Categories
இலக்கியம் தமிழ்

கம்பனின் கைவண்ணம்

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்று படித்திருக்கிறோம். கம்பனின் கற்பனையையும், உவமைகளையும், படித்திறாத, பாரட்டிடாத தமிழ்ப் புலவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட கம்பனின் கவித்திறனுக்கு விளக்கமாக இன்று தினசரியில் ஒரு தலையங்கம் வாசித்தேன்.அதை எல்லோருக்கும் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அந்த கட்டுரையில் இல்லலாத சில தகவல்களையும் தேடிச் சேர்த்து இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. கம்பராமாயணத்தின் பால காண்டத்தில் கோசலை நாட்டின் வளத்தைப் பற்றிய ஒரு பாடல். பொதுவாக உறங்குதல்,அதாவது தூங்குதல் என்பது சோம்பேறித்தனமாகத்தான் உவமைப்படுத்தப்படுகிறது. அதுவும் […]

Categories
ஆன்மீகம்

சிவாலய ஓட்டம்

சிவாலய ஓட்டம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கு ஓடி, ஓடியே தரிசனம் செய்யும் ஒரு பாரம்பரிய முறை. இப்போது நடந்தோ ,ஓடியோ தரிசிக்க முடியாதவர்கள், இருசக்கர வாகனங்களிலோ, பெரிய வாகனங்களிலோ சென்று தரிசிப்பதையும் வழக்கமாக்கி விட்டனர். இந்த சிவாலய ஓட்டம் சிவராத்திரிக்கு முந்தைய நாள் துவங்கி, சிவராத்திரி அன்று முடிவடைகிறது.சரியாக 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 110 கிமீ நடந்தோ அல்லது ஓடியோ பயணித்து இந்த பணிரெண்டு சிவாலயங்களையும் தரிசிக்கிறார்கள். இந்த ஓட்டத்தின் போது […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

ஒரு குடிமகனின் கருணை மனு.

இப்படியும் ஒரு நிகழ்வு. அந்த நிகழ்விலிருந்து உருவாக்கப்பட்ட கற்பனை கட்டுரை. ஒரு கிராம மக்கள் எழுதும் மனு. ஐயா, வணக்கம். இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று சொல்லத்தான் விருப்பம். ஆனால் எங்கள் கிராமத்திற்கே ஒளி தந்த மின்சார ட்ரான்ஸ்பார்மரை திருடிய அந்த இந்தியனைக் காவல்துறையோ, அரசோ கண்டுபிடித்திருந்தால் பெருமையோடு சொல்லியிருப்பேன், “நான் இந்தியன்” என்று. சரி போனால் போகட்டும், ட்ரான்ஸ்பார்மரைத் திருடியவனைப் பிறகு பார்க்கலாம். ஆனால் அந்த ட்ரான்ஸ்பார்மர் மூலமாக மின்சாரம் பெற்ற கிராமத்தைப் பார்க்கலாம் […]

Categories
இலக்கியம் சினிமா தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள் நேர்காணல்

சர்பட்டா பரம்பரை, தங்கலான் பட ஆடை வடிவமைப்பாளருடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்.

சினிமாத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகக் கலக்கிக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் இளம் கலைஞர் மற்றும் நமது இனிய நண்பரான திரு.ஏகன் ஏகாம்பரம் அவர்கள் தம்முடைய ஓயாத அலுவலுக்கு மத்தியிலும் நமக்காக பிரத்யேகமாக, நம்முடைய கேள்விகளுக்கு புலனச் செய்தியின் வழியாக குரல் பதிவாக பதில் அனுப்பியிருந்தார். அதை நம் வாசகர்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது அவர் ஹைதராபத் நகரில் தங்கியிருந்து ராம்சரண் படத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய கட்டுரை ஏற்கனவே நம்முடைய பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறோம். அதன் […]

Categories
சினிமா தமிழ்

வேட்டையன்- வச்ச குறி தப்பவில்லை- சினிமா விமர்சனம்

கதை மற்றும் திரைக்கதை பற்றிய முழு வெளிப்பாடும் இல்லாவிட்டாலும், சில பாராட்டுதலுக்காவும், சில விமர்சனங்களுக்காகவும் ஆங்காங்கே சிலவற்றை வெளிப்படுத்த உள்ளோம். சினிமா பார்க்காதவர்கள் கவனத்துல் கொள்ளவும். முதலில் இந்தப்படத்திற்கு ஏன் எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றன என்பதே புரியவில்லை.படம் பார்ப்பதற்கே நான் ஒரு எதிர்மறை நோக்கத்துடன் தான் சென்றேன். ஆனால் ஏமாற்றமோ, மோசமோ இல்லை. சராசரிக்கு மேற்பட்ட வகை படம் என்றே குறிப்பிடலாம். படத்தின் முன்னோட்டத்தில் காட்டப்பட்டது போல, படத்தில் கதாநாயகன் ஒரு அதிரடி காவல் கண்காணிப்பாளர். என்கவுண்டர் […]

Categories
குட்டி கதை தமிழ் தற்கால நிகழ்வுகள்

உருவகக் கதை: தவெக தலைவருக்கு வந்த சோதனை

இன்றைய நாட்களில் மீம்கள் என்ற வகையிலான கேலி உருவகங்கள் அதிகப்படியான மக்களால் விரும்பப்படுகிறது. ஒரு திரைப்படத்தின் பிரபலமான காட்சியை வேறொரு நிகழ்வுக்கு உருவகப்படுத்தி கேலி செய்வது நடைமுறை. முன்பும் இது போன்ற கேலி செய்யும் வழக்கம் இருந்தது. ஆனால் அது கேலிச் சித்திரங்களாகவோ அல்லது எழுத்து வடிவிலோ இருந்தது. உதாரணமாக பாரதியார் நடத்திய இதழில் கேலிச்சித்திரங்கள் பிரபலம். சமீபத்திய இந்து பத்திரிக்கை வரை நாம் அதைக் கண்டிருக்கலாம். அதேபோல, துக்ளக் என்ற வார இதழில் சோ அவர்கள் […]

Categories
கருத்து சிறுகதை தமிழ்

மருந்தை விட்டது போகட்டும், வாழப்பழத்தையும் விட்டுட்டான்!

நமது வாழ்வியல் எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போலத்தான் மருத்துவ தேவைகளும் அமையும் என்பதை மறந்து சிலர், “நான் மருந்து மாத்திரைகளைத் தவிர்த்து வாழ்ந்து வருகிறேன்”, அல்லது “மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாழ முயற்சி செய்கிறேன்” என்று கூறி வாழ்வியலையும் மாற்றிக் கொள்ளாமல் இறுதியில் பெரிய தாக்கங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. அதை ஒரு உரையாடலாக பதிவிடுகிறோம்.இதில் சிறிது கற்பனை, மீதி உண்மை. (டூட் என்பது dude என்ற ஆங்கிலச் சொல்லை குறிக்கிறது. Dude என்பது கவலையில்லாமல் சுற்றும் […]

Categories
கருத்து தமிழ்

கருத்து: கற்பனை உலகின் திறவுகோல், வாசிப்பு

ஒரு பொருளை நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்ளும் போது இல்லாத ஒரு விஷயம், அதை ஒருவரிடமிருந்து செவி வழியே கேட்கும் போது இருக்கும்.

அது நமது கற்பனைத்திறன்.