Categories
கருத்து குட்டி கதை தற்கால நிகழ்வுகள்

இவர்கள் மட்டுமென்ன கிள்ளுக்கீரையா?

இன்று நான் கண்டு ஜீரணித்துக் கொள்ள இயலாத ஒரு சம்பவம். ஒரு உணவகத்திற்கு சென்று உணவுப் பொட்டலம் வாங்குவதற்காக பட்டியலை விசாரித்த்போது, அங்கே கல்லாவில் நின்றவர் , என்னிடம் சார் சார் என்று பதிலளித்து பணமும் பெற்றுக் கொண்டார். உணவுப் பொட்டலம் தயாராகும் முன்பு,ஒரு தேநீரோ காபியோ பருகலாம் என்று அதற்கும் ரசீதைக் கேட்டேன். காபிக்கு தனியாக ரசீதைத் தராதவர், வெளியே இருந்த அந்த காபி போடும் அம்மாவிடம், அலமேலு சாருக்கு ஒரு காபி போடு என்றார். […]

Categories
கருத்து சிறுதுணுக்கு

குழப்பங்களைத் தள்ளிவிடுவோம்.

சிறிது காலத்திற்கு முன்பு வரை வழக்கத்திலிருந்த, குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்தவர்களுக்குத் தெரியும். நம் மக்கள் குடத்தின் வாய் வரை தண்ணீர் பிடித்து விட்டு , அதில் சிறிது தண்ணீரை மொண்டு கீழே சிதறிவிட்டு அதன்பிறகு தூக்கிச் சும்ப்பது.. குடம் நிறையும் முன்பே குழாயை நிறுத்தும் பழக்கம் பெரும்பாலானோர்க்கு இல்லை. குடத்தில் அதிகபட்சமூக நிரப்பப்பட்ட அந்தத் தண்ணீர் போலத்தான் நமக்கு அன்றாடம் ஏற்படும் குழப்பங்களும்.. தேவையே இல்லாதது. சிந்திக்கும் போதெல்லாம், நல்ல யோசனையும் வரும், குழப்பமும் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

அப்பாவிகளின் பலிக்கு அப்பாவிகளை தண்டிப்பதா?

பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்த பாவத்திற்காக, அந்த நாட்டைச் சார்ந்த அப்பாவி மக்களைப் பழிவாங்குவதும் ஒரு விதத்தில் பயங்கரவாதம் தான். பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்திருக்கும் நோயாளிகள் உட்பட அனைவரும் இரண்டு நாட்களுக்குள் நாடு திரும்ப வேண்டும் என்ற நடவடிக்கையும், பெரும்பாலான பாகிஸ்தான் விவசாய நிலங்களின் நீர் ஆதாரமும், பல நகரங்களின் குடிநீர் ஆதாரமும் ஆன சிந்து நதியின் நீரைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்ற நடவடிக்கை எல்லாம் மிக முட்டாள்தனமான மனிதநேயமற்ற செயல். 26 இந்தியர்களைக் கொன்ற […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

மதங்களைக் கடந்து அன்பு பரவட்டும்.

இன்று நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு சம்பவம், காஷ்மீரில் நடந்த படுகொலைகள் தான்.சுற்றுலா சென்ற பயணிகளை, லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான தி ரெஸிடன்ட் ப்ரெண்ட்ஸ் அமைப்பைச் சார்ந்த தீவிரவாதிகள் எந்த மதம் என்று கேட்டுக் கேட்டு சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். இது இஸ்லாமிய தீவிரவாதிகளால் இந்து மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட அநியாய தாக்குதல் என்று பேசி, ஒரு மதத்திற்கு எதிராக இந்த பயங்கரவாத சம்பவத்தை அடிக்கோளிடுவது முறையல்ல. இஸ்லாமிய […]

Categories
சிறுதுணுக்கு

அப்பா- அன்பின் வெளிப்பாடு.

சொல்லித் தீர்க்க இயலுமோ?எழுதி தான் விளக்க இயலுமோ? அன்பை வெளிப்படுத்த ஆயிரமாயிரம் வழிமுறைகள் உண்டு. பசியிலிருப்பவனுக்கு உணவால் அன்பைப் பரிமாறலாம். சோகத்தில் இருப்பவனுக்கு ஆறுதலால் அன்பைப் பரிமாறலாம். கடனில் இருப்பவனுக்கு பண உதவியினால் அன்பைப் பரிமாறலாம். நோயிலிருப்பவனுக்கு மருத்துவத்தால் அன்பைப் பரிமாறலாம். கோபத்தினால் யாருக்கேனும் அன்பைப் பரிமாற இயலுமோ? சற்று வியப்பாகத்தானே இருக்கிறது? ஆனால் ஒவ்வொருவருடைய வாழ்விலும் தன் அன்பை கோபத்தால் பரிமாற ஒரு ஆள் இருக்கிறார்.“அப்பா” தியாகம் என்ற சொல்லை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வழிமுறை […]

Categories
கருத்து குட்டி கதை தற்கால நிகழ்வுகள்

தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்.

