Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

கிட்னி விற்பனைக்கு!

இங்கு குறைந்த விலையில் கிட்னி விற்பனைக்கு உள்ளது. தேவைக்கு அனுகலாம். இவ்வாறான ஒரு அதிர்ச்சி நிலை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம், மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் நிலவுவதாகத் தகவல். காரணம் வறுமை, தொழில் ரீதியான தாக்கம். பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு அரசு மருத்துவர் இதனைக் கண்டறிந்து புகார் அளித்துள்ளார். அங்கு விசைத்தறி தொழிலாளர்கள், நெசவாளர்கள் பலரின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி இந்த தாங்கவியலா அநியாயம் நிகழ்ந்து வருகிறது. ஒரு கிட்னிக்கு 3 லட்சம் வரை […]

Categories
கருத்து சிறுகதை தற்கால நிகழ்வுகள்

எது உண்மையான திறமை?

ஒரு சிறுகதை. ஒரு கானசபாவில் ஒரு வித்துவான் கச்சேரி செய்வதற்காக அனுமதி கேட்கிறார்.அவர் முன் பின் தெரியாத நபர் என்பதால் கானசபா மேலாளர் சிறிது யோசிக்கிறார்.ஆனால் அவரோ ஆள் பளபளவென, சிஷய்ர்கள் புடைசூழ வந்திருப்பதால் ஒரு சின்ன நம்பிக்கையும் அந்த மேலாளருக்கு இருந்தது. அவரது சிஷ்யர்களும் அவரைப்பற்றி ஆஹா, ஓஹோ என்று பெருமை பேச சரி, என்று கச்சேரிக்கு வாய்ப்பளித்து விட்டார். கச்சேரி அன்று அந்த வித்துவான் கச்சேரியை ஆரம்பம் செய்தார். நேரம் ஆக, ஆக கச்சேரிக்கு […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் வணிகம்

மக்கள் மட்டும் இளிச்சவாயர்களா?

சமீத்தில் நடிகர் ஒருவரின் பேட்டி ஒன்றைக் கண்டேன். அவரது அன்றாட உணவுப் பழக்கம் பற்றி அதில் பேசியிருந்தார். மிக ஆரோக்கியமான உணவுப் பழக்கம். காலை எழுந்தவுடன் ஒரு கப் ப்ளாக் காபியில் (கடுங்காபி) ஒரு கரண்டி நெய் விட்டுக் கலக்கிக் குடிப்பாராம். பிறகு இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி. காலை உணவாக 4 முட்டை வெள்ளைக்கரு மட்டும்.11 மணிக்கு ஆப்பிள், பீட்ரூட், கேரட் கலந்து ஒரு ஜூஸ். மதியம் ஓரளவு பெரிய இரண்டு சிக்கன் துண்டுகள் (மசாலா, […]

Categories
கருத்து சிறுகதை நினைவுகள்

மனிதாபிமானம்- சிறுகதை

மனிதாபிமானம் பற்றிய ஒரு சிறு கதை. டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது.நமக்குத் தெரியும், கப்பலின் அழகு குறைந்து விடக்கூடாடது என்பதற்காக அதில் உயிர்காக்கும் படகுகள் குறைந்த அளவிலேயே இருந்தன என்று.அதனால் முதலில் வயதானவர்களையும், பெண்களையும் , குழந்தைகளையும் அந்தப் படகுகளில் ஏற்றி அனுப்பி விட முடிவாகிறது. அந்தக் கப்பலில் பயணித்த ஒரு ஜப்பானிய இளைஞனுக்கு இந்தச் சூழலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்படி நடுக்கடலில் இறந்து போவதில் அவனுக்கு விருப்பமில்லை. தன் தாய், தந்தை ,சகோதரர்களைக் காண […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் வணிகம்

ஏமாந்து கொண்டே இருக்கிறோமே?

