Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் வணிகம்

மக்கள் மட்டும் இளிச்சவாயர்களா?

சமீத்தில் நடிகர் ஒருவரின் பேட்டி ஒன்றைக் கண்டேன். அவரது அன்றாட உணவுப் பழக்கம் பற்றி அதில் பேசியிருந்தார். மிக ஆரோக்கியமான உணவுப் பழக்கம். காலை எழுந்தவுடன் ஒரு கப் ப்ளாக் காபியில் (கடுங்காபி) ஒரு கரண்டி நெய் விட்டுக் கலக்கிக் குடிப்பாராம். பிறகு இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி. காலை உணவாக 4 முட்டை வெள்ளைக்கரு மட்டும்.11 மணிக்கு ஆப்பிள், பீட்ரூட், கேரட் கலந்து ஒரு ஜூஸ். மதியம் ஓரளவு பெரிய இரண்டு சிக்கன் துண்டுகள் (மசாலா, […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் வணிகம்

ஏமாந்து கொண்டே இருக்கிறோமே?

அறிமுகமாகிறது, மீரா அரிசி கஞ்சி ஷாம்பூ. அரிசி கஞ்சியின் இயற்கையான நற்குணத்தால் இதை உபயோகிக்கத் துவங்கிய ஓரிரு முறையிலேயே நல்ல மாற்றம் தெரியும். சிகை மினுமினுக்கும், உறுதி பெறும் என்று இதன் அறிமுக விழாவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு லிட்டர் ரூ.215 மட்டுமே. இதைத் தான் என் பாட்டியும் சொன்னார்கள். குளிக்கும் போது லேசாக அரசிக் கஞ்சியை தலையில் தேய்த்துக்குளி, முடி நல்லா இருக்கும் என்று. ஆனால் வானொலியிலும், தொலைக்காட்சிப் பெட்டியிலும் இதே மீரா சிகைக்காய் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் வணிகம்

புலியைப் பார்த்து பூனை கோடிடலாமா?

பலதரப்பட்ன உணவு மற்றும் அதன் சுவை என்பது இப்போது பெரிய பேசுபொருளாகி உள்ளது.சமூக வலைத்தளங்களான யூடியூப் ,பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என எங்கு சென்றாலும், இந்த உணவுப் பிரியர்களின் அட்டகாசம் தாங்க இயலவில்லை. மிக யதார்த்தமாக ஆரம்பித்த இந்த உணவுப் பிரபலத்துவமும் விளம்பரமும் இப்போது கடும் போட்டியாகிப் போனது. காலையில் அவசரமாகக் காலைக்கடன் கழிப்பதற்காக பொள்ளாச்சி அருகிலுள்ள தோப்புக்குச் சென்று பிறகு குளிப்பதற்காக சிறுவாணி பக்கம் வரும் வழியில் ஈரோடு நகரிலே உள்ள ஐயப்பன் உணவகத்தைப் பற்றி […]

Categories
தற்கால நிகழ்வுகள் வணிகம்

ஏமாற்றப்படும் நாம்!

2016 ஆம் ஆண்டில் நான் எனது முகப்புத்தகத்தில் எழுதியிருந்த விளம்பர ஆதிக்கம் மற்றும் கார்ப்பரேட்டுகளின் தந்திரம் பற்றிய ஒரு பதிவு.அன்றே நண்பர் சிவப்ரேம் இந்தப்பதிவைப் படித்து வியந்து பாராட்டினார். பதிவின் சாராம்சமான, இளநீர் பெட் பாட்டிலில் அடைத்து விற்கப்படலாம் என்ற விஷயம்,, வெளிநாடுகளில் துவங்கி விட்டதாகச் சொன்னார்.இன்று இங்கேயும் கூட வந்து விட்டது அந்த நிலை. இனியாவது மாறுவோமா? பதிவு கீழே! பிச்சைக்காரன்.. ஒருவனிடம் ஒரு ரூபாய் பெறுகிறான்.. ஒரு மணிநேரத்திற்கு குறைந்தபட்சம் 15 பேர்.. 12 […]

Categories
தற்கால நிகழ்வுகள் வணிகம்

சிறு குறு வியாபாரிகளை நசுக்கும் கார்ப்பரேட் நுணுக்கம்

முந்தின நாள் மாலை 7.15 மணிக்கு குட் பேட் அக்லி படத்திற்கு மீண்டும் பதிவு செய்து சிறிது காரணங்களால் வெகு தாமதமாகி போக முடிநாமல் போனது.சரி வீட்டில் இருந்தாலும் பொழுது போகாது என்று கிளம்பி திரையரங்கம் இருக்கும் அந்த வணிக வளாகம் வரை சென்றோம்.ஏதாவது சாப்பிட்டு வீடு திரும்பலாம் என்று. தற்செயலாக எனது பர்ஃப்யூம் காலி என்பது நினைவில் வரவே அங்கிருக்கும் டி மார்ட் உள்ளே நுழையலாம் என்ற எண்ணம்.எனக்குப் பொதுவாக இந்த மிகப்பெரிய வணிக வளாகங்களில் […]