திருவிழாக்கள் மிகவும் அழகாகத் தான் இருந்தது,காவல்துறை நண்பர்கள் வேடிக்கை மட்டும் பார்த்த காலம் வரை! ஜாதி என்றார்கள், கலவரம் என்றார்கள்,காவல்துறை உண்மையிலேயே காவல் காக்கும் நிலை வந்தது! அம்பலக்காரர்கள் மட்டும் சூழ்ந்து காக்க வேண்டிய கடவுள் காவல்துறையால் வளைத்துக் காக்கப்பட்டார்! இரவு 1 மணிக்கு, ஏம்ப்பா மணி ஒண்ணுதானயா இன்னொரு பாட்டு போடுயா என்ற வாசகம் ஒலித்தது சிறிது காலத்திற்கு முன்! இப்போதோ “இந்தாங்கப்பா உங்கள பத்து மணியோட நிகழ்ச்சிய முடிக்கச் சொன்னோம்ல?மணி 10.30 ஆகுது, இன்னும் […]
Tag: அரசியல்

அஞ்சலையம்மாள். தவெக மாநாட்டுத் திடலில் காமராஜர், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார் போன்ற தலைவர்களோடு கம்பீரமாக நிற்கும் அஞ்சலையம்மாள். இது யார் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சில காலத்திற்கு முன்பே பள்ளிப் புத்தகங்களில் இவரைப்பற்றிய குறிப்புகள் பாடமாக இணைக்கப்பட்டது. இன்று நான் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது இந்தக் கேள்வி எழாமல் இல்லை. யார் இந்த அஞ்சலையம்மாள் என்று. இவர் யாரென்று பார்க்கலாமா? முதலில் இவர் பெற்ற பெரும்புகழை ஆராயலாம். சில காலத்திற்கு முன்பு […]
மாபெறும் மாநில மாநாடு 😂 மா- பெறும் மாநில மாநாடு. இந்த பிரச்சினை குறித்த காணொளி ஏற்கனவே இணையத்தில் பரவலாக பேசப்படும் நிலையில், நாம் நமது பயணத்தில் ஒரு பகுதியாக இதை மேற்குறிப்பிட்டு பேச வேண்டியது அவசியமாகிறது. ஏற்கனவே விஜய் அவர்கள் இந்த தவெக வை நடத்த வாயில் வயரைக்கடித்து வண்டி ஓட்டுவது போல ஓட்ட வேண்டும் என்று ஒரு உருவகக் கதை எழுதியிருந்தோம். அதை சற்றும் ஏமாற்றாத வகையில் அந்த கட்சியின் தொண்டர்கள் மிகப்பெரிய பேனர் […]
தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சினை மாப்பிள்ளையோட சீப்பை ஒழித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும் என்பது போல, சில விஷயங்களில் சமீப காலமாக நிகழ்ந்து வரும் கேலிக்கூத்துகள் ஏற்புடையதாக இல்லை. திருவள்ளுவருக்குக் காவி அணிவித்தாலும், அவர் இந்து என்று சொன்னாலும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அவர் கூறிய கருத்து மாறாது. அதுபோல, கனியன் பூங்குன்றனார் வழிவாழும் தமிழ்ச் சமூகத்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கருத்து மாறாது. வெளித்தோற்றத்தின் மாற்றம், ஒட்டுமொத்த கருத்தையும் மாற்றி […]

இன்றைய நாட்களில் மீம்கள் என்ற வகையிலான கேலி உருவகங்கள் அதிகப்படியான மக்களால் விரும்பப்படுகிறது. ஒரு திரைப்படத்தின் பிரபலமான காட்சியை வேறொரு நிகழ்வுக்கு உருவகப்படுத்தி கேலி செய்வது நடைமுறை. முன்பும் இது போன்ற கேலி செய்யும் வழக்கம் இருந்தது. ஆனால் அது கேலிச் சித்திரங்களாகவோ அல்லது எழுத்து வடிவிலோ இருந்தது. உதாரணமாக பாரதியார் நடத்திய இதழில் கேலிச்சித்திரங்கள் பிரபலம். சமீபத்திய இந்து பத்திரிக்கை வரை நாம் அதைக் கண்டிருக்கலாம். அதேபோல, துக்ளக் என்ற வார இதழில் சோ அவர்கள் […]
உனக்கென்னப்பா நீ ராஜா வீட்டு கன்னுக்குட்டி என்ற சொல்லாடலை நாம் அடிக்கடி எங்கேயாவது கடந்து வந்திருப்போம். அதாவது கஷ்டப்படாமல் வாழ்வில் சிறப்பாக வாழ்ந்து, வெவ்வேறு உயரங்களை, ஒரு பாமரன் கனவில் கூட நினைக்க முடியாத உயரங்களை எளிதாக அடையும் பெரிய பதவியிலிருக்கும் அல்லது பெரிய பணக்கார வீட்டு பிள்ளைகளை பார்த்து பலரும் சொல்லும் வசனம் தான் “உனக்கென்னப்பா, நீ ராஜா வீட்டு கன்னுக்குட்டி” இன்றைய சூழலில் அப்படி ஒரு ராஜா வீட்டு கன்னுக்குட்டி தான் நமது மாநிலத்தின் […]