Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

காவல்துறை யார் நண்பன்?

நமக்கு எதுக்குப்பா வம்பு என்று சாமானியர்கள் பலரும், பலவற்றை சகித்துக் கொண்டு தங்களது ஆத்திரத்தையும், கோபத்தையும் அடக்கிக் கொண்டு இருக்குமிடம் தெரியாமல் வாழ்வதற்குக் காரணம், இந்த அமைப்பின் மீதான அதீத பயம் தான். காவல்துறை உங்கள் நண்பன் வாசகம் இங்கே யாருக்குப் பொருத்தம் என்பது தான் முதல் கேள்வி. விடை தெரியாத கேள்வி. காவல்துறை என்றால் ஒட்டுமொத்த காவல்துறையும் தங்களது வேலையைச் செய்யவில்லை அல்லது அனைத்து காவலர்களும் தவறானவர்கள் என்று சித்தரிப்பது நமது நோக்கமல்ல. காவல்துறையில் பணிபுரியும் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

காற்றில் பறந்த ஆணையரின் ஆணை

காவல் துணையர் ஆணையர் சில நாட்களுக்கு முன்பு பொதுவெளியில் கொடுத்த பேட்டி எல்லாம் சும்மா , மக்களிடம் ஒரு நல்ல எண்ணத்தை மேம்போக்காக உருவாக்குவதற்குத் தான் போல. அந்த அறிக்கை என்று பிறப்பிக்கப்பட்டதோ, அப்போதே காற்றிலும் பறந்து விட்டதாகத் தான் தோன்றுகிறது. பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டும் விதமாக இந்தப்பக்கம் நல்ல விதமாக அறிக்கையை விட்டு , அந்தப்பக்கம், போக்குவரத்து காவல் அதிகாரிகளை வசூல் வேட்டைக்குத் துரத்தி விட்டார்கள் போல. இன்று எங்கள் பகுதி சந்திப்பில் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

ஆண்களும் பலனடையும் மகளிர் உரிமைத் தொகை

பொதுவாக நலத்திட்டங்கள் என்பது அடித்தட்டு மக்கள் மேம்படுவதற்காக அரசாங்கத்தால் செய்யப்படும் சமுதாய முன்னெடுப்பு நடவடிக்கைகள். தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, கட்டணச்சலுகை இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் அடிப்படையாகத் துவங்கிய இந்த நலத்திட்ட உதவிகள், பஸ் பாஸ், மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப் என்று பரிணாம வளர்ச்சி அடைந்து , இன்று மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களுக்கு மாதமாதம் பணம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இப்படி மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகையானது அவர்கள் படித்த பள்ளி, அதாவது […]

Categories
தற்கால நிகழ்வுகள்

டீயை விட கப் சுடுதே!

இரு நண்பர்களின் சந்திப்பு. நபர் 1: அடிச்சு துவம்சம் பண்ணிட்டாங்க மாப்ள. காலி .9 இடத்துல டமால் டமால் டமால் னு சும்மா தெறிக்க விட்ருக்காங்க. நபர் 2: ஆமா யா , ஆபரேஷன் சிந்தூர் னு பேர்லாம் வெச்சி, 2 பெண் இராணுவ அதிகாரிகள பத்திரிக்கை சந்திப்பில் பேச வச்சி ,சினிமா வை விட பெரிய அளவுல மக்கள் மனசுல ஒரு உற்சாகத்தை ஏற்படுத்திட்டாங்க.தீவிரவாதிகளுக்கு நல்ல பாடம். நபர் 1: இதோட நிறுத்தக்கூடாது. அவனுங்களுக்குத் தண்ணி […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

மூட்டைப்பூச்சியைக் கொல்ல வீட்டைக் கொளுத்தலாமா?

ஓரிரண்டு நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசை நடத்தும் கட்சிக்காரர்கள், தமிழ்நாட்டில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினார்கள். காஷ்மீரில் நிகழ்ந்த படுகொலையை நிகழ்த்திய தீவிரவாதிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டமாம். அடப்பாவிகளா! அப்ப கொரோனா ல மக்கள் இறந்து போனா கொரோனாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவாங்க போல. இது மாதிரி ஒரு சினிமாவுல, நோய்க்கு எதிரான போராட்டம்னு RJ பாலாஜி நகைச்சுவை செஞ்சிருப்பாரு. அதேமாதிரி தான் இருக்கு இவனுங்க செஞ்சது. உண்மையிலேயே இந்தப்போராட்டம் என்ன கோரிக்கையோட இருந்திருக்கனும்னா, பாதுகாப்பு சரியாகத் தராமல், […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இது விபத்தல்ல, கொலை!

