இன்று நான் கண்டு ஜீரணித்துக் கொள்ள இயலாத ஒரு சம்பவம். ஒரு உணவகத்திற்கு சென்று உணவுப் பொட்டலம் வாங்குவதற்காக பட்டியலை விசாரித்த்போது, அங்கே கல்லாவில் நின்றவர் , என்னிடம் சார் சார் என்று பதிலளித்து பணமும் பெற்றுக் கொண்டார். உணவுப் பொட்டலம் தயாராகும் முன்பு,ஒரு தேநீரோ காபியோ பருகலாம் என்று அதற்கும் ரசீதைக் கேட்டேன். காபிக்கு தனியாக ரசீதைத் தராதவர், வெளியே இருந்த அந்த காபி போடும் அம்மாவிடம், அலமேலு சாருக்கு ஒரு காபி போடு என்றார். […]
Category: குட்டி கதை

நண்பர்கள் இருவர் சித்திரை மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில். தான் தங்கியிருக்கும் அறையை சுத்தம் செய்து விட்டு, குளித்து விட்டு நல்ல பசியுடன் கடைக்குச் சென்று பார்த்தால் கூட்டம். அமர்ந்து சாப்பிட இடம் கிடைக்காது என்று தெரிந்து உணவுப் பொட்டலம் வாங்கிக்கொண்டு அறைக்குச் செல்கிறார்கள். நல்ல பசி என்பதால், பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் 65 என வகை வகையாக வாங்கிச் சென்றார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பாசத்துடன் பகிர்ந்து சாப்பிடுவதைப்பார்த்தால்… அடேயப்பா, இதுவல்லவா நட்பு? சாப்பிட்டு முடியும் […]
வாழ நினைத்தால் வாழலாம்..

மனிதன் வாழ்க்கை சிறப்பாகும் எப்போது? துயரத்தில் தோள் கொடுக்கவும், சந்தோசத்தை தூக்கி நிறுத்தவும், நல்லது செய்யும் போது பாராட்டவும், பாதை தவறும் போது அதட்டவும் ஆள் இருக்கும் போது. அப்படி எல்லாமாக. இருந்த ஒருவரை இழக்கும் போது வாழ்க்கையே முடிந்த எண்ணம் வரும். ஆனால் அத்துடன் வாழ்க்கை முடிவதில்லை. எங்கிருந்தோ ஏதோ ஒரு வகையில் எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும். தேடிப் பிடிக்கத் தெம்பிருந்தால் போதும். வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்? ஆழக்கடலும் சோலையாகும் ஆசை […]
புத்தாண்டை வரவேற்போம்

புத்தம் புதிதாக பிரிண்டிங் பிரஸ் வாசனை நுகர்ந்து, சரஸ்வதியா, லட்சுமியா, பிள்ளையாரா, பெருமாளா என்று தேடித்தேடி எடுத்து ஆசை ஆசையாகத் தொங்க விட்ட நாட்காட்டி முழுதையும் கிழித்துத் தள்ளியாயிற்று. இன்று அது கலையிழந்து வெறும் எலும்புக்கூடாகத் தெரிகிறது. நாம் கடந்து வந்தது, ஒரு ஆண்டு என்று எளிதாகச் சொல்லிவிட இயலாது. 365 நாட்கள். 8760 மணி நேரங்கள். இன்னும் நிமிடம் மற்றும் நொடிகளில் கணக்கிட்டால் பெரிய வியப்பாகத்தான் இருக்கும். வாழ்வில் ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியையும், பயனுள்ளதாக […]

பேராசை பெருநஷ்டம் இதனை விளக்க வழக்கமாக சொல்லப்படும் கதைகளில் முன்னொரு காலத்தில் ஒரு வியாபாரி இருந்தார் என்றும், முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒருவர் வீட்டில் வளர்ந்த தங்க முட்டையிடும் வாத்து என்றும் கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போதெல்லாம் இதை விளக்குவதற்கு முன்னொரு காலக் கதை எல்லாம் தேவையில்லை. தினம் தினம் செய்திகளில் பேராசையால் பெருநஷ்டமடைந்த பல மக்களை மாறி மாறி பார்த்துக் கொண்டு்தான் இருக்கிறோம். ஆன்லைன் மோசடி, வேலை வாங்கித் தருவதாக மோசடி, பங்கு பரிவர்த்தனை முதலீடு […]

