Categories
சினிமா

டெவில்ஸ் டபுள்- திரை விமர்சனம்

இப்போதெல்லாம் சினிமா தயாரிப்பாளர்களை எது காப்பாற்றுகிறதோ இல்லையோ, பேய் காப்பாற்றுகிறது என்ற வசனம் ஏகப் பொருத்தமாகிப்போனது. இந்த வாரம் சந்தானம் மற்றும் அவரது குழுவினரின் நடிப்பில் வெளியான டெவில்ஸ் டபுள் திரைப்படமும் அந்த ரகம் தான். டிடி வரிசைப்படங்களைப் போலவே சந்தானம் மற்றும் குழுவினர் பேய்களிடம் சிக்கிக் கொள்வதும், பிறகு அதிலிருந்து எப்படித் தப்பித்தார்கள் என்ற வழக்கமான கதையும், வழக்கமான நகைச்சுவையும் தான். திரைக்கதையில் சிறிய மாற்றம் செய்து இன்றைய தேதிக்கு ஏற்ப ஒரு மசாலா கலவையை […]

Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

சினிமாவை மிஞ்சிய நிஜம்.

படங்கள் சில நேரங்களில் நடப்பு சம்பவங்களை மையப்படுத்தியும் எடுக்கப்படுகின்றன. அவ்வாறான ஒரு படம் மற்றும் சம்பவம் பற்றிய ஒரு பதிவு தான் இது. தற்போது பரபரப்பாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள பொள்ளாச்சி சம்பவம் குறித்து இங்கு அறியாதோர் இல்லை. 6 வருடங்கள் கடந்துவிட்டாலும் அந்த பாலியல் குற்றவாளிகளுக்கு சரியான முறையில் தண்டனை கிடைத்திருப்பது குறித்து அனைவருக்கும் மகிழ்ச்சி தான். இந்தக் குற்றங்கள் சம்பந்தமாக அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களும் முன்வந்து புகார் அளிக்கவில்லை.. ஆனால் குற்றவாளிகளே தாம் செய்த தவறுகளுக்கு […]

Categories
சினிமா

Retro- திரை விமர்சனம்

சினிமா என்றாலே கதாநாயகனைப் பொறுத்து முதலில் முக்கியத்துவம் பெறுகிறது.அதைத் தாண்டி தான் மற்ற விஷயங்களெல்லாம் பேசப்படும். இந்த வாரமும் அப்படித்தான் ஒரு முக்கியமான கதாநாயகனின் படம் , அதுவும் ஒரு வெற்றிகரமான இயக்குனரின் இயக்கத்தில் வெளியானதால் அதுதான் பரபரப்பாகப் பேசப்பட்டது. போதாக்குறைக்கு கன்னிமா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சிறுசு முதல் பெருசு வரையிலான மக்கள் மனதைக் கவர, இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் வலுத்தது. எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா என்றால், முழுமனதுடன் பதில் சொல்ல இயலாது. […]

Categories
சினிமா

டூரிஸ்ட் பேமிலி- திரை விமர்சனம்.

ஒரு நல்ல சினிமா சொல்லாமலே வெல்லும் என்று நிரூபித்திருக்கிறது, இந்த வாரம் சத்தமே இல்லாமல் வெளிவந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம். இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வாழ முடியாமல் அகதிகளாக தமிழ்நாட்டிற்குள் திருட்டுத்தனமாக எந்த வித அனுமதியும் இன்றி நுழையும் ஒரு குடும்பம் என்ன ஆனது எப்படி ஜீவித்தது என்பதே படத்தின் மையக்கதை. அந்தக் குடும்பம் ராமேஸ்வரத்தில் நுழையவும், அங்கே ஒரு குண்டு வெடிப்பதும் என ஒரு மர்ம முடிச்சு படம் முழுக்க அந்தக் குடும்பத்தைப் […]

Categories
சினிமா

கேங்கர்ஸ்- திரை விமர்சனம்

கேங்கர்ஸ் னு ஒரு வார்த்தையே இல்லையே?அதென்ன கேங்கர்ஸ்? கேங்ஸ்டர்ஸ் தானே? “கேங்க்ஸ்டர்ஸ் தான் இருக்குல்ல. இது புதுசா இருக்கட்டும்.“ அப்படின்னு படத்துல ஒரு வசனம் வரும். அதுபோலத்தான் படம். பழசு ஆனால் கொஞ்சம் புதுசு. ஆமாம். சற்றே குழப்பமாகத்தானே இருக்கிறது.படத்திலும் பல காட்சிகள் அப்படித்தான் இருந்தது. எங்கயோ பாத்த மாதிரி இருக்குது, ஆனாலும் கொஞ்சம் புதுசாத்தான் இருக்கு. சுந்தர் சி. ன் மசாலா நகைச்சுவை மழைச்சாரல்.முழுநீள மசாலா நகைச்சுவைப் பட வரிசைகளில் இதுவும் ஒன்று. புதுக்கதை எல்லாம் […]

