ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். ஒழுக்கம் என்பது உயிரினும் மேலானது என்ற வள்ளுவனின் வாக்கு புத்தகத்திலும், தேர்வில் எழுதி இரண்டு மதிப்பெண் பெறுவதற்கும் தான் என்று மாறிப் போனது. கோவில், கடவுள், பக்தி , இறை நம்பிக்கை என்பது மனிதன் தனக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று பயந்து ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தான்.ஆனால் இன்று அது ஒரு அன்றாட செயலாகவும், போட்டி மனப்பான்மையிலும், பகை மூட்டுவதற்கும் தான் பயன்படுகிறது. […]
Category: தமிழ்
நல்லதுக்குக் காலமில்லை.
படித்ததில் பிடித்தது! சமீபத்தில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளிக்குப் பேசப் போயிருந்தேன்.பேசுவதற்கு முன்னால் என்னைத் தனி அறையில் உட்கார வைத்திருந்தார்கள்.பக்கத்தில் அமர்ந்திருந்தவர்தான் தமிழ் டீச்சராக இருக்க வேண்டும். கொஞ்ச நேரம் தயக்கத்தோடு பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று என்னைப் பார்த்து, “சார் எங்க ஸ்டூடன்ட்ஸ் லிட்டரரி காம்பெடிசன்ல சூப்பரா கவிதை எழுதியிருக்காங்க . படிக்கிறீங்களா?” என்றார். எனக்கும் பொழுது போக வேண்டுமென்பதால் ” கொடுங்க” என்று சுரத்தில்லாமல் சொன்னேன். அவர் வெளியே போய் நீலநிற ஃபைலை எடுத்து வந்தார். […]
கனவுகளை சிதைத்த விபத்து!
நாம் சரஸ்வதி பூஜை அன்று வாகனங்களுக்குத் தேவை பூஜை மட்டுமல்ல, பராமரிப்பும் தான் என்று எழுதியிருந்தோம். அதை நிரூபிக்கும் விதமாக நெஞ்சை உலுக்கும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. கனவுகளோடு வாழ்க்கையை வாழக் காத்திருக்கும் நான்கு இளைஞர்களின் வாழ்வை முடித்திருக்கிறது பாழாய்ப்போன தறிகெட்டு ஓடிய லாரி ஒன்று. ஓசூர் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.முன்னே சென்ற காரின் மீது தறிகெட்டு ஓடிய லாரி மோதி அந்தக்கார் அதற்கு முன்னே சென்ற ஒரு சரக்கு வாகனத்தில் மோத, காரில் […]
காந்தாரா – திரை விமர்சனம்.
ஒரு படம் பார்க்கும் போது அந்தப்படத்தைப் பற்றிப் புகழ்வதோ அல்லது குறை சொல்வதோ தான் வழக்கம்.. ஆனால் இன்று நான் அந்த வழக்கத்திலிருந்து மாறுபடுகிறேன். ஏனென்றால் நமது மொழியில் இதைவிட சிறப்பான பிரம்மாண்டமான, தரமான திரைக்கதையுடன் உருவான அருமையான படம் ஒன்று நமது மக்களால் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை.ஆனால் இன்று இந்தப்படத்தை ஒவ்வொருவரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம். இன்றைய படம் காந்தாரா. நாம் கொண்டாடத் தவறிய படம் ஆயிரத்தில் ஒருவன். நான் காந்தாரா படத்தை குறையாகச் சொல்லவில்லை. […]
நம் தங்கம், நம் உரிமை!
