Categories
இலக்கியம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மதுரை குஞ்சரத்தம்மாள்

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா? தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் –1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது – கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது – பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது – அதில் நாம் அவசியம் […]

Categories
கருத்து குட்டி கதை சிறுகதை

ஒவ்வொருவருக்கு ஒரு திறமை

ஒரு கதை ஒன்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு படகில், ஆற்றைக் கடக்க மூன்று மனிதர்கள் படகில் அமர்ந்தனர். மூவரும் நன்கு படித்த அளிவாளிகள்.ஒருவர் பேராசிரியர், ஒருவர் எழுத்தாளர், ஒருவர் விஞ்ஞானி. படகோட்டி துடுப்புப் போட்டு படகை ஓட்ட, மூவரும் அமைதியாய் ஏன் வருவானென்று உரையாடத் துவங்கினார்கள். உலகின் மிக முக்கியமான, சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி எல்லாம் பேசினார்கள். அவர்கள் மூவரும் பேசிக் கொண்டதை வேடிக்கை பார்த்தவனாகப் படகோட்டி துடுப்பைப் போட அவர்கள் இவனிடம் மெல்லப்பேச்சுக் கொடுக்கிறரார்கள். “ஏம்ப்பா […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

வறுமை தந்த அனுபவம்.

இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலான குழந்தைகள் வறுமை என்பதை உணரும் விதமாக வளர்வதில்லை. இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது பெரும்பான்மை மட்டுமே. 100 சதவீதம் அல்ல. இன்றைய நாளில் பொதுவாகவே ஒரு 3-4 வயது குழந்தை செல்போனை முழுமையாக இயக்கும் அளவிற்கு திறன் பெற்ற குழந்தைகளாகவும், பெரும்பாலான வீடுகளில் செல்லும் என்பது அத்தியாவசியம் போலவும் ஆகிப் போனது. எங்களது, அதாவது 90 களில், வீடுகளில் தொலைக்காட்சி என்பதே அரிது. தொலைக்காட்சியைக் கூடப்பக்கத்து வீடுகளில் சென்று தான் பார்க்க வேண்டிய கட்டாயம். ஆனால் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

சட்டமும் சட்டென்று செயல்படுவதில்லை.

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது தான். ஆனால் அதன் பாய்ச்சல் என்பதோ, ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. சாமானியன் என்றால் உடனடியாகப் பாய்ந்து விடுவதும், பணம் பதவியில் இருந்தால் கொஞ்சம் பக்குவமாகப் பாய்வதும் என்பது பழகி விட்டது. இன்று ஒரு தினசரியில் ,ஒரே பெட்டிக்குள் அடுத்தடுத்து இரண்டு குட்டிச் செய்திகள். இரண்டும் பெண்னை பலவந்தப்படுத்தியதும், பாலியல் சீண்டல் செய்த சம்பவம் பற்றிய செய்திகள் தான். இரண்டுமே சென்னையில் நிகழ்ந்த சம்பவம் தான். முதலாவது வடசென்னையிலும், இரண்டாவது துரைப்பாக்கம் பகுதியிலும் […]

Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

சினிமாவை மிஞ்சிய நிஜம்.

படங்கள் சில நேரங்களில் நடப்பு சம்பவங்களை மையப்படுத்தியும் எடுக்கப்படுகின்றன. அவ்வாறான ஒரு படம் மற்றும் சம்பவம் பற்றிய ஒரு பதிவு தான் இது. தற்போது பரபரப்பாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள பொள்ளாச்சி சம்பவம் குறித்து இங்கு அறியாதோர் இல்லை. 6 வருடங்கள் கடந்துவிட்டாலும் அந்த பாலியல் குற்றவாளிகளுக்கு சரியான முறையில் தண்டனை கிடைத்திருப்பது குறித்து அனைவருக்கும் மகிழ்ச்சி தான். இந்தக் குற்றங்கள் சம்பந்தமாக அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களும் முன்வந்து புகார் அளிக்கவில்லை.. ஆனால் குற்றவாளிகளே தாம் செய்த தவறுகளுக்கு […]

Categories
கருத்து

நானும், கருப்பு நாயும்.