கொலை என்பது திட்டமிட்டு, ஒருவரைத் துப்பாக்கி வைத்து சுடுவதும், அல்லது கத்தி வைத்துக் கிழிப்பதும் மட்டுமல்ல. ஒரு சுமாரான போக்குவரத்து இருக்கும் சாலையில் 20 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி வைத்து விட்டு அதை மறிக்காமல், மாற்று வழிப்பதாகைகள் வைக்காமல் அந்தப்பள்ளத்தில் அந்த வழியாகப் பயணித்த ஒரு குடும்பத்தில் இருவர் விழுந்து இறந்தால், அதுவும் கொலை என்று தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆமாம் இது விபத்து தான்.ஆனால் அந்த விபத்து நிகழக் காரணம் என்ன தெரியுமா? […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

இன்னும் இருக்கிறது ஜாதிய வன்மம்

இன்றைய நவீன காலகட்டத்தில் இதெல்லாம் யார் பாக்குறாங்க என்று நாம் எளிதாகக் கடந்து விடும் ஜாதி ஏற்றத்தாழ்வு கண்ணோட்டம் என்பது இன்னும் மாறவில்லை என்பதை ஆணியில் அடித்தாற் போல நிரூபித்திருக்கிறது இன்றைய நடப்பு. சமீபத்திய நீயா நானா என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கிராமத்தில் பிறந்து நகரத்து மாப்பிள்ளையைத் தேடும் பெண்கள், அவர்களுக்கு எதிராக கிராமத்து மாப்பிள்ளையின் தாயார் என்ற தலைப்பில் வாங்குவாதம் நிகழ்ந்தது. அதில் ஒரு தாயார், எதிரணியில் அமர்ந்திருந்த ஒரு இளைய பெண்ணைக் குறிப்பிட்டு, […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

அப்பாவிகளின் பலிக்கு அப்பாவிகளை தண்டிப்பதா?

பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்த பாவத்திற்காக, அந்த நாட்டைச் சார்ந்த அப்பாவி மக்களைப் பழிவாங்குவதும் ஒரு விதத்தில் பயங்கரவாதம் தான். பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்திருக்கும் நோயாளிகள் உட்பட அனைவரும் இரண்டு நாட்களுக்குள் நாடு திரும்ப வேண்டும் என்ற நடவடிக்கையும், பெரும்பாலான பாகிஸ்தான் விவசாய நிலங்களின் நீர் ஆதாரமும், பல நகரங்களின் குடிநீர் ஆதாரமும் ஆன சிந்து நதியின் நீரைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்ற நடவடிக்கை எல்லாம் மிக முட்டாள்தனமான மனிதநேயமற்ற செயல். 26 இந்தியர்களைக் கொன்ற […]

Categories
தற்கால நிகழ்வுகள்

சபாஷ் சரியான முடிவு! – தெலுங்கானாவின் புதிய இட ஒதுக்கீடு முயற்சி

சமூக நீதியை நிலைநாட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஆமாம். ஒரு குறிப்பிட்ட சாதிய பின்புலத்தில் பிறந்து, அந்த சாதிக்கான ஒதுக்கீடுகளைப் பெற்று பொருளாதார ரீதியாகவும், வாழ்க்கைத் தரத்திலும் ஓரளவுக்கு உயர்ந்து விட்ட பல குடும்பங்களை, குழுக்களை க்ரீமி லேயர், அதாவது பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவென கண்டெடுத்து அவர்கள் மீண்டும் அந்த சலுகைகளை உபயோகிக்க முடியாமல் தடுக்கும் ஒரு திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இருந்தாலும் இந்தத் திட்டம் தாழ்த்தப்பட்ட  சமூகத்தை சார்ந்தவரை […]

Categories
தற்கால நிகழ்வுகள்

அரசுப்பேருந்து ஓட்டுநரின் அகங்காரம்

நமது பக்கத்தில் ஓரிரு நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தோம், அரசு அதிகாரிகளுக்குக் கடிவாளம் அவசியம் என்று. அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, சாதாரணமாக அரசுப் பணி செய்யும் அனைவருக்கும் அந்தக் கடிவாளம் அவசியம். சில வாரங்களுக்கு முன்பு நான் சந்தித்த மோசமான பேருந்து பயணத்தைப் பற்றியும், அது சம்பந்தமாக முதல்வர் பிரிவில் நான் அளித்த புகார் பற்றியும் எழுதியிருந்தேன். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து சரகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. “தெரியாம செஞ்சுட்டாங்க சார், நான் கண்டிச்சிருதேன்” என்று எளிதாக […]