ஜனவரி 1, 2026 ஆம் தேதி வெளியான ஒரு நாளிதழில் இப்படியான ஒரு செய்தி பார்த்து அதிர்ச்சியும் வியப்பும். எத்தனை நாகரீக வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, மருத்துவ வளர்ச்சி அடைந்து விட்ட சூழலிலும் கூட இப்படியும் ஓர் செய்தியைப் பார்ப்பது மனதிற்குள் நெருடலை ஏற்படுத்தியது. அஸாம் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தம்பதியினரை வீடு புகுந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி, அவர்களை வீட்டில் வைத்து அடைத்து வீட்டோடு எரித்திருக்கின்றனர்.இதில் அந்த தம்பதியினர் […]
Tag: ஆன்மீகம்
கொஞ்சம் கேளு ஐயப்பா!
இன்று சமூக வலைதளத்தில் ஒரு பதிவைக் காண நேர்ந்தது.சபரி மலைக்கு வரும் மிக அதிகப்படியான கூட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்து ஒரு பதிவு. ஒழுக்கமான பக்தியோடு , 48 நாள் ஔ அதாவது ஒரு மண்டலம் நேர்த்தியாக விரதமிருந்து, சபரிமலைக்கு பக்திமார்க்கமாக மட்டுமே பக்தர்கள் சென்ற போது இவ்வளவு கூட்டமோ , ஆர்ப்பாட்டமோ இல்லை. இப்போது சும்மா பத்து நாளைக்கு விரதம், ஒரு வார விரதம், சபரிமலை பார்த்துவிட்டு அப்படியே குற்றாலத்தில் இன்பக் குளியல் என்று சபரிமலை […]
கடவுள் இருக்கான் குமாரு. என்னடா எப்பயுமே கடவுள் இருக்காரா , இல்லையானு பேசுற ஆளு, கடவுள் இருக்கான் குமாருன்னு பதிவு போட்டுருக்கேனு பாக்குறீங்களா? காரணம் இல்லாமல் இல்லை. திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்ட நெரிசல் குறித்தும், வசதிகள் சரிவர செய்யப்படாதது குறித்தும் நாம் சில சமயம் எழுதியிருந்தாலும், அங்கே பௌர்ணமிக்கு பௌர்ணமி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு கடற்கரையில் தங்கிக் கூத்தடித்து, கடலை கலக்கி, மல ஜலம் கழித்து திருச்செந்தூரின் கடற்கரையை நாசமாக்கியதைப் பற்றி மனம் நொந்து போய் […]
சாமி படத்தில் ஒரு நல்ல நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு காட்சி. மறைந்த நடிகர் விவேக், குழந்தைகளை வைத்துக் கொண்டு பாடம் நடத்துவார். ” சாதிகள் இல்லையடி பாப்பா” என்று அவர் சொல்வார். உடனே குழந்தைகள் பக்கத்தில் இருந்து,நாயர் கடையில டீ வாங்கினேன், கோனார் தமிழ் உரையில படிக்கிறேன், செட்டியார் வூட்ல கடன் வாங்கினேன் என்று அந்தக் குழந்தைகள் சொன்ன உடனே, அவர் என்னையே சிந்திக்க வச்சுட்டேளே என்பார். நேற்றைய செய்தித்தாளில் ஒரு செய்தியைக் கண்டதும் எனக்கும் அப்படி […]
அப்புறம் என்னங்க வண்டியெல்லாம் கழுவி மாலை போட்டு பொட்டு வெச்சு பூஜைக்குத் தாயாரா? ஆமாங்க இன்னைக்கு சரஸ்வதி பூஜை/ ஆயுத பூஜை ஆச்சே? படிக்கிற பிள்ளைங்க புத்தகங்களையும், தொழிலாளிகள் தங்கள் ஆயுதங்களையும், அனைத்து தரப்பு மக்களும் தங்கள் சைக்கிள் உட்பட்ட அனைத்து வாகனங்களையும் தெய்வமாக பாவித்து அலங்கரித்து பூஜை செய்வது வழக்கம் தானே? ஆனால் ஒரு விஷயம் இங்கு உணரப்பட வேண்டும்.ஒரு குழந்தை சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்களை பூஜை செய்தால் மட்டும் தேர்வில் தேர்ச்சி பெற […]
