இன்றைய நாட்களில் மீம்கள் என்ற வகையிலான கேலி உருவகங்கள் அதிகப்படியான மக்களால் விரும்பப்படுகிறது. ஒரு திரைப்படத்தின் பிரபலமான காட்சியை வேறொரு நிகழ்வுக்கு உருவகப்படுத்தி கேலி செய்வது நடைமுறை. முன்பும் இது போன்ற கேலி செய்யும் வழக்கம் இருந்தது. ஆனால் அது கேலிச் சித்திரங்களாகவோ அல்லது எழுத்து வடிவிலோ இருந்தது. உதாரணமாக பாரதியார் நடத்திய இதழில் கேலிச்சித்திரங்கள் பிரபலம். சமீபத்திய இந்து பத்திரிக்கை வரை நாம் அதைக் கண்டிருக்கலாம். அதேபோல, துக்ளக் என்ற வார இதழில் சோ அவர்கள் […]