கையில இருக்கு தங்கம், கவலை ஏன்டா சிங்கம்னு ஒரு விளம்பரம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரொம்பப் பிரபலமா ஒளிபரப்பு ஆனது. அந்த விளம்பரம் வரும் முன்பே அது தான் நிலை. கையில தங்கம் இருக்கு என்ற தைரியம் எப்போதுமே இந்திய நடுத்தரக் குடும்ப மக்களுக்கு உண்டு. எனது சொந்த அனுபவத்தில், சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு கூட, நான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவமனை செலவு பற்றி நான் கவலை இல்லாமல் சொகுசாக மருத்துவ உபசரிப்புகளை […]
திருக்குறளில் நாம் எவ்வளவோ நல்ல கருத்துகளைக் கேட்டு கடந்து வந்திருப்போம். 2000 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு நூலை , அதாவது 2000 ஆண்டுக்குப் பிறகும் இன்றைய சூழலில் பயன்படும் கருத்துகளைக் கொண்ட நூலை எப்படி எழுதியிருக்க முடியும் என்று தினம் தினம் நாம் அந்த நூலை நினைத்து ஆச்சரியப்படும் அளவிற்கு நிறைய விஷயங்கள் அதனுள் பொதிந்து கிடக்கிறது. இன்றைய தினத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களைப் பார்க்கலாமா? முதல் விஷயம். ஏய் தாய்க்கெழவி நீளமா பேசாத!அதாவது சொல்ல […]
ஒரு குற்றவாளியைப் பிடிப்பது முக்கியமல்ல, அவர் என்ன குற்றம் செய்தாலும் பரவாயில்லை.ஆனால் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்கத் தகுந்த சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லாவிட்டால், அவர் விடுவிக்கப்படுவார் என்பது சாதகமா? பாதகமா? ஒரு சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து தூக்கி எறிந்து மறுநாள் அதே இடத்திற்குச் சென்று அந்தக் குழந்தையின் சடலத்தை எரித்தார் என்று பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டு, கீழ் நீதிமன்றத்திலும் , உயர் நீதிமன்றத்திலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தண்டனைக் குற்றவாளி தன்னுடைய பணபலத்தால் […]
அரசியல் என்பது மக்கள் சேவை, மக்களின் நலன், பொது சிந்தனை , பொது வாழ்வு என்பதெல்லாம் மாறி வியாபாரமாகிப் போனது.10 ரூ போட்டு 100 ரூ சம்பாதக்க, பதவி போகத்தை அனுபவிக்கத் தான் இன்றைய அரசியல்வாதிகளும் அரசியலும். உயர்மட்டத்தில் துவங்கி அடிமட்டம் வரை இன்று இதுதான் நிலை. ஒரு காலத்தில் கொள்கை ரீதியான அரசியல் முன்னெடுப்பு, கொள்கை ஈர்ப்பு, பொது சிந்தனை என்ற காரணத்திற்காக பணக்காரர்கள் முதல் பாமரன் வரை அரசியலில் ஈடுபட்டனர். அவரவர் தாங்கள் உழைத்த […]
படித்ததில் பிடித்தது ! காமராஜர் ஆட்சி காலத்துகிசு கிசு..! அவரது ஆட்சியில் எழுந்த ஒரே கிசுகிசு, இதுவாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம்,ஒரு தொழிற்சாலை தொடங்க காமராஜர் கொடுத்ததிடீர் அனுமதி ! திண்டுக்கல் நகரத்தை விட்டு வெகு தொலைவில், ஒரு தொழிற்சாலை துவங்க அனுமதி கேட்டிருந்தார்கள்.அதை பரிசீலனையில்வைத்திருந்தார்கள் அதிகாரிகள். இதை தெரிந்து கொண்ட காமராஜர், அவசரம் அவசரமாக அதிகாரிகளை அழைத்தார். ‘உடனடியாக அந்த திண்டுக்கல்காரர்களுக்கு தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுங்கள்’ என்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்து விட்டு, புறப்பட்டுப் […]
இப்படி இம்சை செய்யலாமா?
ஊருக்குப் போய் வரும் வருத்தத்தைப் பற்றிய கட்டுரையை முந்தைய நாள் எழுதியிருந்தோம்.இந்த வருத்தத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக பேருந்து கட்டணங்கள், கூட்ட நெரிசல், வாடகைக் கார் ஆட்டோ கட்டணங்கள் நம்மை மேலும் பாடாய்ப்படுத்துவது உண்மை தான். நான் கல்லூரியில் படித்த காலத்தில் ஊரிலிருந்து கோவை செல்வது ஒரு பெரிய அக்கப்போர் என்றால் கோவை சென்ற பிறகு அங்கிருந்து எனது கல்லூரிக்கு மாநகரப்பேருந்தில் செல்வது அதை விடக்கொடூரமானது. ஊரிலிருந்து கோவை செல்லும் போதாவது, சில நேரம் […]