ஒவ்வொரு அமாவாசையும் நமக்கு ஏதாவது ஒரு புது சங்கதியைத் தந்து கொண்டே இருக்கிறது. சென்ற தை அமாவாசை அன்று தர்ப்பணம் வாளியில் கொடுக்கப்படுவதைப் பற்றி எழுதியிருந்தோம்.அதாவது தர்ப்பணம் என்பது மனநிறைவுடன் , மரியாதைக்காக பெரியவர்களை நினைத்துக் கொடுக்கப்படாமல், ஒரு பெயரளவிற்கு, நானும் கொடுக்கவில்லையே என்று பிறரைப் பார்த்து குற்ற உணர்ச்சியுடன், பத்தோடு பதினொன்றாக கொடுக்கப்படுவதை உணர்த்தியிருந்தோம். கிட்டத்தட்ட எனது நிலையும் அதுதான்.இந்த தர்ப்பண சமாச்சாரம் எல்லாம் சும்மா , நான் அதை செய்ய முடியாது என்று சொன்னால் […]
கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பிஎல்லா உயிருந் தொழும். திருக்குறளில் அறத்துப்பாலில், துறவறவியலில் 26 ஆவது அதிகாரமாக வரும் புலால் மறுத்தலில் உள்ள திருக்குறள்.இது.இதன் பொருள் என்னவென்றால், பிற உயிர்களைக் கொல்லாதவனை புலால் உணவை அதாவது அசைவ உணவை மறுத்தவனை உலகின் உயிர்கள் கைகூப்பி வணங்கும். லாஜிக் படி பார்த்தால் நாம் உண்ணும் கோழி ,ஆடு, மாடு, மீன் இவற்றுக்கெல்லாம் கையே இல்லையே? ஆக மனிதனாகப்பட்டவன் திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளையும் பின்பற்றி வாழ முடியாது என்பதற்காகத்தான் […]
விநாயகர் சதுர்த்தி ஆனது நேற்றைய தினம் கோலாகலமாக ஊரெங்கிலும் கொண்டாடப்பட்டது. மக்களிடம் பக்தி நன்றாகப் பரவுகிறதே ஒழிய ஒழுக்கம் வளர்கிறதா என்றால் இல்லை. எதிர் விளைவாகத் தான் இருக்கின்றது.மனிதனிடம் கடவுள் பக்தி என்பது எதற்காக வளர்க்கப்பட வேண்டும் என்றால், ஒழுக்கம் வளர்வதற்காகவும், சக ஜீவன்களிடம் அன்பு காட்டுவதற்காகவும் தான். ஆனால் பக்தி வளர்கிறதே ஒழிய ஒழுக்கம் தேய்ந்து கொண்டே தான் போகிறது. பக்தி என்பது போட்டி மனப்பான்மையில் தான் வளர்கிறது. ஒழுக்கம் குறைவது வருத்தம் தான் என்றாலும், […]
ஒழுக்கமில்லாத பக்தி?
முருகனுக்கு அரோகரா! அதிலும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா! அரோகரா என்று மிகப்பெரிய கும்பல் கிளம்பியுள்ளது.திடீர் முருக பக்தர்களா?அல்லது உண்மையிலேயே நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பக்தி வேரூன்றிவிட்டதா என்பதை யூகிக்க முடியவில்லை. திருச்செந்தூரிலும், திருப்பரங்குன்றத்திலும் சமீபத்தில் தடபுடலாக கும்பாபிஷேகம் நிகழ்ந்திருக்கிறது. கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களுக்குள் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் திருச்செந்தூர் சென்றிருந்தோம். திருப்பதி போலவே வடிவமைத்து உருவாக்க வேண்டும் என்ற முயற்சி ஒரு புறம் தெரிந்தாலும், இது தமிழ்நாடு டா என்பது இன்னொரு புறம் […]
சாஞ்ஞியமா ? வியாபாரமா?
ஆடி அமாவாசை தர்ப்பணம் இன்று. முன்னோர்கள் பசியோடு நம்மை அனுகுவார்கள்.அவர்களை நினைத்து வணங்கி விட்டு, அவர்களுக்காக படையல் செய்து பூஜை செய்து விட்டு அதை நாம் சாப்பிடுவது என்பது ஒரு நல்ல நடைமுறை. நமது முன்னோர்களை, நம் வாழ்வின் முன்னோடிகளை நினைத்து வணங்க வேண்டும் என்ற ஒரு நற்காரியம் நிறைவேற்றப்படுகிறது. அவர்களின் பெயரைச் சொல்லி காகங்களுக்கு உணவு செலுத்துவது, அதுவும் ஒரு வகையில் நற்காரியம் தான். நாம் ஏற்கனவே, பறவைகளுக்கு உணவு அல்லது நீர் தினசரி வைத்தால் […]