Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

தமிழ் புதல்வன் – கல்வி ஊக்க திட்டம்

“பிச்சை புகினும் கற்கை நன்றே“ ஒருவருக்கு பிச்சை எடுக்கும் நிலை வந்தாலும் கல்வி கற்பதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறிய ஔவையின் வழிவந்த தமிழ் சமூகத்தில், நீ நல்லா படி, நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று அரசாங்கமே பல திட்டங்களை முன் எடுத்து செய்து இந்தியாவிற்கே முன்னுதாரணமாக பல சந்தர்ப்பங்களிலும் இருந்து உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் நல்ல கல்யறிவு மற்றும் அதிகப்படியான பெண்கல்வி விகிதம் இருக்கும் மாநிலம் என்ற ரீதியில் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

தற்கால நிகழ்வுகள் – சென்னையில் தொழில் வரி உயர்வு

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் வரை உயர இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. தொழில் வரி என்பது நாம் அனைவரும் செலுத்தும் மாநில அரசின் வரி. தொழில் வரி என்றால் வியாபாரம் செய்பவர் அல்லது தொழில் செய்பவர் மட்டுமே கட்டும் வரி என்பதல்ல பொருள். ஒவ்வொரு தொழிலாளியும், முதலாளியும் அவரவர் வருமானத்திற்கு ஏற்ப கட்டும் வரி. உதாரணத்துக்கு, நான் ஒரு மிகப்பெரிய உணவகத்தில் சர்வராக வேலை செய்து மாதம் ரூ 20,000 சம்பளம் பெறுகிறேன் எனில் […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

கோடிகளில் புரளும் கோவண ஆண்டி

சினிமா மற்றும் ஆன்மிகம் தான் இன்று கோடிகளில் பணம் கொழிக்கும் தொழில்துறை அல்லாத இரு துறைகள் என்பது மறுக்க முடியாத உண்மை. சினிமா ஆவது பல கோடிகளில் செலவு செய்து பல மனிதர்களின் உழைப்பில் உருவாகி திரையில் ஓடி மக்கள் மனதைக்கவர்ந்தால் தான் வெற்றியும் பணமும். ஆன்மீகம் அப்படி இல்லை. பழனிக்குச் சென்றால் பயனுண்டு, திருப்பதி சென்றால் திருப்பமுண்டு, ஐயப்பனைக்கண்டால் ஆனந்தமுண்டு என்று நம்பி அங்கே சென்று அழுது புரண்டு தங்கள் பிரார்த்தனைகளைக் கொட்டும் எத்தனை பக்தர்களுக்கு […]

Categories
தமிழ் நினைவுகள் வரலாறு

கல்வி தந்தை காமராஜரின் நினைவுகள்

கல்வித்தந்தை காமராஜர், தன்னால் ஏழ்மை காரணமாகப்படிக்க முடியாமல் போனது மாதிரி தம் ஆட்சி காலத்தில் ஏழ்மை காரணமாக படிக்க இயலவில்லை என்று ஒரு குழந்தையும் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்று எண்ணியவர்.

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

கில்லர் சாராயம்

கள்ளச்சாராயம் குடித்து உயிர்பலி. இந்த 2024 ஆம் ஆண்டிலும் கள்ளச்சாராயம் குடிக்க அவசியம் என்ன இருக்கிறது. தமிழ்நாடு என்ன சவுதி அரேபியா போல, குஜராத் போல சரக்கு கிடைக்காத இடமா? அரசாங்கமே ரேஷன் கார்டுக்கு ஒரு நாளைக்கு ஒரு குவார்ட்டர் என்று கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற ரீதியில் இங்கே வியாபாரம் படுஜோராக இருக்கிறது.  மேலும் வட இந்திய மாநிலங்கள் போல இங்கே பணப்புழக்கம் இல்லாமலும் இல்லை. சின்ன சின்ன தொழிலாளியும் கூட சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நல்ல […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

கறை படிந்த நீட் தேர்வு

NEET – National Eligibility Cum Entrance Test தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு. மருத்துவப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வின் வழியே தான் சேர முடியும் என்று அதிரடியாக திட்டம் வகுத்து, பல மாநிலங்களில் மாணவர்கள் தயாராகும் முன்னரே, பல எதிர்ப்புகளை மீறி திணிக்கப்பட்ட இந்தத் தேர்வு, பல மாணவர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்பதெல்லாம் நாம் அறிந்ததே. சில பல தற்கொலைகளும் கூட இதன் காரணமாக அரங்கேறியது மனதில் இன்னும் […]