Categories
அரசியல் தகவல் தற்கால நிகழ்வுகள்

S.I.R- நமது உரிமை நிலைநாட்டப்படுமா?

SIR – Special Intensive Revision.சிறப்பு தீவிர திருத்தம் இந்த சிறப்பு தீவிர திருத்தம் எதற்காக நிகழ்த்தப்படுகிறது? இறந்த வாக்காளர்களின் பெயர் நீக்க, இந்தியக் குடிமகன் அல்லாதவர்களின் வாக்குரிமையை நீக்க, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அதை நீக்க மற்றும் போலி வாக்காளர்களை நீக்க. சரி இவர்களை நீக்குவதெல்லாம் உத்தமம் தான். ஆனால் இவர்களுக்கெல்லாம் வாக்காளர் அடையாள அட்டை கொடுத்தது யாருடைய தவறு? போகிற போக்கில் ஒருவர் இருவேறு தொகுதிகளில் வாக்காளர் […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

அறிவில்லா கத்துக்குட்டி?

ரேஷனில் பொருள் வாங்க மக்கள் வரத்தேவையில்லை.நடமாடும் ரேஷன் வருகிறது. மருந்து வாங்க மருத்துவமனைக்கு மக்கள் வரத்தேவையில்லை. மருந்துகள் வீடு தேடி வருகிறது. பல அரசு சார்ந்த துறை ரீதியான வேலைகளை இணையதளத்திலேயே முடித்துக் கொள்ளலாம். இப்படி பல விஷயங்களுக்காக மக்களை அலைய விடாமல் எல்லாம் இல்லம் தேடி பல விஷயங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதைத்தாண்டி மக்களும் உணவு மளிகை என்று பல விஷயத்தையும் வீட்டில் இருந்தபடியே இணையத்தில் பதிவிட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள். சினிமாவும் கூட முன்புபோல திரையரங்குளுக்குச் […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

அரசியல் எனும் வியாபாரம்!

அரசியல் என்பது மக்கள் சேவை, மக்களின் நலன், பொது சிந்தனை , பொது வாழ்வு என்பதெல்லாம் மாறி வியாபாரமாகிப் போனது.10 ரூ போட்டு 100 ரூ சம்பாதக்க, பதவி போகத்தை அனுபவிக்கத் தான் இன்றைய அரசியல்வாதிகளும் அரசியலும். உயர்மட்டத்தில் துவங்கி அடிமட்டம் வரை இன்று இதுதான் நிலை. ஒரு காலத்தில் கொள்கை ரீதியான அரசியல் முன்னெடுப்பு, கொள்கை ஈர்ப்பு, பொது சிந்தனை என்ற காரணத்திற்காக பணக்காரர்கள் முதல் பாமரன் வரை அரசியலில் ஈடுபட்டனர். அவரவர் தாங்கள் உழைத்த […]

Categories
அரசியல் நினைவுகள்

காமராஜர் ஒரு பொக்கிஷம்!

படித்ததில் பிடித்தது ! காமராஜர் ஆட்சி காலத்துகிசு கிசு..! அவரது ஆட்சியில் எழுந்த ஒரே கிசுகிசு, இதுவாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம்,ஒரு தொழிற்சாலை தொடங்க காமராஜர் கொடுத்ததிடீர் அனுமதி ! திண்டுக்கல் நகரத்தை விட்டு வெகு தொலைவில், ஒரு தொழிற்சாலை துவங்க அனுமதி கேட்டிருந்தார்கள்.அதை பரிசீலனையில்வைத்திருந்தார்கள் அதிகாரிகள். இதை தெரிந்து கொண்ட காமராஜர், அவசரம் அவசரமாக அதிகாரிகளை அழைத்தார். ‘உடனடியாக அந்த திண்டுக்கல்காரர்களுக்கு தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுங்கள்’ என்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்து விட்டு, புறப்பட்டுப் […]

Categories
அரசியல் கருத்து சினிமா தற்கால நிகழ்வுகள்

மக்களிடம் ஒரு வேண்டுகோள்!

ஒரு ஆசிரியர், ஒரு இராணுவ வீரர் ,ஒரு காவலாளி, ஒரு விஞ்ஞானி, ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் என இந்த சமூகத்திற்கு நேரடியாக சேவை செய்யும் மனிதர்களுக்கு இல்லாத மரியாதையும் அன்பும் இங்கே சினிமாக் கூத்தாடிகளுக்கு இருப்பது தான் மிகுந்த வேதனை அளிக்கக் கூடிய விஷயம். இன்று இத்தனை உயிர்கள் போனதற்குக் காரணம் ஒரு போரட்டமோ, கோரிக்கை ஆர்ப்பாட்டமோ அல்லது கலவரமோ வன்முறையோ அல்ல. ஒரு உச்சகட்ட சினிமா நடிகரைக் காண வந்த கட்டுக்கடங்காத கூட்டம். அவர் […]

Categories
சினிமா

சக்தித் திருமகன்- விமர்சனம்.

