Categories
சினிமா தமிழ் நினைவுகள் மறைவு

கலை வணக்கம்- திரு.டெல்லி கணேஷ்.

நடிகர் டெல்லி கணேஷ். நாடக சபை முதல் இன்றைய வெப் சீரிஸ், அதாவது இணையத் தொடர் வரை நடித்த ஒரு மகா நடிகர். இவர் வெறும் நடிகர் மட்டுமல்லாது, சில படங்களில் பிண்ணனி குரலும் கொடுத்திருக்கிறார். இவர் நடிகர் என்பதைத் தாண்டி, நடிக்க வருவதற்கு முன்பு இந்திய விமானப்படையில் பணிபுரிந்தார் என்பது கூடுதல் அதிசயத் தகவல். இவர் எனது சொந்த மாவட்டமான தூத்துக்குடியில் பிறந்தவர் என்பது மனதிற்கு நெருக்கமான செய்தி. பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே இவரது படங்களைப் […]

Categories
தமிழ் நினைவுகள் மறைவு

இளைப்பாறுங்கள் சாம்ராட் – ரத்தன் டாடா

மிகப்பெரிய தொழிலதிபர், பெரிய கார்ப்பரேட் முதலாளி என்பதையெல்லாம் தாண்டி, மிகப்பெரிய கொடை வள்ளல் என்ற ஒரு விஷயம் தான் அவர்மீது மொத்த இந்திய மக்களுக்கும் அன்பு ஏற்படுத்தியது. கொரோனா காலங்களிலும் சரி, மற்ற காலங்களிலும் சரி அள்ளிக் கொடுப்பதில் ஒரு போதும் அவர் எவரை விடவும் குறைந்ததில்லை. சரியான புள்ளிவிவரங்கள் இல்லாவிட்டாலும் வாய்வழியாக சொல்லப்படும் கருத்தின் படி அவர் தனது சம்பாத்தியத்தில் கிட்டதட்ட 60-65 சதவீதம் வரை தானமாக அளித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் அவ்வளவு கொடுத்திருந்தாலும் […]