Categories
சினிமா

டென் ஹவர்ஸ்- திரை விமர்சனம்

டென் ஹவர்ஸ். ஹாலிவுட் படம் போல பெயர். அதேபோல படத்தின் மொத்த நீளமும் ஹாலிவுட் படத்திற்கு இணையானதாக 116 நிமிடங்கள் மட்டுமே. படம் ஆரம்பித்த விதமும், படத்தின் போக்கும், இடைவேளை வரை அடுத்தடுத்து நிகழ்ந்த எதிர்பாராத திருப்பங்களும், காவல்துறையிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பிறகும், சிறிதும் தயங்காமல் காவல்துறையினரைக் கொன்று குவித்து விட்டு அசால்ட்டாகத் தப்பிக்கும் வில்லன் குழு என படம் முதல் பாதியில் நம்மை மிரட்டி விடுகிறது. ஒரு பெண் கடத்தப்படுவதாகத் துவங்கும் காட்சி, […]

Categories
சினிமா தற்கால நிகழ்வுகள் பாடல்

குருவிக் கூட்டிற்கு வாடகை கேட்ட ஆலமரம்.

இதோ மீண்டும் துவங்கிவிட்டார் இசை அரசன் தமது இம்சையை. குட் பேட் அக்லி படத்தில் தனது பழைய பாடல்கள் உபயோகிக்கப்பட்டிருப்பதால் தனக்கு ஐந்து கோடி பணம் தர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தேவையா என்று நாம் பேசினால் அதெப்படி தவறாகும் என்று ஒரு கூட்டம் கிளம்பி வரும். இப்போது இளையராஜாவின் இந்தச் செயல் தேவையில்லாத ஒன்று என்று பேசுபவர்கள் இளையராஜாவின் ரசிகர்கள் அல்ல என்றும், மேலும் அவர்களில் சிலருக்கு ஜாதிய கட்டமைப்புப் பின்புலமும் தீவிரமாக […]

Categories
சினிமா

Good Bad Ugly- விமர்சனம்

Good, Bad, Ugly Good ஆ? Bad ஆ ? Ugly ஆ? அமர்க்களம், அட்டகாசம், மங்காத்தா, வாலி, தீனா போன்ற அஜித்தின் பழைய படங்களின் வரலாறு, அதிலிருந்த தரமான மாஸான காட்சிகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்து ஒரு கதையை தயார் செய்து; அதாவது கதைக்காக படமில்லாமல் இது மாதிரி ஒரு படம் எடுக்க என்ன கதை தேவைப்படுமோ அந்தக் கதையை படத்தினுள்ளே நுழைத்து தான் விரும்பிய, தன்னைப் போல தல ரசிகர்கள் விரும்பிய வெறித்தனமான […]

Categories
கருத்து

சமுதாயம் நம் கையில்

சினிமாவை வெறும் சினிமாவாக பார்க்கும் மனநிலை எப்போது வரும் என்பது புரியவில்லை. ஒரு சைக்கோ கில்லர் திரைப்படத்தை பார்த்து சைக்கோவாக மாறாத இளைஞர்கள், ஒரு நேர்மையான காவல் அதிகாரி படம் பார்த்து காவல் அதிகாரியாக மாறாத இளைஞர்கள், கதாநாயகன் புகை பிடிப்பதை மட்டும் உடனடியாகப் பின் தொடர்கிறார்கள்? என்ன காரணம்? எளிதாக கிடைக்கிறது. இதில் குற்றம் சினிமாக்காரன் மீது மட்டுமா? பள்ளி சீருடையுடன் பாருக்குள் கூத்தடிக்கும் மாணவர்கள், பாருக்குள் செல்ல வழி கொடுத்தது சினிமா மட்டும் தானா? […]

Categories
சினிமா

வீர தீர சூரன் – விமர்சனம்

வீர தீர சூரன். பெயருக்கு ஏற்றாற் போல, ஒரு வீரனின் கதை.பல வீரர்களை இதற்கு முன்பு இதேபோன்ற கதைகளில் நாம் பார்த்துப் பழகியிருக்கிறோம். இது தமிழ்சினாமாவுக்கு மிகப்புதிதான கதை ஒன்றுமல்ல. ஆனால் திரைக்கதையின் தன்மையும், சில காட்சிகளின் வடிவமைப்பும் நமக்கு நல்ல படம் பார்த்த திருப்தியைத் தருகிறது. ஒரு பெரிய வில்லனிடம் எத்தனை அடியாட்கள் இருந்தாலும், அந்த வில்லனுக்கு ஒரு இக்கட்டான சூழல் வரும்போது அவர்கள் மீது எல்லாம் நம்பிக்கை இல்லாமல் கதாநாயகன் தான் வந்து தன்னைக் […]