Categories
சினிமா

ரோந்த் – சினிமா விமர்சனம்

பல சினிமாக்கள் பொழுதுபோக்குக்காகவே என்றாலும் சில சினிமாக்கள் பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி மனதை நெருடும் சினிமாவாக அமைந்து விடுகிறது. இதில் மலையாளப் படங்கள் அதிகளவில் இருப்பது நிதர்சனம். ஏனென்றால் இன்றளவும் கூட கதையைப் பெரிதாக நம்பிப் படத்தை எடுக்கும் வழக்கம் அவர்களிடையே உள்ளது. கதாநாயகனுக்காக தனியாக மசாலா தூவுவது, மண்ணை அள்ளித் தூத்துவதெல்லாம் அவர்களிடம் குறைவு. அப்படி மனதை நெருடிய சமீபத்திய படம் ஒன்று ரோந்த். மலையாளப்படம், ஆனாலும் மொழிபெயர்க்கப்பட்டு பல மொழிகளிலும் ஹாட்ஸ்டார் ஓடிடி யில் […]

Categories
கருத்து சினிமா

திரையில் மட்டும் நல்லவர்?

சில கதைகளை வாசித்தால் அது நம் மனதிலிருந்து என்றுமே நீங்குவதில்லை. அதோடு மனதில் ஒரு சின்ன தாக்கத்தையும் ஏற்படுத்தும். அப்படி நான் வாசித்த ஒரு கதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கதை கூட அல்ல, ஒரு சிறு துணுக்கு தான்.ஆனால் நறுக்கென மண்டையில் குட்டும் துணுக்கு. பரபரப்பாக சினிமா சூட்டிங் நிகழ்ந்தது. ஒரு தொழிற்சாலை வாசலில், தொழிலாளர்கள் தங்களது நியாயமான கூலிக்காகப் போராடும் காட்சி அது. தொழிலாளியான கதாநாயகன், காரில் வந்திறங்கும் முதலாளியிடம், வயித்துப்பசி பட்டினி என்று […]

Categories
சினிமா

கூலி- வேலை சுத்தமா?

ஒரு வழியாக பல எதிர்பார்ப்புகளைத் தாண்டி உச்ச நட்சத்திரத்தின் படம் வெளியாகி விட்டது.அரங்கங்கள் நிரம்பி வழியும் கூட்டம். திக்குமுக்காடும் திரையரங்குகள்.முதல் நாள் என்பதால் மட்டுமல்ல, மீதி வரும் மூன்று விடுமுறை நாட்களுக்கும் இருக்கைகள் முன்பதிவு முடிந்து விட்டது. சரி இந்தக் கூலி வாங்கிய பணத்திற்கு திருப்தியாக வேலையைச் செய்தாரா என்பதைப் பார்ப்போம். கதை. எதிர்பாராத புதிய கதையெல்லாம் இல்லை. கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் சண்டை, அதுல உடைஞ்சது சுருதிஹாசன் மண்டை.அப்புறம் எப்படி ரஜினி ஜெயிச்சாரு? எதுக்காக இந்த சண்டை, […]

Categories
சினிமா தகவல் நினைவுகள்

வியாதியல்ல மருந்து!

விடமுடியாத பழக்கங்கள் என்று நம்மில் பலருக்கும் பல விஷயங்கள் இருக்கலாம்.அவை நல்ல பழக்கமா அல்லது தேவையில்லாத ஒன்றா, பணம் விரயமாக்கும் செயலா என்று கவலையில்லாமல் நாமும் அதைப் பின்தொடர்வோம். யார் எத்தனை முறை சொன்னாலும் அதை நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம். சிலருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் முன்பு இருந்தது.சிலருக்கு குதிரைப் பந்தயம். இதெல்லாம் பெரிய ரகம். இதற்கடுத்த ரகமும் உண்டு..காலையில் காபி குடிக்காமல் விடியாது.நாளிதழ் இல்லாத நாளில்லை .இது மாதிரி சிலருக்குப் பழக்கம். இன்னும் […]

Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

கூலி- டிக்கெட் கிடைச்சிதா?

