றிலோ குளம் குட்டையிலோ நல்ல […]

Categories
தகவல்

இந்திய இராணுவ வீரர்களின் உணவுமுறை.

படித்ததில் பிடித்தது! சமீபத்தில் ஒரு ராணுவ வீரரை சந்தித்தேன்வருட விடுமுறையில் என்னை சந்திப்பார்அவரிடம் ராணுவம் குறித்த செய்திகளை ஆர்வத்துடன் அறிந்து கொள்வது வழக்கம். இந்த முறை பேச்சு அவர் உண்ணும் உணவு பக்கம் திரும்பியதுசாதாரணமாக எந்த பிரச்சனையும் போரும் இல்லாத போது அவர்களது முகாமில் இருக்கும் போது வழக்கம் போல சோறு / சப்பாத்தி / பிரியாணி என்று உணவு கிடைக்கும் என்று கூறினார். அவர் சட்டிஸ்கர் நக்சல் அதிகம் உள்ள கானகப்பகுதிகளில் பணியாற்றும் வீரர்.பல சமயங்களில் […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

அறிவில்லா கத்துக்குட்டி?

ரேஷனில் பொருள் வாங்க மக்கள் வரத்தேவையில்லை.நடமாடும் ரேஷன் வருகிறது. மருந்து வாங்க மருத்துவமனைக்கு மக்கள் வரத்தேவையில்லை. மருந்துகள் வீடு தேடி வருகிறது. பல அரசு சார்ந்த துறை ரீதியான வேலைகளை இணையதளத்திலேயே முடித்துக் கொள்ளலாம். இப்படி பல விஷயங்களுக்காக மக்களை அலைய விடாமல் எல்லாம் இல்லம் தேடி பல விஷயங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதைத்தாண்டி மக்களும் உணவு மளிகை என்று பல விஷயத்தையும் வீட்டில் இருந்தபடியே இணையத்தில் பதிவிட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள். சினிமாவும் கூட முன்புபோல திரையரங்குளுக்குச் […]

Categories
விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் தீபாவளி!

மட்டைப்பந்தாட்டம் அதாவது கிரிக்கெட் விளையாட்டிற்கு இந்தியாவில் ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம்.அதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட வீரர் அல்லது ஜோடிக்கு பெரும் ரசிகர் படையே இருந்து வந்திருக்கிறது. 90 களில் பிறந்த குழந்தைகளுக்கு சச்சின்- கங்குலி,சச்சின் – சேவாக்,டிராவிட் ( எல்லோரோடும் எல்லா நேரங்களிலும் பொருந்தும் வீரர்)ராபின் சிங்- அஜய் ஜடேஜா சிறிது காலத்திற்குப் பிறகு தோனி, கம்பீர்,யுவராஜ் சிங், போன்ற வீரர்களுக்கு பெரிய ரசிகர் படை இருந்தது. ஆனால் இந்த காலகட்டத்தில் பெரிய ஜோடிப்புரட்சி […]