Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

வகுப்பறையும், ஆசிரியர்களும்

மாதா, பிதா, குரு, தெய்வம். ஒரு மனிதனுக்கு மாதா, பிதாவை அடுத்து முக்கியமானவர் அவரது குரு. ஒரு குழந்தை வளர்ந்து சமுதாயத்தில் எப்படியான ஆளாக உருவாகிறது என்பது அந்த குழந்தையின் அப்பா, அம்மாவைத் தாண்டி அதன் ஆசிரியர்களின் கைகளிலும் உள்ளது. ஆசிரியர்களால் கண்டிக்கப்படாத மாணவன் பிற்காலத்தில் காவலர்களால் கண்டிக்கப்படுவான் என்ற சொல்லாடல் உண்டு. ஒரு ஆசிரியர் என்பவர் ஒரு குழந்தையின் ஒழுக்கமான வளர்ச்சிக்கு மிக முக்கிய அடித்தளமானவர். குழந்தைகள் தனது மொத்த உழைக்கும் தருணத்தையும், அதாவது பகல் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்

நமது ஊர்களில் ஒரு பிரபலமான சொல்லாடல் உண்டு.வெல்லம் சூப்புரது ஒருத்தன், வெரல சப்புறது ஒருத்தன் னு. இந்த கட்டுரையில் பேசப்போகும் விஷயத்திற்கு இந்த சொல்லாடல் சொல்லித் துவங்குவது என்பது தவறு தான். ஆனால் சமுதாயம் போகும் போக்கில் இப்படி சில விஷயங்களைத் தாறுமாறாக சாடை பேசாமல், சாடாமல் இருக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு செய்தி. ராசிபுரத்தில் ஒரு 9 ஆம் வகுப்பு மாணவன், சக மாணவனால் தாக்கப்பட்டு இறந்து விட்டான். இது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய செய்தி […]

Categories
சினிமா

D Ragavan -> Dragon  – திரை விமர்சனம்.

இந்த வாரம் வெளியான படங்கள் எல்லாமே பெரிய நடிகர்களோ, எதிர்பார்ப்போ, விளம்பரங்களோ இல்லாமல், தன்னை நம்பி வெளியானவை.அதாவது நல்ல கதைக்களம், திரைக்கதை அமைப்பு உடையவை போல. மிகப்பெரிய செலவு, விளம்பரம் இல்லாமல் இது அது மாதிரி தான் இருக்கும் போல என்று எதிர்பார்ப்புக் குறைவாக வந்து இன்று பல ரசிகர்களாலும் பத்துக்கு பத்து மதிப்பெண் வழங்கப்படும் படம் டிராகன். இந்தப்படத்தின் இயக்குனர் மாரிமுத்து அவர்கள், கதைக்கு மெனக்கெடவில்லை. தனது முந்தைய படமான ஓ மை கடவுளே படத்தின் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

சமுதாயம் செய்த கூட்டு பாலியல் வன்முறை

கோவையில் ஒரு 17 வயது பெண் கூட்டு பாலியல் வன்முறை. சமீபத்தில் கூட நம் பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்னு பாலியல் குற்றங்களுக்கு தண்டனை விதத்தில் இது குறையுமா என்று! அது ஒரு பார்வை.குற்றம் நடந்த பிறகான பார்வை. ஆனால்“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்” என்ற வள்ளுவனின் வாக்கை நாம் நினைக்காமல் விட்டது ஏனோ? ஆம், இந்தக்கூட்டுப் பாலியல் வன்முறை ஆள் அரவரமற்ற இரவிலோ, காட்டினுள்ளோ நடைபெறவில்லை. […]

Categories
தற்கால நிகழ்வுகள்

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் – நிறைவேறுமா?

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு அளித்தது இல்லாமல், அவரைக் கீழே தள்ளி விடப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. அந்தப்பெண்ணுக்கு மருத்துவ உதவியும், நஷ்ட ஈடும் அரசாங்கம் தர முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரிய விஷயம் தான். ஆனால் அந்த தண்டனையைச் செய்த நபருக்கு அளிக்கப்படும் தண்டனை என்பது இனி இதுபோன்ற செயல்களைச் செய்ய யாரும் துணிந்திரா வண்ணம் இருக்க வேண்டும். அதை பொதுவெளியில் யாரும் மறக்காதபடி செய்ய வேண்டும்! ஒரு பெண்ணை அவளது விருப்பமின்றி பாலியல் சீண்டல் செய்வதற்கே […]

Categories
அறிவியல் தற்கால நிகழ்வுகள்

உலகம் நம் கையில், நம் மூளை எதன் கையில் ?