தேவைகள் என்பது ஒவ்வொரு மனிதனிக்கும், மிருகத்திற்கும் , ஏன் உயிரற்ற பொருட்களுக்கும் கூட உண்டு. ஆம். சில பொருட்களை சூரிய ஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும் என்ற தேவை, சில பொருட்களை காற்றோட்டமாக வைக்க வேண்டும் என்ற தேவை. அதுபோல மனிதனுக்கும் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு தேவை உண்டு. பலருக்கும் பல தேவை. என்ன தேவை ? என்பதை அறிந்து அதை நிறைவேற்றுவது சேவை. அப்படி என்ன தேவை என்பதை அறியாமலே பலரும் பலருடனும் பலவிதமாகப் […]

Categories
கருத்து சிறுகதை

தவிப்பும், தன்னம்பிக்கையும் தந்த தருணம்.

படித்ததில் பிடித்துப் பகிர்ந்தது. நமது ஆசிரியர்கள் எழுதியதல்ல. எழுதியவர் யார் என்பது தெரியவில்லை. அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளும் , வாழ்த்துகளும். கொலம்பியா பல்கலைக்கழகம். கணித பேராசிரியர் பாடத்தை துவக்கினார். பாடத்தை துவக்கிய சில நிமிடங்களிலேயே அந்த மாணவனுக்கு உறக்கம் கண்களை சொக்கிக் கொண்டு வந்தது. அவனையும் அறியாமல் உறங்கினான். திடீரென மற்ற மாணவர்களின் சலசலப்பு சத்தம் கேட்டு கண் விழித்தான். கணித வகுப்பு முடிந்து பேராசிரியர் வெளியேறி இருந்தார். உறங்கியதை நினைத்து வெட்கப்பட்டுக் கொண்டே கரும்பலகையைப் […]

Categories
கருத்து சிறுகதை

டோரா புஜ்ஜி – சொன்ன கதை.

மிகப்பெரிய கதைகளை எப்போதும் தேடித் தேடிப் படிக்கத் தேவையில்லை. மிகச்சிறிய விஷயங்களிலருந்தே வெளிக்கொணரலாம். அதுபோலத்தான் இன்று ஒரு கதை என் மூளைக்குள் சிந்தனையைத் தூண்டியது. கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் வீட்டில் பொழுதோடு சுட்டி டிவியும் கார்ட்டூன் சேனல்களும் தான். அப்படி இன்று ஓடிக்கொண்டிருக்க, அதில் வந்த டோரா புஜ்ஜி என்ற வகையிலான கார்ட்டூனில் ஒரு சின்ன பகுதியைக் காண நேர்ந்தது. இப்ப நாம எல்லாம் ஒரு கதை படிக்கலாம் ப்ரெண்ட்ஸ். அது மூனு பன்னிங்கள பத்தின […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

பொறுப்பில்லா சில ஊடகங்கள்.

ஊடகங்கள் என்பது நீதித்துறை போல நாட்டின் மிகப்பெரிய தூண். ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் சக்தியும், வெளி உலகிற்கு வெளிப்படுத்தும் தன்மையும் ஊடகத்தைச் சார்ந்தது தான். அதுவும் இன்றைய நிலையில், ஆனையைப் பூனையாகவும், பூனையை ஆனையாகவும் மாற்றும் சக்தி ஊடகங்களுக்கு இருக்கிறது. ஒரு கட்சி, ஒரு சினிமா, ஒரு தனிப்பட்ட நபர் என்று அனைவரின் மீதும் அனைத்தின் மீதும் தாக்கத்தை உருவாக்கும் திறனுடையது ஊடகம். அப்படிப்பட்ட ஊடகங்களில் வேலை செய்யும் ஆட்கள் […]

Categories
கருத்து சிறுதுணுக்கு

உண்மை சுடுமெனில்?

உண்மை சுடுமெனில்? பொய் சொல்வது தவறில்லையே? வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல். என்ற வள்ளுவனின் வாக்கைக் கருத்தில் கொள்ளலாமே! சில நேரங்களில் உண்மையை விட பொய் சிறப்பு என்பதை விளக்கும் குறள் தானே இது? திருக்குறளையே எத்தனை முறை தான் உதாரணமாகச் சொல்வது என்றால், வேறு சிலவற்றை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாமே! கண்ணு உனக்கென்னடா ராசா? நீ பாக்க ராசா மாதிரி இருக்க என்று தன் பிள்ளைகளைப் பார்த்து சொல்லும் பெற்றோர்களின் கூற்று பல இடங்களில் […]