அறிமுகமாகிறது, மீரா அரிசி கஞ்சி ஷாம்பூ. அரிசி கஞ்சியின் இயற்கையான நற்குணத்தால் இதை உபயோகிக்கத் துவங்கிய ஓரிரு முறையிலேயே நல்ல மாற்றம் தெரியும். சிகை மினுமினுக்கும், உறுதி பெறும் என்று இதன் அறிமுக விழாவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு லிட்டர் ரூ.215 மட்டுமே. இதைத் தான் என் பாட்டியும் சொன்னார்கள். குளிக்கும் போது லேசாக அரசிக் கஞ்சியை தலையில் தேய்த்துக்குளி, முடி நல்லா இருக்கும் என்று. ஆனால் வானொலியிலும், தொலைக்காட்சிப் பெட்டியிலும் இதே மீரா சிகைக்காய் […]

Categories
கருத்து சிறுகதை

புத்தகத்தில் இல்லா பாடம்!

அது ஒரு காற்றோட்டமான வகுப்பறை. பலதரப்பட்ட மாணவர்களையும் பார்த்த இருக்கைகள். சில இருக்கைகள் மட்டுமே கட்டமைப்பு சீர்குழையாமல் இருந்தன. மற்றவை எல்லாம் சின்ன சின்ன குறைகளோடு தான் இருக்கின்றன. அன்று முதல் நாள் வகுப்பு. பல்வேறு ஊர்களிலும் இருந்து தரவரிசைப் பிரகாரம் தேர்வான மாணவர்கள் கனவுகளோடு வந்தமர்ந்தனர். தனக்கென ஒரு நண்பனை, தோழியை அடையாளம் காண வேண்டும் என்ற தேடலோடு, புது இடம் என்ற பயமும் ஒவ்வொருவரின் மனதிலும் இருந்தது. தான் ஒரு சிறந்த வழக்கறிஞராக வேண்டும் […]

Categories
அரசியல் கருத்து சினிமா தற்கால நிகழ்வுகள்

மௌனம் பேசுமா?

சமுதாய அக்கறையும் பொறுப்பும் உள்ள ஆட்கள், எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மிகப் பிரபலமான ஆட்கள், நேரத்திற்கு ஏற்றாற் போல, வேடமிட்டால் அது அவர்ளின் மீதான மரியாதையை காலி செய்து விடும். கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவல்துறையினரால், விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பல நடிகர்களும் எந்த விதக் கருத்தும் தெரிவிக்காதது சமூக வலைதளங்களில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் சாத்தான்குளத்தில் தந்தையும் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

என்னா குமாரு இதெல்லாம்?

ஓவ்வொரு முறையும் அரசுத் தேர்வுகள் நிகழும் போது, அதுவும் குறிப்பாக Group 4 தேர்வு நிகழும் போது பல சுவாரஸ்யங்கள் நிகழ்வது வழக்கமாகிப் போனது. மணமேடையிலருந்தவாறே, மாலையும் கழுத்துமாக வந்து தேர்வு எழுதுவது, பாட்டிக்கு காரியம் செய்து விட்டு அஸ்தியோடு வந்து தேர்வு எழுதுவது என்று பல வத்தியாசமான வேடிக்கைகளைப் பார்க்க இயலும். 3000 பதவிக்கு, 18 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள். குறிப்பாக இந்த கழுத்தில் மாலையோடு தேர்வு எழுதியவர்கள், அஸ்தியோடு தேர்வு எழுதியவர்கள் எல்லாம் […]

Categories
கருத்து குட்டி கதை

புத்திசாலி நீதிபதி

படித்ததில் பிடித்தது. கொஞ்சம் காமடி.. கொஞ்சம் கருத்து. ”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ். “எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி. ஜட்ஜூக்கு சுருக்கென்றது. பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ். ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை

சமீப காலங்களில் மிகப்பெரிய கொள்ளை, பகல் கொள்ளை எது என்றால், அது தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் தான். 3-3.5 வயது நிரம்பிய பிள்ளைகள் LKG படிப்பதற்கு சில ஆயிரங்கள் முதல் சில லட்சங்கள் வரை கட்டணமாகப் பெறுவதும், அதை மறுப்புத் தெரிவிக்க முடியாமல் பெற்றோர்கள் கட்டுவதும் வழக்கமாகிப் போனது. சமீபத்தில் இணையத்தில் கிடைத்த ஒரு பள்ளியின் LKG வகுப்பிற்கான கட்டண ரசீதைக் கண்டு மிரண்டு போனேன். அதைப்பற்றி சிறிது விளக்கமாக எழுதி எனது ஆதங்கத்தைத் தீர்த்துக் […]