உலகமே உன் கையில் என்று நம் கையிலிருக்கும் தொலைநுட்பக் கருவிகள் நமது கையில் உலகத்தைத் திணித்து விட்டு மூளையை அது எடுத்துக் கொள்கிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. சமீபத்திய ஒரு பயணத்தின் போது, எனது நண்பர் ஒருவர், தனது அலைபேசியின் மின்னூக்கியை மறந்து விட்டு வந்துவிட்டார். என்னுடையதும் அவருக்கு ஒப்பவில்லை. ஆகையால் அவரது அலைபேசி மறுநாள் காலை எழும்போது அணைந்து விட்டது. அவருக்கு ஏதோ ஒரு சின்ன ஆத்திரம், தனது வீட்டிற்கு அழைத்துப்பேச வேண்டும் என்று. நான் […]

Categories
கருத்து

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை – சோதனைகள்

டிஜிட்டல் பண பரிவர்த்தனை உபயோகத்தினால் நமக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக பாதிப்புகள் உள்ளன என்று ஆங்காங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது பணத்தை நாம் கையில் எடுத்து அதை உறவாடி செலவு செய்யும் போது இருக்கும் கவனமும், திருப்தியும், டிஜிட்டல் வழியில் செலவு செய்தால் கிடைப்பதில்லை. மேலும் பணம் நம்மிடம் இருந்து வெளியே போவதை உணராமல் செலவு செய்யும் காரணத்தால், பணத்தை சேமிக்கும் எண்ணமும் குறைந்து வருவதாகவும் பேச்சு உள்ளது. இதில் சேமிப்பு குணம் என்பது வங்கியில் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இதற்குத்தானா இந்தப்பாடு?- கிளாம்பாக்கம்   பேருந்து முனையப் பிரச்சினைகள்

எந்தவொரு விஷயத்தையும் உருவாக்குவதைக் காட்டிலும் அதன் பராமரிப்பில் தான் அதனுடைய முழுப்பலனும் கிடைக்கும். சரியாக கவனிக்கப்படாமல், பராமரிக்கப்படாமல் விடப்பட்ட எதுவுமே அதன் பலனைத்தராது. மேலும் அவப்பெயரையும், மனவருத்தத்தையும் உண்டாக்கி விடும். அதை உருவாக்குவதற்கான உழைப்பு விரயமாகிப்போகும். அப்படிப் பல எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் தாண்டி உருவானது தான் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம். ஆனால் அதன் பராமரிப்பு குறைபாடுகள் காரணமாகவும், நகரத்திலிருந்து அது அமைந்திருக்கும் தொலைவு காரணமாகவும் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உள்ளானது மறுக்க முடியாத ஒன்று. ஆரம்ப […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

காணாமல் போன உணவுவிலைப் பட்டியல்- சூட்சமம் என்ன?

உணவகங்களில் சென்று மனதிற்குப் பிடித்த மாதிரி நாவில் இனிக்கும் ருசியோடு உணவருந்தும் ஆசை அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. முன்பெல்லாம் அது பௌர்ணமி, அமாவாசை போன்ற நிகழ்வாக, அவ்வப்போது என்ற ரீதியில் இருந்தது.ஆனால் இப்போதோ வரிசையாக திறக்கப்படும் உணவகங்களையும், அதில் இருக்கும் கூட்டத்தையும் பார்க்கும் போது வீட்டில் யாரும் சமைப்பதே இல்லையோ என்ற கேள்வி தான் எழுகிறது.சரி இந்தக்கேள்வியை நாம் அழுத்தம் திருத்தமாகக் கேட்டால் அது ஆணாதிக்கக் கேள்வி ஆகி விடும். ஆனால் வேறொரு கேள்வி என் மூளையில் […]

Categories
கருத்து தகவல்

குஜராத் மாடல் எப்படியானது? – பயண அனுபவம்

குஜராத் மாடல். இந்த வார்த்தை ஒரு மிகப்பெரிய அரசியல் சர்ச்சை.அதாவது குஜராத் மாநிலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகப் பல துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பதாகத் தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து 4 முறை இருந்தபோது கூறப்பட்டது. அதாவது அந்த மாநிலம் மின்மிகை மாநிலமாகவும், சூரிய ஒளியில் மின்சாரம் அபிரிமிதமாகத் தயாரிக்கும் மாநிலமாகவும், தொழிற்சாலைகளுக்கும் சூரிய ஒளி மின்சாரம் தரப்பட்டு தொழில் முன்னேற்றமடைந்த மாநிலமாகவும் பேசப்பட்டது. அப்போதைய காலகட்டத்திலேயே விகடனில் […]