தமிழக மன்னர்களின் நீதிநெறிமுறைகள் பற்றிய சிறிய தகவல்கள். கண்ணகி கோவலனுக்காக வழக்காடிய போது, பாண்டிய அரசன் நெடுஞ்செழியன் தன் தவறை உணர்ந்து கொண்டு, உடனடியாகத் தீர்ப்புக் கூறி அந்த இடத்திலேயே யானே கள்வன் என்று கூறி மரண தண்டனையை ஏற்றக் கொண்டான் என்பதை சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறோம். இதில் நமக்குத் தெரியாத செய்தி என்னவென்றால் உலக வரலாற்றிலேயே ஒரு நீதிபதி, தன்னைத்தானே குற்றவாளி (யானே கள்வன்) என்று அறிவித்துக் கொண்ட முதல் வழக்கு இது தான். கதை 2: […]
பட்டினத்தாரின் அனுபவம்

பட்டினத்தாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகப் பெரிய கோடீஸ்வரரான அவர், ஒருநாள் அத்தனை செல்வத்தையும் துறந்துவிட்டு துறவறம் பூண்டார். கோவணத்துடன் கிளம்பினார். கையில் திருவோடு வைத்திருப்பது கூட உண்மையான துறவுக்கு எதிரானது என்பது அவர் கருத்து. ஒருமுறை ஒரு வயல் வழியாக நடந்து சென்றவர் மிகவும் களைப்படைந்தார். அப்படியே வரப்பில் படுத்து உறங்கினார். வளர்ந்திருந்த நெற்செடிகள் காற்றில் அசைந்து அவரின் சட்டை அணிந்திராத உடம்பில் குத்தி ரணப்படுத்தின. ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாதவராக அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது […]

கடவுள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் மனிதர்களைப் படைக்கிறார். ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை படைக்கப்பட்டவுடன் எல்லாரையும் பூலோகம் அனுப்ப திட்டம் தயார் ஆகிறது. பூலோகம் போகும் முன் கடவுளின் ஏற்பாட்டோடு, ஒரு விருந்தும் தயார் ஆகிறது. மனிதர்களிடம் சொல்லப்படுகிறது.“மனிதர்களே, நீங்கள் பூலோகம் செல்லவிருப்பதால் இங்கே வழி அனுப்பும் விருந்து ஒன்று வைக்கப்படும், சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த அறையில் கடவுள் உங்களை ஆசி கூறி வழி அனுப்புவார். அனைவரும் விரைவாக சாப்பிட்டு வாருங்கள்” என… உடல் படைக்கப்பட்டவுடன், உச்சகட்ட […]

அனுமனாக பார்த்திபன். ராமர் வேடத்தில் வடிவேலு. ராமர்: டேய் அனுமாரு இங்க வாடா, நம்ம ஆளுங்களையும் என் தம்பியையும் காப்பாத்தனும்னா, சஞ்சீவி மலையில இருக்கிற மூலிகைய புடுங்கிட்டு வரனும் டா. கொஞ்சம் சீக்கிரம் புடுங்கிட்டு வாடா! அனுமன்: (முணுமுணுத்தபடி) என்னைய பாத்தா பச்செல புடிங்கி மாதிரி தெரியுதா? ராமர்:யப்பா நீதான் நம்ம டீம்ல நான் என்ன சொன்னாலும் செய்வ, அதனால தான் உன்கிட்ட சொல்றேன். கொஞ்சம் கோச்சுக்காம, குரங்கு சேட்டையெல்லாம் செய்யாம, தயவு செஞ்சு கொஞ்சம் சீக்கிரம் […]
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல் குறள் 84 மேற்கண்ட திருக்குறளின் பொருளானது, வீட்டிற்கு வந்தவர்களுக்கு மலர்ந்த முகத்துடன் நல்ல விருந்தோம்பல் செய்பவர்களின் இல்லத்திலே திருமகள் குடியிருப்பாள். இந்தக் குறளை விளக்கும் விதமாக ஒரு குட்டிக் கதை உள்ளது. இந்தக் கதையின் காலம் தமிழ் கடைச்சங்க காலம் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு ஊரில் ஒரு நல்ல மனிதர் வசித்து வந்தார். அவர் ஒரு வியாபாரி, அவ்வப்போது வெளியூர் பயணங்கள் செல்ல நேர்ந்த காரணத்தால் அவருக்கு […]