மனமிருந்தால் மலையையும் புரட்டிப் போடலாம் என்ற கடந்து வராதோர் இல்லை. அதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் இந்த மனிதர்.மலையைப் புரட்டவில்லை.நொறுக்கியே விட்டார். தெய்வாத்தா லாகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும். திருக்குறளில் பொருட்பாலில் அரசியல் இயலில் 62 ஆவது அதிகாரமான ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்தில் வரும் இந்தக் குறிளினை நாம் பலமுறை வாசித்திருப்போம். இந்தக்குறளை தன் வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் தான் இந்த மலை மனிதர் தசரத் மான்ஜி. யார் இவர்? எதற்காக மலையை உடைத்தார் என்பதைக் காணலாம். […]