சக்தித் திருமகன் என்ன சொல்கிறார் பார்க்கலாம். சமீபத்தில் வெளியான விஜய் ஆன்டணி அவர்களின் 25 ஆவது படமான சக்தித் திருமகன் பெருவாரியான ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெறாவிட்டாலும், ஒரு முறை பார்த்து ரசிக்கக்கூடிய படம் தான். என்ன பழசு?என்ன புதுசு? பழசு என்றால், அதே ஊழல், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பித்தலாட்டம், ஏமாற்றப்படும் சுரண்டப்படும் வஞ்சிக்கப்படும் பொதுமக்கள் , இவர்களைக் காப்பது கதாநாயகனின் கடமை.அவன் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், சாவும் நிலையே வந்தாலும் பொதுமகக்ளைக் காப்பாற்றுவதே தனது தலையாய […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

முயலுக்கு மூன்று கால்தானா?

2026 தேர்தலுக்காக பல கட்சிகளும் பலவிதமான கூட்டணிக் கணக்குகளைப் போட்டு வெற்றிக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் தமிழர் கட்சியோ எந்தவித கூட்டணியும் அமைத்துக்கொள்ளப் போவதில்லை என்ற அதே நிலையில் இருப்பதால் இந்தக் கூட்டணிக் கணக்கு குழப்பங்கள் இல்லை. ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில், மக்கள் இருக்கும் மனநிலையில், கூட்டணி அமைக்காமல் வெல்வது எந்த விதத்திலும் சாத்தியமில்லை என்பதைத் தெரிந்திருந்தும் கூட, நாங்கள் எங்கள் நிலைப்பாடில் இருந்து மாறுவதில்லை, ஆனால் வெற்றியும் வேண்டும் என்றால், அது […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

இது பண்புமல்ல, நமது பண்பாடுமல்ல!

நடந்து முடிந்தது இந்தியா – பாகிஸ்தான் போர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் வீசிய குண்டு மழையில் பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்தும் உயிரிழந்தும் வீடு திரும்பினார்கள்.அவர்களால் நீண்ட நெடு நேரம் முறையாக சண்டையிட முடியாத காரணத்தால் அவர்கள் நினைத்த இலக்கை அடைய இயலவில்லை. பதிலுக்கு பாகிஸ்தான் வீரர்கள் வீசிய குண்டுமழையை அசால்ட்டாக கையாண்ட இந்திய ராணுவ வீரர்கள் வந்து குண்டுகள் சிலவற்றை அவர்கள் பக்கமே திருப்பி எறிந்தும், வடிவேலு பாணியில் இது வெடிகுண்டு அல்ல, வெறும்குண்டு என […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வீக் எண்ட் (வீக்) பிரச்சார வியூகம்.

அரசியல் களம் மிக அதிகமாக சூடு பிடிக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தல்போட்டி மும்முனைப் போட்டி என்பது உண்மையா அல்லது மாயையா என்பது ஊர்ஜிதமாகாவிட்டாலும், மிகப்பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் தவெக என்ற அரசியல் கட்சியை மூன்றாவது போட்டியாளராக பதிவிட்டிருக்கிறது. ஆனால் அந்தக் கட்சியின் சார்பாக தொடர்ச்சியாக பெரிய செயல்பாடுகள் இல்லாதது அதற்கு மிகுந்த பின்னடைவைத் தான் ஏற்படுத்தி வைக்கிறது. மாநாடு முடிந்து ஓரிரு நாட்கள் தவெக தவெக என்று பேசிய வாய்கள் எதுவும் இப்போது அதைப்பற்றி பேசுவதே இல்லை..காரணம் அந்த […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

வார்த்தைய விடலாமா எடப்பாடி சார்?

இடக்கரடக்கல் என்ற ஒரு விஷயத்தைக் நாம் படித்திருப்போம்.ஒரு பொருளை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது, ஆனால் அந்த இடத்தின் ஒழுக்கம் கருதி அந்த விஷயத்தை வேறு விதமாக சொல்வது தான் இடக்கரடக்கல் எனப்படும். உதாரணத்திற்கு அவன் எங்கே என்று கேட்கும் போது , மலம் கழிக்கச்செல்கிறான் என்று சொல்வதை விட கொள்ளைப்புறம் செல்கிறான் என்று சொல்லி அந்த விஷயத்தைத் தெரிவுபடுத்துவதோடு அல்லாமல், சொல்ல வந்த விஷயத்தையும் முகசுழிவு இல்லாமல் சொல்லி விடுகிறோம். இதுபோல இடக்கரடக்கல் என்பது இன்றைய […]