கூலி படத்திற்கான முன்பதிவுகள் துவங்கிவிட்டது. இனி ஒருவாரத்திற்கு சின்ராச கையில பிடிக்க முடியாது என்பது போல, ரஜினி ரசிகர்களைக் கையில் பிடிக்க இயலாது. பலதரப்பட்ட மக்களும், குறிப்பாக கூலி வேலை செய்பவர்களும் தங்களால் இயன்ற அளவிற்கு செலவு செய்து இந்தப்படத்தை நிச்சயம் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. கட்டாயம் படம் ஓரிரு நாட்களில்100 கோடி வசூலைத் தாண்டும் என்பது இப்போதே தெரிந்து விட்டது. மொத்த வசூல் 400 கோடியா? 600 கோடியா அல்லது ஆயிரம் கோடியா என்பது தான் […]

Categories
கருத்து சினிமா

தலைவன் தலைவி – திரை விமர்சனம்

இரண்டு பறவைகள் காதலிப்பது அழகு தான். ஆனால் அந்தக் காதல் நிலையாக ஒரு மரக்கிளை, ஒரு பறவைக்கூடு, இதெல்லாம் அவசியம். மனிதர்களின் காதலும் அவ்வாறு தான்.நல்ல அன்பான கணவன் மனைவியின் அன்பும் உறவும் நீடித்து நிலைத்திருக்க, அவர்களுக்கு இடையிலான அன்பு மட்டும் போதாது. சுற்றமும், உறவும், நட்பும், குடும்பமும் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை ஜாலியான வகையில் எடுத்துரைத்த படம் தலைவன் தலைவி. பார்த்த உடன் காதல், தெய்வீகமான காதல் என்று இழுக்காமல், பெண் பார்க்கும் […]

Categories
சினிமா

மாரீசன்- திரை விமர்சனம்

நல்ல படங்களில் லாஜிக் பார்க்கத் தோன்றுவதில்லை.கதை போகும் போக்கில் நாமும் இனிமையாகப் பயணிக்கலாம் என்று தான் தோன்றும். அதுபோல ஒரு இனிய பயணம் சொல்லும் கதை. ஒரு மறதி வியாதி உள்ள நடுத்தரம் தாண்டிய வயது உள்ள நபர், தன் வீட்டிற்குத் திருட வந்த திருடரிடம் உதவி கேட்டு அவருடனே பயணிக்கும் கதை. கதையின் ஒரு நாயகனான பகத் பாசில் ஒரு திருடன்.நாகர்கோவிலில் இருக்கும் ஒரு வீட்டில் திருட உள்ளே நுழைகிறார். அங்கே கதையின் இன்னொரு நாயகனான […]

Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

DNA – திரை விமர்சனம்

திருமணமான தம்பதிகளை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துவது வழக்கம். அந்தப் பதினாறு செல்வங்களுள் மக்கட்பேறு, அதாவது பிள்ளைச் செல்வமும் முக்கியமான ஒன்று. திருமணமான தம்பதிகளுக்கு இப்போதைய காலத்தில் இருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் அதுவே.ஏனென்றால் இந்த வாழ்க்கை முறை நம்மை அந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது. குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து, உடலை வருத்தி, IVF போன்ற மருத்துவ முறைகளை பலரும், அது வேணாம்டா சாமி நாம ஏதாவது குழந்தைய தத்தெடுத்து வளர்க்கலாம் என்று […]

Categories
அரசியல் கருத்து சினிமா தற்கால நிகழ்வுகள்

மௌனம் பேசுமா?

சமுதாய அக்கறையும் பொறுப்பும் உள்ள ஆட்கள், எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மிகப் பிரபலமான ஆட்கள், நேரத்திற்கு ஏற்றாற் போல, வேடமிட்டால் அது அவர்ளின் மீதான மரியாதையை காலி செய்து விடும். கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவல்துறையினரால், விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பல நடிகர்களும் எந்த விதக் கருத்தும் தெரிவிக்காதது சமூக வலைதளங்களில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் சாத்தான்குளத்தில் தந்தையும் […]

Categories
சினிமா

3 BHK- திரை விமர்சனம்

கல்யாணம் பண்ணிப் பார், வீட்டையும் கட்டிப் பார் என்று நம்மூரில் ஒரு சொலவடை உண்டு. அதற்குக் காரணம் இந்த இரண்டு விஷயங்களையும் செய்து முடிக்க நாம் படும் அவஸ்தைகளும் மெனக்கெடல்களும் தான். அப்படி இதில் இரண்டாவதாக சொல்லப்பட்ட வீடு என்ற விஷயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் 3 BHK. இதில் மையக்கரு வீடு என்றாலும் படத்தில் குடும்பத்திற்கான அத்தனை விஷயங்களும் உள்ளடங்கியிருப்பது மிகச்சிறப்பான விஷயம் இது படத்தை நமக்கு மிக அருமையான படமாக உணர்த்துவதற்கு காரணமாக […]