ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இப்படி உயிரைக்காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேணிக்காக்கப்பட்ட ஒழுக்கமானது, தலைமுறைகள் தாண்ட, கலாச்சாரங்கள் சிறிது மாற, அதிலே காணாமல் போகிறது. 90 முதல் 2000 கால கட்டங்களில் , பள்ளிக்கு ஒழுங்கான சிகை அலங்காரத்தோடு செல்லாவிட்டாலே அடிதான். அடித்த கையோடு வீட்டுக்கு அனுப்பி சிகைமுடியை வெட்டி வரச்செய்வார்கள். வீட்டிற்குச் சென்றால், “நான்தான் முன்னாடியே சொன்னேன்ல, இன்னைக்குப் படிப்புப் போச்சா?“ என்று சொல்லி அங்கே இரண்டு அடி விழும். […]
வழக்கொழிந்த ஒழுக்கம்!