நண்பர்கள் இருவர் சித்திரை மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில். தான் தங்கியிருக்கும் அறையை சுத்தம் செய்து விட்டு, குளித்து விட்டு நல்ல பசியுடன் கடைக்குச் சென்று பார்த்தால் கூட்டம். அமர்ந்து சாப்பிட இடம் கிடைக்காது என்று தெரிந்து உணவுப் பொட்டலம் வாங்கிக்கொண்டு அறைக்குச் செல்கிறார்கள். நல்ல பசி என்பதால், பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் 65 என வகை வகையாக வாங்கிச் சென்றார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பாசத்துடன் பகிர்ந்து சாப்பிடுவதைப்பார்த்தால்… அடேயப்பா, இதுவல்லவா நட்பு? சாப்பிட்டு முடியும் […]

Categories
கருத்து

நட்பும், உறவும், சுற்றமும்.

நண்பர்கள். ஒரு வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்கள். அர்த்தங்கள் மட்டுமல்ல. அன்பும் அளவளாவியது. தாய் தகப்பனின் அன்புக்கும் ஆதரவுக்கும் ஈடாக, சகோதர, சகோதரிகளின் அக்கறைக்கு ஈடாக அன்பு காட்டி ஆதரவு செலுத்தும் நல் உள்ளங்கள். ஆயிரம் சொந்தங்களுக்கு ஈடானவர்கள்.சில நேரங்களில் அப்பா செய்ய வேண்டிய கடமைகளை செய்பவர்கள். சில நேரங்களில் அம்மா காட்ட வேண்டிய பாசத்தை காட்டுபவர்கள்.சில நேரங்களில் ஆசான் கொடுக்க வேண்டிய அறிவுரைகளைக் கொடுப்பவர்கள். ஆபத்தில் நம்மைக் காக்க முதல் ஆளாக நிற்பவர்கள். நம் பிரச்சினைய அவர் […]

Categories
கருத்து

ஆண்- பெண் நட்பு

ஆண் – பெண் நட்பு. ஆரோக்கியமான விஷயம். உரிமை காட்டும், உயிரைக் கொடுக்கும் ஆண் நண்பர்கள் உயிர் நட்புதான் என்றாலும்,பெண் தோழி என்பது ஆண்களுக்கு ஒலி கிரீடம் தான். டேய் என்னடா பண்ற சாப்டியா? வீட்ல அம்மா எப்படி இருக்காங்க? என்ன செய்றாங்க? அவங்களுக்கு உதவி பண்ணு ஒழுங்கா சாப்புடு என்று அக்கறையாகப் பேசும் பெண் தோழிகள் மனதிற்கு சுகம் தான்..என்றுமே இனிமை தான். ஆயிரம் ஆண் நண்பர்கள் இருந்தாலும் ஒரு ஆணுக்கோ, ஆயிரம் பெண் தோழிகள் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

முன்னாள் உயர் கல்வித்துறையா? கலவித்துறையா?

இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. என்ற திருக்குறளை அன்றாடம் சாமானியனும் மனதில் வைத்துக்கொண்டால் சொல்லாடல் எப்போதுமே சுகம் தான். சாமானியனுக்கே சொல்லாடல் அதாவது பேசும் மொழி என்பது முக்கியமானதாகி விட்டது.நாம் பேசும் வார்த்தைகளின் இனிமை தான் நம் எதிரில் இருப்பவரிடம் நமக்கான அடையாளத்தைக் காண்பிக்கும் ஒளித்திரை. அப்படி இருக்கும் போது ஒரு மாநிலத்தின் முக்கிய பிரிவில் மந்திரி பதவி வகிக்கும் அல்லது அந்தப் பதவிக்கான தகுதியுடைய ஒரு மூத்த கட்சி உறுப்பினர் எப்படிப் பேச […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

ஐயையோ அல்ல- ஹய்யா கோடை விடுமுறை

கோடை விடுமுறை. வரப்போகுது கோடை விடுமுறை.துவங்கிவிட்டது பெற்றோர்களுக்குத் தலைவலி. காலையில் எழுப்பி, குளிப்பாட்டி, சோறு ஊட்டி, பள்ளிக்கூடம் அனுப்புவதைக் காட்டிலும் கடினமான காரியம் கோடை விடுமுறையில் இதுகளைச் சமாளிப்பது. என்ன செய்யலாம்?பேசாம 2 மாசம் தாத்தா, பாட்டிக்கிட்ட அனுப்பிவிடலாமா? நோ நோ மம்மி பாவம். இல்ல இவனுங்கள அவங்க அத்தை வீட்டுக்கு அனுப்பிரலாமா?அவ கெடந்து அனுபவிக்கட்டும். இல்ல இல்ல, நம்ம இதுகள பத்து நாளைக்கு அனுப்பினா, அவ அந்த ரெண்டு பிசாசுகளையும் 20 நாளைக்கு இங்க அனுப்பிருவா. […]